search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தஞ்சை பெரியகோவிலில் உள்ள மகா நந்திக்கு 1 டன் காய்-கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்த காட்சி.
    X
    தஞ்சை பெரியகோவிலில் உள்ள மகா நந்திக்கு 1 டன் காய்-கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்த காட்சி.

    தஞ்சை பெரியகோவிலில் நந்திபெருமானுக்கு 1 டன் காய்-கனி, மலர்களால் அலங்காரம்

    மகரசங்கராந்தி விழாவையொட்டி தஞ்சை பெரியகோவிலில் நந்திபெருமானுக்கு 1 டன் காய்-கனி, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
    தஞ்சை பெரிய கோவிலில் மிகப்பெரிய நந்திபெருமான் சிலை உள்ளது. நந்திபெருமானுக்கு மகரசங்கராந்தி விழா பொங்கல் பண்டிகை தினமான நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதையொட்டி பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது.

    மாட்டு பொங்கல் பண்டிகையான நேற்று பக்தர்கள், வியாபாரிகளால் வழங்கப்பட்ட உருளைகிழங்கு, கத்தரிக்காய், சவ்சவ், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், பாகற்காய், கேரட், மிளகாய், வெண்டைக்காய், பீட்ரூட் போன்ற பல்வேறு வகையான காய்கறிகளாலும், ஆரஞ்சுப்பழம், வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, கொய்யா, அன்னாசிப்பழம் போன்ற பலவகையான கனிகளாலும், முறுக்கு மற்றும் பால்கோவா போன்ற பல்வேறு வகையான இனிப்புகளாலும், மலர்களாலும் நந்திபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மொத்தம் 1 டன் காய்-கனிகள், மலர்கள், இனிப்புகளால் நந்திபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    மாட்டுப்பொங்கலையொட்டி தஞ்சை பெரியகோவிலில் 108 பசுகளுக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் 108 பசுகளுக்கு பூஜை நடைபெற்றது. நந்தி பெருமான் சிலை முன்பு பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, மாடுகள் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுதுணி போர்த்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×