search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "boy death"

  • சிறுவர்கள் 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஒகேனக்கல்:

  தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன்-சவுந்தர்யா தம்பதியினர். இவருடைய மகன்கள் பவின் (வயது 10), சுதீப் (8) இவர்கள் 2 பேரும் ஊட்டமலை முனியப்பன் கோவில் அருகே உள்ள தடுப்பணை ஓடையில் விளையாடி கொண்டிருந்தனர்.

  அப்போது திடீரென அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்ப்பட்டது. இதனால் அந்த பகுதியில் இருந்த பெரியபாறை விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த சிறுவர்கள் 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே பவின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் சுஜித் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • தண்ணீர் தொட்டியை பார்த்த போது குகன்ராஜ் தண்ணீர் தொட்டிக்குள் மூச்சுபேச்சின்றி கிடந்தார்.
  • அஜாக்கிரதையாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

  வடவள்ளி:

  கோவை வேடபட்டி சாலை நாகராஜபுரம் அன்னை சத்தியா நகரை சேர்ந்தவர் கார்த்திக். கட்டிடத் தொழிலாளி.

  இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 6 வயதில் குகன்ராஜ் என்ற மகன் உள்ளார்.

  குகன்ராஜ், அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று குகன்ராஜ் வீட்டில் இருந்தான். மதியம் தனது தாயிடம் விளையாட செல்வதாக கூறிவிட்டு வீட்டின் அருகே சென்று குகன்ராஜ் விளையாடி கொண்டிருந்தான்.

  இந்நிலையில் விளையாட சென்ற சிறுவன் மாலை வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால், பெற்றோர் அதிர்ச்சியாகினர். அக்கம்பக்கத்தில் சிறுவனை தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

  இவர்களது வீட்டின் அருகே ஆரம்ப பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக அங்கு தண்ணீர் தொட்டி ஒன்றை அமைத்து தண்ணீர் நிரப்பி உள்ளனர். இந்நிலையில் அந்த தண்ணீர் தொட்டியில் சிறுவன் ஒருவன் மூழ்கி கிடப்பதாக பரவிய தகவலை அடுத்து, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். சிறுவனின் பெற்றோரும் அங்கு வந்தனர்.

  அவர்கள் தண்ணீர் தொட்டியை பார்த்த போது குகன்ராஜ் தண்ணீர் தொட்டிக்குள் மூச்சுபேச்சின்றி கிடந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர்கள், சிறுவனை தூக்கி கொண்டு, தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

  அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் அவரது பெற்றோர் கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

  இந்நிலையில் பள்ளி சுற்றுச்சுவரை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தண்ணீர் தொாட்டியை மூடாமல் சென்றதால் தான் குழந்தை இறந்ததாக கூறி சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று வாக்குவாதம் செய்தனர்.

  மேலும் அஜாக்கிரததையாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

  இதுபற்றி தகவல் அறிந்ததும் பேரூர் டி.எஸ்.பி. ராஜபாண்டியன், தொண்டாமுத்தூர் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர்.

  ஆனால் உறவினர்கள் உடலை எடுக்க விடமால், குழந்தை இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தினர். ஏராளமானோர் குவிந்ததால் பாதுகாப்புக்காக அங்கு அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

  தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அசாம் மாநிலத்தை சேர்ந்த அபூபக்கர் (19), மாலிக் குஷ்தூர் (29), ஷேக் ஆஸ்குத்கொமல் (25), அஸருதுல் இஸ்லாம் (30) ஆகிய 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • பெற்றோர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
  • பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பணகுடி:

  நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியை அடுத்த அழகிய நம்பி புரத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

  இவரது மனைவி வெண்சுபா. இவர்களுக்கு ஹரிஷ் இசை ரக்ஷன் (வயது5) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சிறுவன் ஹரிஷ் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

  தினமும் வீட்டின் பின்புறம் உள்ள மாடி படிக்கட்டுகளில் ஏறி, இறங்கி விளையாடுவது வழக்கம். இன்றும் விடுமுறையையொட்டி காலையில் சிறுவன் ஹரிஷ் மாடி படிக்கட்டில் ஏறி நின்று விளையாடி கொண்டிருந்தான்.

  அப்போது எதிர்பாராத விதமாக படிக்கட்டில் இருந்து சிறுவன் தவறி கீழே விழுந்தான். இதில் மயக்க மடைந்த ஹரிசை உறவினர்கள் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

  அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அவனது பெற்றோர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

  இது தொடர்பாக பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • இடிபாட்டில் சிறுவன் முகம்மது ஜூபைர் சிக்கி படுகாயம் அடைந்தான்.
  • மேல் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

  திருவனந்தபுரம்:

  கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பணப்புழா ஆலக்காடு வலியப்பள்ளி அருகே உள்ள கல்லடம் பகுதியை சேர்ந்த தம்பதி நாசர்-ஜூபைரியா. இவர்களது மகன் முகம்மது ஜூபைர்(வயது9).

  சிறுவன் முகம்மது ஜூபைர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று தனது வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தை நாசர் வெட்டி அகற்ற முயன்றார். அப்போது அந்த மரம் நாசர் வீட்டின் மீது விழுந்தது.

  அந்த இடிபாட்டில் சிறுவன் முகம்மது ஜூபைர் சிக்கி படுகாயம் அடைந்தான். இதையடுத்து அவன் அங்கிருந்து மீட்கப்பட்டு கண்ணூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். பின்பு மேல் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

  இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக இறந்தான். தந்தை வெட்டிய மரத்தில் சிக்கி மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

  • பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவன் அதிரதன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்,
  • போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தாம்பரம்:

  சென்னை பழைய பல்லாவரம் பெருமாள் நகரை சேர்ந்தவர் அன்பழகன் கூலி தொழிலாளி இவருடைய மனைவி ஜமுனா வீட்டு வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் அதிரதன் (வயது 12).

  அப்பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று அனைவரும் வேலைக்கு சென்ற நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் சிறுவன் அதிரதன் வீட்டில் தனியாக இருந்தான். அப்போது துணி காய வைப்பதற்காக பயன்படுத்தபடும் கயிற்றில் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாரதா விதமாக அவனது கழுத்தில் கயிறு மாட்டிகொண்டது அப்போது சுதாரித்துக் கொண்டு நிற்க முயன்ற போது கால் வழுக்கியதில் அதிரதன் கழுத்தில் கயிறு பலமாக இறுக்கியது.

  இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக மயக்க நிலையில் இருந்த அதிரதனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவன் அதிரதன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர், அவனது உடலை கைப்பற்றிய பல்லாவரம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • கழுத்து, இதயம், இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சிறுவன் உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது.
  • கேரளாவில் சுமார் 3 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

  திருவனந்தபுரம்:

  கேரளாவில் சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்களை தெருநாய்கள் கடித்து குதறும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது.

  இந்த நிலையில் கண்ணூர், முழப்பிலாங்காடு பகுதியை சேர்ந்த 11 வயதான மாற்று திறனாளி மாணவன் நிஹால் நிஷாத் நேற்று முன்தினம் விளையாடுவதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்பு நீண்ட நேரமாகியும் சிறுவன் வீட்டிற்கு திரும்பவில்லை.

  இதனால் உறவினர்கள் அவரை தேடி சென்றனர். பல இடங்களில் அவரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நிஹால் நிஷாத், அப்பகுதியில் உள்ள சாலையோரம் படுகாயங்களுடன் மயங்கி கிடப்பதை ஊர் மக்கள் பார்த்தனர். அவர்கள் சிறுவனை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

  அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், அவனை தெருநாய் கடித்து குதறி இருப்பதாக தெரிவித்தனர். இதில் கழுத்து, இதயம், இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சிறுவன் உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது.

  இதற்கிடையே தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு வந்த நிஹால் நிஷாத்தின் உறவினர்கள், சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இறந்துபோன சிறுவனின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு மகன் இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய பின்னரே சிறுவனின் உடல் அடக்கம் நடக்கும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

  கண்ணூர் சிறுவன் நிஹால் நிஷாத் தெருநாய் கடித்து இறந்தது குறித்து குழந்தைகள் நல கமிஷனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், இச்சம்பவம் குறித்து மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகத்திடம் அறிக்கை கேட்டுள்ளனர்.

  தெருநாய்கள் கடித்து நிஹால் நிஷாத் பலியான பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பும் இதுபோல 2 குழந்தைகளை தெருநாய்கள் கடித்த சம்பவம் நடந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அந்த 2 குழந்தைகளும் படுகாயங்களுடன் தப்பிவிட்டன. இப்போது நிஹால் நிஷாத் நாய் கடித்து இறந்திருப்பதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  கேரளாவில் சுமார் 3 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதில் சுமார் 32 ஆயிரம் நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் தெருநாய்களின் பெருக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

  இதனால் மனித உயிர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க விலங்குகள் நல சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். நாய்களுக்கு கருத்தடை செய்தால் மட்டும் போதாது அவற்றின் தொல்லையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

  • உயிரிழந்த சிறுவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.
  • மகனை இழந்து வாடும் தந்தை தண்டபாணி கண்ணீர் மல்க கூறும்போது குழந்தைகளை பெற்றோர் பத்திரமாகவும் அரவணைப்போடும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

  சென்னை:

  சென்னை சூளைமேடு பாரதியார் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் பிரசன்னா. 13 வயது சிறுவனான இவன் நேற்று மாலை தனது நண்பர்களோடு வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.

  அப்போது எங்கிருந்தோ காற்றாடி ஒன்று பறந்து வந்தது. அதனை பார்த்ததும் பிரசன்னாவும் அவனது நண்பர்களும் காற்றாடியை பிடிக்க ஓடினார்கள். அப்போது காற்றாடி மாடி ஒன்றில் போய் விழுவது போல சென்றது. இதையடுத்து பிரசன்னாவும் மற்ற சிறுவர்களும் மாடியில் ஏறிச்சென்று காற்றாடியை எடுக்க ஓடினார்கள். மாடிகளில் ஏறிச்சென்று காற்றாடியை எடுப்பதற்காக பிரசன்னா அப்பகுதியில் 2- வது மாடிக்கு சென்றான்.

  அப்போது பக்கத்து மாடியில் பறந்து கொண்டிருந்த காற்றாடியை சிறுவன் பிரசன்னா எடுக்க முற்பட்டான். இதில் அவன் எதிர்பாராத விதமாக 2- வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தான். இதில் பலத்த காயம் அடைந்த பிரசன்னாவை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் பிரசன்னா பரிதாபமாக உயிரிழந்தான்.

  இது பற்றி சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே உயிரிழந்த சிறுவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதன்படி அவனது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன.

  மகனை இழந்து வாடும் தந்தை தண்டபாணி கண்ணீர் மல்க கூறும்போது குழந்தைகளை பெற்றோர் பத்திரமாகவும் அரவணைப்போடும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அப்போதுதான் இதுபோன்ற இழப்புகளை தவிர்க்கமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

  • நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த நிலையில் சாமுவேல் திடீரென நீரில் மூழ்கி மாயமாகி விட்டான்.
  • சாலவாக்கம் போலீசார் உயிரிழந்த சிறுவன் சாமுவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  வாலாஜாபாத்:

  காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா, பழைய சீவரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய காலனி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் சாமுவேல் வயது 16. இவர் 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் நண்பர்கள் சிலருடன் பழையசீவரம் பாலாற்றில் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்றார். நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த நிலையில் சாமுவேல் திடீரென நீரில் மூழ்கி மாயமாகி விட்டான்.

  சாமுவேல் நீரில் மூழ்கி காணாமல் போனது குறித்து நண்பர்கள் ஓடிச் சென்று கிராமத்தில் தெரிவித்த நிலையில், கிராம மக்கள் ஓடி வந்து தடுப்பணையில் தீவிரமாக தேடினர். நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் சாமுவேல் உடலை மீட்டனர்.

  இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சாலவாக்கம் போலீசார் உயிரிழந்த சிறுவன் சாமுவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற மகேந்திரன் வீடு திரும்பவில்லை.
  • சிறுவன் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தென்காசி:

  தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள இரட்டைகுளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். அவரது மகன் மகேந்திரன்(வயது 17) பார்வை திறன் குறைபாடு உடையவர்.

  அவர் 8-ம் வகுப்பு முடித்துவிட்டு கிளி, புறா உள்ளிட்டவற்றை வளர்த்து வந்துள்ளார். மேலும் கிணறு, மரங்களில் இருக்கும் புறா உள்ளிட்டவற்றை எடுத்து வீட்டில் வைத்து வளர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

  இந்நிலையில் நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற மகேந்திரன் வீடு திரும்பவில்லை. இன்று அதிகாலை தேடிபார்த்தபோது அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் மகேந்திரன் இறந்து மிதந்துக்கொண்டிருந்தான்.

  உடனே சுரண்டை போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிறுவன் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • சரண்குமாரை பாம்பு கடித்ததால் பலியானதாக டாக்டர்கள் கூறினர்.
  • சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

  பெரியபாளையம்:

  திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கொசவன்பேட்டை ஊராட்சியைச் சேர்ந்த பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராஜகோபால் ஆவார். இவரது மகன் சரண்குமார்(வயது10). இச்சிறுவன் கவரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான்.

  இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் அருகே சிறுவன் சரண்குமார் விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த சரண்குமார் மயக்கமாக உள்ளது என தனது பெற்றோரிடம் கூறினான். உடனடியாக பெரியபாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், சென்னை குழந்தைகள் நல அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக கூறினர். மேலும், சரண்குமாரை பாம்பு கடித்ததால் பலியானதாக டாக்டர்கள் கூறினர். இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.