சென்னை பாண்டிபஜாரில் சாலையில் 10 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்

நாயர் சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.கழிவுநீர் கால்வாய் பணிகள் நடைபெற்று வருவதால் பள்ளம் ஏற்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை பாண்டிபஜாரில் சாலையில் 10 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்
Published on

சென்னை:

சென்னை பாண்டிபஜார் நாயர் சாலையில் இன்று காலை திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. சுமார் 10 அடி ஆழம், 6 அடி அகலத்துக்கு ஏற்பட்ட இந்த பள்ளத்தால் அந்த வழியாக சென்றவர்கள் பீதி அடைந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று பள்ளத்தை சுற்றி தடுப்புகளை அமைத்தனர்.

இதனால் நாயர் சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. கழிவுநீர் கால்வாய் பணிகள் நடைபெற்று வருவதால் பள்ளம் ஏற்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற பள்ளம் ஏற்கனவே இந்த பகுதியில் ஏற்பட்டதாகவும், பின்னர் அது சரி செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். சாலையில் பள்ளம் ஏற்பட்டபோது வாகனங்களோ, பொது மக்களோ யாரும் அதில் சிக்காததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com