search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thanjavur"

    • தஞ்சையில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • கல்லூரி மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேரணியாக புறப்பட்டனர்.

    தஞ்சாவூர்:

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தஞ்சை ரெயிலடியில் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த பேரணியை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் கல்லூரி மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேரணியாக புறப்பட்டனர். பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், மண் வளம் காப்போம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பல்வேறு முக்கிய இடங்கள் வழியாக சென்று அரண்மனையில் முடிவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், டாக்டர் சிங்காரவேலு, மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தஞ்சையில் பல நாட்களாக தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றபட்டது.
    • மாநகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் என்.கஸ்தூரி தலைமையில் மேற்கண்ட இடங்களில் தூய்மை பணியாளர்கள் சுகாதார பணி மேற்கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி 34-வது வார்டு சீனிவாசம்பிள்ளை சாலை பகுதியில் ஒரு காம்ப்ளக்ஸ் பின்புறம் சில இடங்களில் குப்பைகள் பல நாட்களாக சூழ்ந்து காணப்பட்டது.

    மேலும் கழிவுநீர் வாய்க்கால் மேல்புறம் செடி கொடிகள் படர்ந்து புதர்போல் காட்சியளித்தது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.

    இதையடுத்து மாநகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் என்.கஸ்தூரி தலைமையில் மேற்கண்ட இடங்களில் தூய்மை பணியாளர்கள் சுகாதார பணி மேற்கொண்டனர்.

    செடி, முட்புதர்களை வெட்டி அப்புறப்படுத்தி கழிவுநீர் அதற்குரிய வழிகளில் தடையில்லாமல் ஓட விடப்பட்டது. தேங்கியிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. இதனால் தற்போது அந்த இடம் சுத்தமாக காட்சியளிக்கிறது.

    • சரபோஜி மார்க்கெட்டில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு மாநகராட்சி நிர்வாகத்தால் ஏலம் விடப்பட்டு கட்டிடம் இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
    • டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., தஞ்சை மாமன்ற துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சரபோஜி மார்க்கெட்டில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு மாநகராட்சி நிர்வாகத்தால் ஏலம் விடப்பட்டு கட்டிடம் இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

    இதில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., தஞ்சை மாமன்ற துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கு கவுன்சிலர்கள் நீலகண்டன்,காந்திமதி நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் சரபோஜி மார்க்கெட் சங்க தலைவர் சுதாகர் மற்றும் பொறுப்பாளர்கள் கனி ஸ்ரீநாத், சண்முகநாதன், சிவா, மணிகண்டன் மற்றும் சரபோஜி மார்க்கெட்டின் கடை உரிமையாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • திருக்காட்டுப்பள்ளியில் புறவழிச்சாலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • மாவட்ட தேர்தல் அதிகாரியாக மேலிடப்பார்வையாளர் அபிலேஷ் நாயர் கலந்து கொண்டு விரைவில் நடைபெற உள்ள காங்கிரஸ் உட்கட்சி தேர்தலை சிறப்பாக நடத்த வேண்டும் என்று கூறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டாரத்தலைவர்கள் கூட்டம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் நடைபெற்றது.

    முன்னதாக மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. பேராவூரணி சிங்காரம், மாநில துணைத்தலைவர் பண்ணவயல் ராஜாதம்பி, மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மகேந்திரன், குணாபரமேஸ்வரி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கண்டிதம்பட்டு ஆர்.கோவிந்தராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அதிகாரியாக மேலிடப்பார்வையாளர் அபிலேஷ் நாயர் கலந்து கொண்டு விரைவில் நடைபெற உள்ள காங்கிரஸ் உட்கட்சி தேர்தலை சிறப்பாக நடத்த வேண்டும் என்று கூறி தேர்தல் நடத்தும் முறைகளை விளக்கி கூறினார்.

    நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை வைரக்கண்ணு, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபு மண்கொண்டார், முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜே.ஆர்.சுரேஷ், மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட விவசாயப்பிரிவு தலைவர் சீனிகருப்பையா, மாவட்ட நிர்வாகிகள் கறம்பேயம் சக்திவேல், முருகையன், ரெங்கநாதன், சம்பத் வாண்டையார், சுவேதா ஞானப்பிரகாசம், பட்டுக்கோட்டை நகரத்தலைவர் ரவிக்குமார், மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் நாகூர்கனி, மாவட்ட ஓ.பி.சி தலைவர் பிரபு சந்தோஷ்குமார், மாவட்ட வர்த்தக அணி தலைவர் சுப்புதங்கராஜ், பின்னையூர் ரவிச்சந்திரன், வட்டாரத்தலைவர்கள் ரவிச்சந்திரன், நாராயணசாமி, ஐயப்பன், முத்து, கோவி.செந்தில், இப்ராஹிம்ஷா, அன்பழகன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில், வருகிற 2024-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்க கடுமையாக உழைக்க வேண்டும், திருக்காட்டுப்பள்ளியில் புறவழிச்சாலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மேட்டூர் அணையிலிருந்து தற்பொழுது விவசாயத்திற்கு முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் எந்தவிதமான நிபந்தனையுமின்றி விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுப்பதோடு உரங்கள் மான்ய விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமுலாக்கத்துறையின் மூலம் பொய் வழக்கு தொடுக்கும் மத்திய அரசை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான கலை போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் குரலிசை கருவி, இசை, பரதநாட்டியம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ. 6000-ம், இரண்டாம் பரிசு ரூ.4500-ம், மூன்றாம் பரிசு ரூ. 3500-க்கான காசோலையை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான கலை போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் குரலிசை கருவி, இசை, பரதநாட்டியம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.

    இப்போட்டியில் 105 பேர் கலந்து கொண்டனர். குரலிசை போட்டியில் சங்கீதப்பிரியா முதலிடம் பிடித்தார். இரண்டாமிடம் கமிர்லானி, மூன்றாமிடம் ஜெயஸ்ரீதேவியும் பிடித்தனர். இதேப்பபோல் பரதநாட்டியம் போட்டியில் முதலிடம் லக்சா சிவகுமார், இரண்டாமிடம் தேவிபிரியா, மூன்றாமிடம் ஜான்சிபெசியா, கருவியிசை போட்டியில் முதலிடம் சிவச்சந்திரன், இரண்டாமிடம் கீர்த்தனா, மூன்றாமிடம் ச இந்திரஜித், கிராமிய நடனம் போட்டியில் முதலிடம் மோசஸ் , இரண்டாமிடம்நாகார்ஜுன், மூன்றாமிடம் விஷாலிபிரியா, ஓவிய போட்டியில் முதலிடம்அபினேஷ், இரண்டாமிடம்அல்காலிக், மூன்றாமிடம் மனோஜ் ஆகியோர் பெற்றனர்.

    இந்த 15 வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ. 6000-ம், இரண்டாம் பரிசு ரூ.4500-ம், மூன்றாம் பரிசு ரூ. 3500-க்கான காசோலையை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மண்டலக் கலை பண்பாட்டு மையம் உதவி இயக்குனர் நீலமேகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரங்கராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
    பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கி.பி.1004ம் ஆண்டு கட்டத்தொடங்கி 1010-ம் ஆண்டு கட்டி முடித்தார். மாமன்னன் ராஜராஜன் காலத்தில் பெரியகோவிலில் நடந்த திருவிழாக்கள் பற்றி கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரியகோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சாமி புறப்பாடு நடைபெற்றது. மேலும் பரதநாட்டியமும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. தேர் இருக்கும் இடமான மேலவீதியில் கடந்த 7-ந் தேதி தேர் அலங்காரம் செய்யப்பட்டதையடுத்து பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. நேற்று முதலே தஞ்சை மாவட்டம் மட்டுமில்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் தஞ்யில் குவிந்தனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. இதுமட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தேரோட்டத்தை காண அதிகளவில் வந்தனர்.

    தேரோட்டத்தையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு பெரியகோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர்கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக முத்துமணி அலங்கார சப்பரத்தில் புறப்பட்டு தேர் மண்டபத்தை வந்தடைந்தனர். பின்னர் தியாகராஜர்- கமலாம்பாள் மட்டும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதற்காக 16½ அடி உயரத்துடன் 40 டன் எடை கொண்ட 3 அடுக்குகள் கொண்ட தேரில் பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தியாகராஜருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து காலை 6.15 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. மாவட்ட கலெக்டர் அண்ணாத்துரை, போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே ஆகியோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் மேலவீதியில் இருந்து பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி புறப்பட்டது. பக்தர்கள் ‘‘ஓம் நமச்சிவாய’’ என்ற கோ‌ஷங்களை எழுப்பியபடி தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். அப்போது மங்கள வாத்தியங்கள், கரகாட்டம், குச்சிப்புடி, தப்பாட்டம், செண்டை வாத்தியங்கள் இசைக்கப் பட்டன.

    தஞ்சை மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு ராஜவீதி ஆகிய 4 ராஜ வீதிகளிலும் தேர் வலம் வந்தது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக மேலராஜவீதியில் 3 இடங்களிலும், வடக்கு ராஜ வீதியில் 4 இடங் களிலும், கீழராஜ வீதியில் 4 இடங்களிலும், தெற்குராஜ வீதியில் 3 இடங்களிலும் தேர் நிறுத்தப்பட்டது.

    பக்தர்கள் பய பக்தியுடன் சாமி தரிசனம் செய்து சாமிக்கு மாலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொடுத்தனர். பின்னர் மதியம் 11.45 மணிக்கு தேர் நிலை மண்டபத்தை வந்த டைந்தது.

    இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளி நாட்டினர் என லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தஞ்சை நகரமே இன்று விழாக்கோலம் பூண்டது. போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவுப்படி பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.
    அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தஞ்சாவூர் தொகுதியில் ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. #NRNatarajan #ThanjavurLSseat #TMCcandidate #Thanjavurcandidate #Auto
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சந்திக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக எஸ்.எஸ். பழனிமாணிக்கம் நிறுத்தப்பட்டுள்ளார். 

    இதற்கிடையே, தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார். தமாகா கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.



    இந்நிலையில், தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள என் ஆர் நடராஜனுக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இரண்டு இடங்களில் போட்டியிட்டால் மட்டுமே சைக்கிள் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டதில் மகிழ்ச்சிதான் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். #NRNatarajan #ThanjavurLSseat  #TMCcandidate #Thanjavurcandidate #Auto
    மகரசங்கராந்தி விழாவையொட்டி தஞ்சை பெரியகோவிலில் நந்திபெருமானுக்கு 1 டன் காய்-கனி, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
    தஞ்சை பெரிய கோவிலில் மிகப்பெரிய நந்திபெருமான் சிலை உள்ளது. நந்திபெருமானுக்கு மகரசங்கராந்தி விழா பொங்கல் பண்டிகை தினமான நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதையொட்டி பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது.

    மாட்டு பொங்கல் பண்டிகையான நேற்று பக்தர்கள், வியாபாரிகளால் வழங்கப்பட்ட உருளைகிழங்கு, கத்தரிக்காய், சவ்சவ், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், பாகற்காய், கேரட், மிளகாய், வெண்டைக்காய், பீட்ரூட் போன்ற பல்வேறு வகையான காய்கறிகளாலும், ஆரஞ்சுப்பழம், வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, கொய்யா, அன்னாசிப்பழம் போன்ற பலவகையான கனிகளாலும், முறுக்கு மற்றும் பால்கோவா போன்ற பல்வேறு வகையான இனிப்புகளாலும், மலர்களாலும் நந்திபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மொத்தம் 1 டன் காய்-கனிகள், மலர்கள், இனிப்புகளால் நந்திபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    மாட்டுப்பொங்கலையொட்டி தஞ்சை பெரியகோவிலில் 108 பசுகளுக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் 108 பசுகளுக்கு பூஜை நடைபெற்றது. நந்தி பெருமான் சிலை முன்பு பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, மாடுகள் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுதுணி போர்த்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்து சிறையில் அடைப்போம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்தார். #DMK #MKStalin #JayalalithaaDeath
    தஞ்சை:

    தஞ்சை மாவட்டம்  மாதாகோட்டை ஊராட்சி சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    ஆட்சி மாற்றம் வரவேண்டும் என நம்மை விட மக்களுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலோ அல்லது உள்ளாட்சி தேர்தலோ வரலாம்.  தமிழகத்தின் அவல நிலைக்கு காரணமான அ.தி.மு.க.-பா.ஜ.க. அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரமிது.

    கருணாநிதி மருத்துவமனையில் இருந்தபோது உடல்நிலை குறித்து முறையாக அறிக்கை கொடுத்தது தி.மு.க. 



    ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது உடல்நிலை குறித்து தெளிவான அறிக்கைகள் வழங்கப்படவில்லை. ஜெயலலிதா மறைவில் மர்மம் உள்ளது. அதற்கு யார் காரணம் என்றாலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களை சிறையில் அடைப்போம்.

    நாம் நினைப்பவர்கள் பிரதமராக வந்தால்தான் தமிழகத்திற்கு தேவையானதைப் பெறமுடியும். மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அது தி.மு.க.வுக்கு தொடக்கப் புள்ளியாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். #DMK #MKStalin #JayalalithaaDeath
    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் தற்போது மதுரை, தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaStorm
    சென்னை:

    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் தற்போது மதுரை, தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் விடிய, விடிய  மழை பெய்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேனியில் இரவு நேரங்களில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சற்று முன் கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

    கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால், மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறை அளித்து ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

    மேலும் நாகை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #GajaStorm
    கஜா புயல் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.#GajaStorm
    அரியலூர்:

    கஜா புயல் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் விடிய, விடிய  அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

    சற்று முன் கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

    கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால், மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.

    இதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #GajaStorm
    கஜா புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.#GajaStorm
    சிவகங்கை:

    கஜா புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

    கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #GajaStorm
    ×