search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "people panic"

    • சிறுத்தை உலா வருவதை கண்ட மக்கள் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
    • அக்கிராம மக்கள் ஊருக்குள் உலா வரும் சிறுத்தைகளை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, மான் காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் யானை, சிறுத்தை, புலி வனப்பகுதிகளை விட்டு வெளியேறி அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதும், விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகளை வேட்டையாடி வருவது வாடிக்கையாகி வருகின்றன. சில சமயம் யானை தாக்குதல்களால் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் சிறுத்தை உலா வருவதை கண்ட பொது மக்கள் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அப்பகுதியில் இருந்த கால் தடயங்களை ஆய்வு செய்து ஊருக்குள் உலா வருவது சிறுத்தையா? என கண்காணிக்கும் வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் கிராமம் கக்கரா குட்டையில் இருந்து கேத்தம்பாளையம் செல்லும் வழி சாலையோரம் 2 சிறுத்தைகள் உலா வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை உலா வரும் காட்சிகளை தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இதனைப்பார்த்து பீதி அடைந்த அக்கிராம மக்கள் ஊருக்குள் உலா வரும் சிறுத்தைகளை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,

    சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் கிராமம் கக்கரா குட்டையில் இருந்து கேத்தம்பாளையம் செல்லும் வழி சாலையோரம் 2 சிறுத்தைகள் உலா வருவது போன்று வீடியோ வெளியாகி உள்ளது. எனவே இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் வாகன ஓட்டிகள் இந்த பகுதியில் செல்லும் போது மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். இந்த பகுதிகளில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டால் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

    • ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள வடகாடு கிராமத்தில் 2 யானைகள் நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
    • யானைகளை வனப்பகுதிக்குள் நிரந்தரமாக விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள வடகாடு கிராமத்தில் 2 யானைகள் நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். மேற்குத்தொடர்ச்சி மலைக்கிராமத்தில் நேற்று மாலை 2 யானைகள் மலைப்பகுதியை விட்டு கீழே இறங்கி வந்ததை பார்த்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். யானைகளை ஒலி எழுப்பி விரட்டினார்கள்.

    இருந்தபோதிலும் இரவு நேரத்தில் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் மலைக்கிராம மக்களிடையே பீதி ஏற்ப்பட்டுள்ளது.வடகாடு மலைக்கிராமங்களில் அடிக்கடி யானைகள் நடமாட்டத்தினால் அச்சமடைந்துள்ளனர்.

    வனத்துறையினர் யானைகளை கடடுப்படுத்தவேண்டும் , வனப்பகுதிக்குள் நிரந்தரமாக விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாயர் சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.
    • கழிவுநீர் கால்வாய் பணிகள் நடைபெற்று வருவதால் பள்ளம் ஏற்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை பாண்டிபஜார் நாயர் சாலையில் இன்று காலை திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. சுமார் 10 அடி ஆழம், 6 அடி அகலத்துக்கு ஏற்பட்ட இந்த பள்ளத்தால் அந்த வழியாக சென்றவர்கள் பீதி அடைந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று பள்ளத்தை சுற்றி தடுப்புகளை அமைத்தனர்.

    இதனால் நாயர் சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. கழிவுநீர் கால்வாய் பணிகள் நடைபெற்று வருவதால் பள்ளம் ஏற்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற பள்ளம் ஏற்கனவே இந்த பகுதியில் ஏற்பட்டதாகவும், பின்னர் அது சரி செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். சாலையில் பள்ளம் ஏற்பட்டபோது வாகனங்களோ, பொது மக்களோ யாரும் அதில் சிக்காததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    • மூங்கிலாற்று பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு வேலை முடித்து திரும்பிய தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தில் புலிகள் நடமாட்டத்தை பார்த்துள்ளனர்
    • டைமுக் பகுதியில் புலி நடமாடியதால் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் பீதி அடைந்தனர்.

    கூடலூர்:

    கேரள-தமிழக எல்லையான குமுளி அருகே மூங்கிலாற்று பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு வேலை முடித்து திரும்பிய தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தில் புலிகள் நடமாட்டத்தை பார்த்துள்ளனர். இதுகுறித்து வண்டிபெரியாறு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் 5-ம் நம்பர் தேயிலை தோட்டம் அருகே மீண்டும் புலி நடமாடியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தை பார்வையிட்ட வனத்துறையினர் அங்கு காமிரா பொருத்தியுள்ளனர். இதன்மூலம் புலி நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்துள்ளனர்.

    ஏற்கனவே டைமுக் பகுதியில் புலி நடமாடியதால் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் பீதி அடைந்தனர். அந்த புலியை வனத்துறையினர்கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். எனவே தற்போது குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் புலியை விரைவில் பிடித்து வனப்பகுதியில் விடவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடலூர் வழியாக சென்று வருவதால் எந்நேரமும் போக்குவரத்து மிகுந்த மாநகரமாக இருந்து வருகின்றது.
    • சாலைகளில் மாடுகள் எந்தவித கட்டுப்பாட்டுகள் இன்றி சுற்றி திரிந்து வருகின்றன.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டத்தின் தலைநகராக கடலூர் இருந்து வருகின்றது.  மேலும் கடலூர் மாநகரில் பிரசித்தி பெற்ற கோவில்கள், கடலூர் சிப்காட் பகுதியில் பெரிய தொழிற்சாலைகள் மற்றும் அரசு தலைமை அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இது மட்டும் இன்றி சென்னையில் இருந்து நாகப்பட்டினம் செல்லக்கூடிய அனைத்து வாகனமும் கடலூர் வழியாக சென்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடலூர் வழியாக சென்று வருவதால் எந்நேரமும் போக்குவரத்து மிகுந்த மாநகரமாக இருந்து வருகின்றது.

    மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடலூர் பஸ் நிலையத்திற்கும் வருகை தந்து அங்கிருந்து மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் முக்கிய நகரப் பகுதிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், பஸ் நிலையம் ,செம்மண்டலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மாடுகள் எந்தவித கட்டுப்பாட்டுகள் இன்றி சுற்றி திரிந்து வருகின்றன. இதன் காரணமாக கடலூர் முக்கிய சாலைகளிலும், பஸ் நிலையத்திலும் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இது மட்டும் இன்றி எந்தவித கட்டுப்பாடும் இன்றி சாலையில் சுற்றி திரியும் மாடுகள் திடீரென்று நடந்து செல்பவர்கள் மீதும் வாகனங்களில் செல்பவர்கள் மீதும் முட்டுவதால் உயிர்பலி ஏற்படும் அபாயமும் நிலவி வருகின்றது. மேலும் சிறுவர், சிறுமிகள் அழைத்துவரும் பெற்றோர்கள் மாடுகளை பார்த்து பீதி அடைந்து செல்வதையும் காண முடிகிறது. சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் சாலை ஓரங்களில் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வதால் வியாபாரிகளுக்கும் கடும் நஷ்டம் ஏற்பட்டு வருகின்றது இதில் மிக முக்கியமாக சாலையில் செல்பவர்களை அடிக்கடி முட்டுவதும் , முட்டுவது போல் நெருங்கி செல்வதும் அனைத்து தரப்பு மக்களையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தி வருகின்றது ஆனால் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்கள் மாடுகளை வெளியில் சுற்றி திரிய வைத்து பின்னர் இரவு நேரங்களில் பாதுகாப்பாக தங்கள் மாடுகளை அழைத்து செல்வதையும் காணமுடிகிறது.

    இது சம்பந்தமாக கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, அனுமதி இன்றி சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் மற்றும் கால்நடைகளை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தும் எந்தவித அச்சமும் இன்றி கால்நடை உரிமையாளர்கள் பொதுமக்களை அச்சுறித்திவரும் மாடுகளை சாலைகளில் சுற்றி திரிய வைக்கின்றனர். ஆகையால் கடலூர் மாநகராட்சி அதிகாரிகள் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை உடனடியாக பறிமுதல் செய்து அதிகளவில் அபராத தொகை வசூல் செய்து சுற்றி தெரியும் மாடுகளை கட்டுப்படுத்த நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • காலை அர்ச்சகர் நடராஜன் கோவிலுக்கு பூஜை செய்வதற்காக வந்து பார்த்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • ரேடியோ செட், விநாயகருக்கு அணிவிக்க கூடிய பித்தளை பொருட்கள் உள்ளிட்டவைகள் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ 65 ஆயிரம் ஆகும்.

    கடலூர்,

    கடலூர் கோண்டூர் டி.என்பி.எஸ்சி. நகரில் விநாயகர் கோவில் உள்ளது இக்கோவிலில் நேற்று வழக்கம்போல் பூஜை முடித்துவிட்டு இரும்பு கேட்டை பூட்டிவிட்டு சென்றனர்  இன்று காலை அர்ச்சகர் நடராஜன் கோவிலுக்கு பூஜை செய்வதற்காக வந்து பார்த்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை காணவில்லை. மேலும் கோவில் உட்புறத்தில் மரக்கதவு இருந்தது. அதுவும் உடைந்து திறந்து இருந்தது. அதற்குள் சென்று பார்த்த போது ரேடியோ செட், விநாயகருக்கு அணிவிக்க கூடிய பித்தளை பொருட்கள் உள்ளிட்டவைகள் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ 65 ஆயிரம் ஆகும்.  இதனைத் தொடர்ந்து நகர் தலைவர் பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் கடலூர் புதுநகர் போலீசருக்கு தகவல் கொடுத்தனர் அதன் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கடலூர் பகுதியில் கடந்த 3 நாட்களில் 3 கடைகள் மற்றும் வீடுகளில் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் பணத்தை திருடியதும் நேற்று அதிகாலை ரோட்டில் நடந்து சென்ற நபரை 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கத்தியை காட்டி பணம் மற்றும் செல்போன் பறித்து சென்றனர்  மேலும் மற்றொருவரை கடுமையாக தாக்கி செல்போன் பறிக்கும் சமயத்தில் அவர் கூச்சலிட்டதால் மர்ம நபர்கள் தப்பி ஓடினர்   நேற்று நள்ளிரவு கடலூர் அருகே விநாயகர் கோவிலில் பூட்டை உடைத்து உண்டியல் மற்றும் பொருட்களை திருடி சென்ற சம்பவம் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது   லும் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நடைப்பயிற்சி மற்றும் சாலையில் செல்லும் பொதுமக்கள் தற்போது குறைந்த அளவில் செல்வதை காண முடிகிறது. எனவே கடலூர் மாவட்ட போலீசார் சிறப்பு கவனம் செலுத்தி இரவு நேரங்களில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும் கொள்ளை 

    • மர்ம நபர்கள் கதவை உடைத்து பீரோவில் இருந்த 20 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.
    • தொடர் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது பொதுமக்க ளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் பழைய கரூர் சாலை ஜி.எஸ். நகரை சேர்ந்தவர் ரவிசந்திரன் (வயது57). இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    நீண்ட நாட்களாக வீடு பூட்டப்பட்டு இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த 20 பவுன் நகை, வெள்ளி ெபாருட்கள் மற்றும் ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    நேற்று ஊர் திரும்பிய ரவிசந்திரன் வீட்டில் ்கொள்ளை போனது தெரிய வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன், தாலுகா இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது. ஆனால் மோப்பநாய் சிறிது தூரம் ஓடி யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

    திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக தனியாக இருக்கும் வீடுகளை நோட்ட மிட்டு கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. ரவுண்ட் ரோடு பகுதியில் நடைபயிற்சி சென்ற பெண்களிடம் நகை, செல்போன் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறின. போலீசாரின் தீவிர நடவடிக்கையால் தற்போது அவை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மீண்டும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது பொதுமக்க ளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், அதிக நாட்கள் வெளியூர் சென்றால் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்து விட்டு செல்லலாம். மேலும் கண்காணிப்பு காமிரா அவசியம் குறித்து பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டபோதும் பலர் அதனை பொருட்ப டுத்துவது இல்லை.

    கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டிருந்தால் கொள்ளையர்கள் குறித்து எளிதில் துப்பு துலங்கிவிடும் எனவே பொதுமக்கள் இதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றனர்.

    தைவானில் இன்று உள்ளூர் நேரடிப்படி மதியம் 1 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் தைபே மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன. #TaiwanEarthquake
    தைபே:

    தைவானில் இன்று உள்ளூர் நேரடிப்படி மதியம் 1 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் தைபே மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன. வீடு கள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

    ஹுயாலியன் நகரில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் பூமிக்கு அடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை. #TaiwanEarthquake
    ஆண்டிப்பட்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பரிதாபமாக பலியானார்.
    ஆண்டிப்பட்டி:

    தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர் கிராமப்பகுதியில் முகாமிட்டு சிகிச்சை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி பகுதியிலும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் ஆண்டிப்பட்டி மற்றும் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு படையெடுத்து வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி கீழஓடைத் தெருவை சேர்ந்த கனகராஜ் மனைவி மல்லிகா. கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்து வந்த மல்லிகா நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஆண்டிப்பட்டி பகுதியில் சுகாதார சீர்கேடு அதிகரித்துள்ளதாக பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் மல்லிகாவிற்கு பன்றி காய்ச்சல் இருந்ததாகவும் ஆனால் மருத்துவர்கள் வைரஸ் காய்ச்சல் என கூறியதாகவும் தெரிவித்தனர். அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதால் மர்ம காய்ச்சல் பரவுகின்றது.

    எனவே சுகாதாரத்தை மேம்படுத்த மருத்துவ குழுவினர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    தூத்துக்குடி அருகே மர்ம காய்ச்சலுக்கு 3‍ வயது பெண் குழந்தை பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
    தூத்துக்குடி:

    தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றி காய்ச்சல், வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகின்றன. பரவலாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 6 பேர் பலியாகினர். இதனால் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் தூத்துக்குடி அருகே மர்ம காய்ச்சலுக்கு 3 வயது பெண் குழந்தை பலியானதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டு உள்ள‌து. தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை அருகேயுள்ள கூட்டாம்புளியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது 3 வயது பெண் குழந்தை சரண்யா.

    நேற்று மாலை சரண்யா அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தாள். காலையில் அவளுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவளை அவரது பெற்றோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த‌னர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    ஏற்கனவே நேற்று முன்தினம் டெங்கு காய்ச்சலுக்கு முள்ள‌க்காட்டை சேர்ந்த கர்ப்பிணி பெண் சாந்தினி என்பவர் இறந்தார். இந்த நிலையில் மர்ம காய்ச்சலுக்கு 3‍ வயது பெண் குழந்தை பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதை தொடர்ந்து கூட்டாம்புளி உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள பிஜி தீவுகளில் இன்று அதிகாலை 6.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. #FijiIsland #FijiIsland
    பிஜிதீவுகள்:

    பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள பிஜி தீவுகளில் இன்று அதிகாலை 2.41 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    தெற்கு தீவுகளை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்தப்படி வீடுகளை விட்டு வெளியேறினர்.

    தெருக்களிலும், ரோடுகளிலும் ஓட்டம் பிடித்தனர். அங்கு 6.2 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. கடந்த ஆகஸ்டு 19-ந்தேதி பிஜி தீவுகளில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 8.2 ரிக்டரில் பதிவான இந்த நிலநடுக்கம் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

    பசிபிக் கடலில் நிலநடுக்க பாதிப்பு மிகுந்த நெருப்பு வளைய பகுதியில் பிஜி தீவு அமைந்துள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்களுடன் எரிமலை சீற்றமும் ஏற்படுகிறது. #FijiIsland #FijiIsland
    ×