என் மலர்
நீங்கள் தேடியது "thiruvarur"
- கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
- வருகிற 23-ந்தேதி தஞ்சாவூரிலும், 24-ந்தேதி திருவாரூரிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சென்னை:
மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை.
கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளை வஞ்சித்து வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், தமிழ் நாட்டின் கோரிக்கைகளை உடனடியாக மறுபரிசீலனை செய்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்திட வேண்டும் என வலியுறுத்தியும் வருகிற 23-ந்தேதி தஞ்சாவூரிலும், 24-ந்தேதி திருவாரூரிலும் காலை 10 மணியளவில் 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி' சார்பில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்.
இவ்வாறு மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன.
- நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும்.
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கிய நிலையில், இந்த மாதத்தில் பருவமழை சற்று இடைவெளியைக் கொடுத்தது. தற்போது மீண்டும் வடகிழக்கு பருவகாற்று முழுவதுமாக தமிழகத்தில் வீசத் தொடங்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தென் இலங்கை மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, நேற்று இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என ஆய்வு மையம் கணித்திருக்கிறது.
இதன் காரணமாக இன்று முதல் வருகிற 19-ந்தேதி வரை தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழையும், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களிலும் மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும்.
நாளை கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்காலிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து அரசு ஊழியர்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்ற அம்மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை வருவாய், கூட்டுறவு, பொதுப்பணி, மின்வாரியம் உள்ளிட்ட துறைகளின் அரசு ஊழியர்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்ற வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
- நாகப்பட்டினம் பயணத்தை முடித்துக்கொண்டு விஜய் திருவாரூர் கிளம்பினார்.
- திருவாரூரில் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.
இன்று பிற்பகல் தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை தொடங்கினார். திருச்சி, அரியலூர் போலவே நாகப்பட்டினத்திலும் ரசிகர்கள், தொண்டர்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
நாகப்பட்டினம் பயணத்தை முடித்துக்கொண்டு விஜய் திருவாரூர் கிளப்பிய விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இந்நிலையில், திருவாரூரில் விஜய் பரப்புரை செய்யவுள்ள பகுதியில் கோவில் கோபுரத்தின் மீது தவெகவினர் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் தவெகவிரை கோயில் கோபுரத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.
- இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.
- நாகப்பட்டினம் பயணத்தை முடித்துக்கொண்டு விஜய் திருவாரூர் திரும்பியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.
இன்று பிற்பகல் தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை தொடங்கினார். திருச்சி, அரியலூர் போலவே நாகப்பட்டினத்திலும் ரசிகர்கள், தொண்டர்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
நாகப்பட்டினம் பயணத்தை முடித்துக்கொண்டு விஜய் திருவாரூர் திரும்பியுள்ளார்.
இந்நிலையில், திருவாரூக்கு வந்த விஜய்க்கு தொண்டர்கள் ஆரவாரம் அளித்தனர். மேலும், கிரேன் மூலம் விஜய்க்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் அளித்த மாலை மரியாதையை விஜய் ஏற்றுக்கொண்டார்.
- தற்சமயம் இந்தக் குறுவை நெற்பயிர்கள் சராசரியாக 40 நாட்கள் வயதுடைய இளம் பயிராக வளர்ந்துள்ளது.
- வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைப்பதற்கான வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருவாரூர்:
மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து ஆற்றில் வந்த நீரை வைத்து விவசாயிகள் நெல்நடவு செய்து, போதிய உரமிட்டு வளர்த்து எடுத்துள்ளனர். இதற்காக ஏக்கருக்கு சுமார் ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர்.
தற்சமயம் இந்தக் குறுவை நெற்பயிர்கள் சராசரியாக 40 நாட்கள் வயதுடைய இளம் பயிராக வளர்ந்துள்ளது.
இந்த சூழலில் நேற்று முன்தினம் மாலை தொடங்கி நேற்று மதியம் வரை பரவலாக மாவட்டம் முழுவதும் மழை பெய்தது.
பருவம் தவறிய இந்த மழையால் திருவாரூர் அருகே உள்ள பழையவலம், தென்ஓடாச்சேரி கானூர், கள்ளிக்குடி, அலிவலம் உள்பட மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது.
வயலில் தேங்கி உள்ள மழைநீரை வடிய வைக்க வடிகால்களும் முறையாக பராமரிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைப்பதற்கான வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதேநிலை தொடர்ந்தால் இளம் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைப்ப தற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போக்குவரத்துதுறை அமைச்சர் தவறான தகவல்களை தருகிறார்.
- தமிழகத்தின் கடன்சுமையை இந்த அரசு உயர்த்தி விட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள பிறவி மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சசிகலா மற்றும் அவரது தம்பி திவாகரன் ஆகியோர் சாமிதரிசனம் செய்ய வந்தனர்.
அவர்கள் 2 பேரும் கோவிலில் உள்ள சாமி சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தனர். அதன்பிறகு சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
போக்குவரத்துதுறை அமைச்சர் தவறான தகவல்களை தருகிறார். தற்போதைய அரசு பஸ்களில் மக்கள் ஏறுவதற்கே பயப்படுகின்றனர். அரசு பஸ்களின் நிலை மோசமாக தான் உள்ளது.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு கண்டிப்பாக இருக்கும். மாற்றம் கண்டிப்பாக இருக்கும். ஆளும் தி.மு.க. அரசு ரூ.8 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது. அதற்கு ஆண்டுதோறும் வட்டி கட்டி கொண்டிருந்தால் எப்படி மக்களுக்கான நலத்திட்டங்களை வழங்க முடியும். இவர்கள் வட்டி கட்ட முடியாமல் கடனுக்கு மேல் கடன் வாங்கி கொண்டே இருக்கிறார்கள். தமிழகத்தின் கடன்சுமையை இந்த அரசு உயர்த்தி விட்டது.
மேலும் இவர்கள் திட்டங்களை கொண்டு வந்து அதில் பெருமளவு கமிஷன் பெற்று கொள்கிறார்கள். அப்படி கமிஷன் பெறுவதால் ஒப்பந்ததாரர்களால் அந்த பணியை முடிக்க முடியவில்லை. பேரூராட்சிகளை நகராட்சிகளாக்கும் பணிகளில் இந்த அரசு மிக தீவிரமாக உள்ளது. பேரூராட்சிகளை நகராட்சியாக மாற்றிய பிறகு 3 மடங்கு, 4 மடங்கு வரிகட்டும் நிலை பொதுமக்களுக்கு ஏற்படும்.
தி.மு.க. அரசு ஒவ்வொரு பொதுமக்களின் வீட்டை தட்டி வரி வசூலிப்பதிலேயே குறியாக உள்ளது. சொத்துவரி, மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் தி.மு.க. அரசு உயர்த்திவிட்டது. இதனால் விலைவாசி அதிகமாக உயர்ந்து பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த தி.மு.க. அரசிடம் இருந்து தமிழக மக்களுக்கு விரைவில் விடிவுகாலம் பிறக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மின் கசிவு ஏற்பட்டு கடை முழுவதும் தீ பிடித்த எரிய தொடங்கியது.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் துர்காலயா சாலையை சேர்ந்த மகாலிங்கம் மகன் அசோக்குமார். இவர் எல்லையம்மன் கோவில் சன்னதி தெருவில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென கடையில் வைக்கப்பட்டிருந்த யு.பி.எஸ் பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டு கடை முழுவதும் தீ பிடித்த எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் மளமளவென பற்றி எரிந்தது.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர்.
இதில் பெரும்பாலான தங்க நகைகள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்ததால் தப்பித்தது. இருந்தாலும் கடை ராக்கரில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், பொருட்கள் தீயில் உருகி சேதமானது என்று நகைக்கடை உரிமையாளர் தெரிவித்தார்.
இந்த தீ விபத்து குறித்த புகாரின் பேரில் திருவாரூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சத்தம் காரணமாக அதிர்வும் ஏற்பட்டதால் வீட்டைவிட்டு மக்கள் வௌியேறினர்.
- மன்னார்குடி, கமலபுரம், வடபாதி மங்கலம் பகுதியில் சத்தம் உணரப்பட்டது.
திருவாரூரில் வானில் திடீரென ஒலித்த பலத்த சத்தத்தால் மக்கள் பீதியமடைந்துள்ளனர். சத்தம் காரணமாக அதிர்வும் ஏற்பட்டதால் வீட்டைவிட்டு மக்கள் வௌியேறினர்.
மன்னார்குடி, கமலபுரம், வடபாதி மங்கலம் பகுதியில் சத்தம் உணரப்பட்டது. சத்தம் கேட்ட அதே நேரத்தில் விமானமும் சென்றதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய விமானப்படை வீரர்கள் மேற்கொண்ட பயிற்சி காரணமாக சத்தம் எழுந்ததாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரனம் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், "பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்திய விமானப்படை பயிற்சியில் ஈடுபட்டனர்" என்றார்.
- தனது குடிசை வீட்டில் இதுவரை மின்சார வசதி இல்லாததால் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தான் படித்தேன்.
- மின்வசதி இல்லாத போது படித்ததை விட மேலும் சிறப்பாக இனிமேல் படிப்பேன் என்று மாணவி தெரிவித்தார்.
மின் வசதி இன்றி குடிசை வீட்டில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் படித்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவாரூர் மாவட்ட அளவில் 2ம் பிடித்த அரசுப்பள்ளி மாணவி துர்காதேவியின் வீட்டிற்கு இலவச மின்சார இணைப்பு வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வு எழுதிய பாலா மற்றும் சுதா தம்பதியின் மகளான துர்காதேவி 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் இடத்தையும் மாவட்ட அளவில் 2ம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவரது தந்தை பாலா மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.
மாணவி துர்கா தேவி கூறுகையில், "தனது குடிசை வீட்டில் இதுவரை மின்சார வசதி இல்லாததால் தொடர்ந்து சார்ஜர் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தான் படித்தேன். எனவே என்னுடைய வீட்டிற்கு மின்சார வசதி கொடுப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த தகவல் அறிந்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் நேரில் சென்று மாணவியின் வீட்டை ஆய்வு செய்தனர். பின்னர் மாணவியின் வீட்டின் முன் 3 மின்கம்பங்களை நட்டு மின் இணைப்பு தந்துள்ளனர்.
இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மாணவி, என்னுடைய நோக்கம் மருத்துவராக வேண்டும் என்பதுதான், மின்வசதி இல்லாத போது படித்ததை விட மேலும் சிறப்பாக இனிமேல் படிப்பேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
- அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யும் என ஏற்கனவே எச்சரிக்கை.
- தொடர்ந்து மழை பெய்து வருவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வும் தெரிவித்திருந்தது.
குறிப்பாக அடுத்த 4 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ரோபர்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் மாயனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரோபர்ட் (வயது 40). ஆட்டோ டிரைவர்.
இவர் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சுபலெட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். 8 மாதங்கள் குடும்பம் நடத்திய நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதையடுத்து சுபலெட்சுமி தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.இது தொடர்பாக ரோபர்ட்டுக்கும், சுபலட்சுமியின் அண்ணன் சிவநேசனுக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் இன்று காலை மாயனூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இறப்பிற்காக பிளக்ஸ் பேனர் வைக்கும் பணியில் சிவனேசன் அவரது நண்பர் கோபி உள்ளிட்ட 6 பேர் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ரோபர்ட்டுக்கும், சிவநேசனுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மற்றவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சிறிது நேரம் கழித்து ரோபர்ட் ஊராட்சி மன்றம் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது சிவநேசன், கோபி உள்ளிட்ட 6 பேர் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது தகராறு முற்றி சிவனேசன் உள்ளிட்ட 6 பேரும் சேர்ந்து ரோபர்ட்டை கத்தியால் குத்தி தலையில் கல்லை போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.இந்த தாக்குதலில் ரோபர்ட் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கரூண் கரட் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து ரோபர்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்த புகாரின் பேரில் வடபாதிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சிவனேசன் ,கோபி உள்ளிட்ட 6 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






