என் மலர்
உள்ளூர் செய்திகள்

பயன்பாட்டுக்கு வந்த சரபோஜி மார்க்கெட்
- சரபோஜி மார்க்கெட்டில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு மாநகராட்சி நிர்வாகத்தால் ஏலம் விடப்பட்டு கட்டிடம் இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
- டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., தஞ்சை மாமன்ற துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சரபோஜி மார்க்கெட்டில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு மாநகராட்சி நிர்வாகத்தால் ஏலம் விடப்பட்டு கட்டிடம் இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., தஞ்சை மாமன்ற துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு கவுன்சிலர்கள் நீலகண்டன்,காந்திமதி நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சரபோஜி மார்க்கெட் சங்க தலைவர் சுதாகர் மற்றும் பொறுப்பாளர்கள் கனி ஸ்ரீநாத், சண்முகநாதன், சிவா, மணிகண்டன் மற்றும் சரபோஜி மார்க்கெட்டின் கடை உரிமையாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Next Story