search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் வருஷாபிஷேக விழா
    X

    வருஷாபிஷேக விழாவில் கோவில் கோபுர கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்ட காட்சி.

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் வருஷாபிஷேக விழா

    • குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
    • முத்துமாலை அம்மனுக்கு அபிஷேகம், புஷ்ப அலங்காரத்தில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா நடை பெற்றது.

    புனிதநீர்

    இதையொட்டி நேற்று காலை கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள், கோமாதா பூஜை நடை பெற்றது. அதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து கோவில் கோபுர கலசத்தின் மீது பூசாரிகள் ராமஜெயம், ஆதிநாராயணன் அகியோர் தலைமையில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது.

    அதன்பின் விநாயகர், அம்மன், நாராயணர், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

    முத்துமாலை அம்மன்

    முத்துமாலை அம்மனுக்கு அபிஷேகம், புஷ்ப அலங்காரத்தில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு பூஜையை தொடர்ந்து மதியம் அன்னதானம் நடை பெற்றது.வருஷாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் குரங்கணி 60 பங்கு நாடார்கள், ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×