என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

கொசவன்பேட்டை ஊராட்சியில் பாம்பு கடித்து சிறுவன் பலி

- சரண்குமாரை பாம்பு கடித்ததால் பலியானதாக டாக்டர்கள் கூறினர்.
- சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கொசவன்பேட்டை ஊராட்சியைச் சேர்ந்த பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராஜகோபால் ஆவார். இவரது மகன் சரண்குமார்(வயது10). இச்சிறுவன் கவரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் அருகே சிறுவன் சரண்குமார் விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த சரண்குமார் மயக்கமாக உள்ளது என தனது பெற்றோரிடம் கூறினான். உடனடியாக பெரியபாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், சென்னை குழந்தைகள் நல அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக கூறினர். மேலும், சரண்குமாரை பாம்பு கடித்ததால் பலியானதாக டாக்டர்கள் கூறினர். இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.