என் மலர்
நீங்கள் தேடியது "wild elephants"
- விடிய விடிய பீதியில் உறைந்த கிராம மக்கள்
- விளைநிலத்தில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தியது
குடியாத்தம்:
குடியாத்தம் வனப்பகுதி, ஆந்திர மாநில எல்லைப் பகுதியை ஒட்டியபடி உள்ளது.ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் கவுண்டன்யா யானைகள் சரணாலயம் உள்ளது. அந்த சரணாலயத்தில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது.
அந்த யானைகள் பல குழுக்களாகப் பிரிந்து தமிழக வனப்பகுதியில் உள்ள சைனகுண்டா, மோர்தானா, கொட்டமிட்டா, தனகொண்டபள்ளி, டி.பி. பாளையம், கொத்தூர், கதிர்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தன.
வனத்துறையினர் கடும் சிரமத்திற்கு இடையே கிராம மக்கள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்தும் மேளங்கள் அடித்தும் ஆந்திர மாநில வனப்பகுதிக்கு பல கிலோ மீட்டர் தொலைவுக்கு விரட்டிவிட்டனர்.
கடந்த சில மாதங்களாக யானைகள் தொல்லை சற்றே குறைந்திருந்தது, ஆங்காங்கே ஓரிரு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களைசேதப்படுத்தி வந்தது. விவசாயிகள் யானைகள் கூட்டம் குறைந்ததையடுத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டு வந்தனர்.
இந்நிலையில் குடியாத்தம் அடுத்த கொட்டமிட்டா கிராமத்தில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் இரண்டு குழுக்களாக தலா மூன்று என ஆறு யானைகள் கொண்ட கூட்டம் குடியிருப்பு பகுதியில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது அமாவாசை இருட்டு என்பதால் கிராம மக்கள் அருகே செல்ல அச்சமடைந்தனர் உடனடியாக இது குறித்து வனத்துறை ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.
இரவு 10 மணி வரை வனத்துறையினர் யாருமே கொட்டமிட்டா பகுதிக்கு வரவில்லை செல்போன் மூலம் தொடர்பு கொண்டாலும் போன் எடுப்பதில்லை எடுக்கும் ஓரிரு வனத்துறையினர் வருகிறேன் வருகிறேன் என்று கூறுவதாக கூறி விட்டு வரவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து அச்சமடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு மேளங்கள் அடித்து பட்டாசு வெடித்து குடியிருப்பு பகுதிக்கு நுழையா வண்ணம் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வனத்துறையினர் உரிய நேரத்திற்கு வந்து யானைகள் கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டி விடாததால் விவசாய நிலங்களுக்குள் புகுந்த யானைகளால் விவசாயிகளுக்கு பெருத்த சேதாரம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
யானைகள் வீடு அருகே நின்றதால் அச்சத்துடன் பொதுமக்கள் இரவை கழித்தனர்.
வேலூர் கலெக்டர் யானைகள் பிரச்சனையில் தனி கவனம் செலுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
யானைகளை விளைநிலங்களுக்குள் தடுக்க நடவடிக்கை எடுக்காத வனத்து றையினரை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரவு 10 மணிக்கு மேல் வனத்துறையினர் கொட்டமிட்டா பகுதிக்கு வந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்
அப்போதும் அந்த யானைகள் கூட்டம் கிராம மக்கள், வனத்துறை யினருக்கு போக்குக்காக காட்டி விட்டு பக்கத்தில் உள்ள மேல்கொல்லப்பல்லி கிராமத்திற்கு நுழைந்து ஏராளமான பயிர்களை நாசம் செய்ததாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
- மலை ரெயிலை மறித்து நின்ற காட்டு யானைகளால் ½ மணி நேர தாமதத்திற்கு பின் புறப்பட்டு சென்றது.
- வறட்சியின் காரணமாக வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி இடம் பெயர்ந்து வருகின்றன.
ஊட்டி,
நீலகிரி குன்னூர் குன்னூர் -மேட்டுப்பாளையம் ரெயில் பாதையில் மலை ரெயிலை மறித்து நின்ற காட்டு யானைகளால் ½ மணி நேர தாமதத்திற்கு பின் புறப்பட்டு சென்றது. ரெயில் பாதையில் காட்டு யானைகள் சமவெளிப் பகுதியில் தற்போது மழையில்லாமல் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்த வறட்சி வனப்பகுதியிலும் நிலவி வருகிறது. மேட்டுப்பாளையம் வனசரகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளிலிருந்து வறட்சியின் காரணமாக வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி இடம் பெயர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் 8-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குன்னூர் வனப்பகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றன. குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள பள்ளத்தாக்கு பகுதியில் அவற்றிற்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் உள்ளதால் அவை குட்டிகளுடன் மலைப்பாதையில் உலா வருகின்றன. மேலும் இவைகள் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முகாமிட்டு விவசாய தோட்டங்களையும் சேதப்படுத்தி வருகின்றன. மலை ரெயிைல வழிமறித்தது தற்போது குன்னூர் -மேட்டுப்பாளையம் மலை ரெயில் பாதையில் இந்த யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று காலை 3 யானைகள் மலைரெயில் பாதையில் ரன்னிமேடு ரெயில் நிலையம் அருகே நடமாடின. அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் நோக்கி வந்த மலை ரெயிலை இந்த யானைகள் மறித்தப்படி நின்றன. யானைகள் தண்டவாளத்தில் நின்றதால் மலை ரெயில் சற்று தொலைவில் நிறுத்தப்பட்டது. தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். அதன் பின்னர் சுமார் அரை மணி நேரம் தாமத்திற்குப்பின் மலை ரெயில் அங்கிருந்து புறப்பட்டு குன்னூரை நோக்கி சென்றது.
- காட்டு யானைகளை ஓசூர் வனச்சரகர் ரவி தலைமையிலான வனத்துறையினர் தொடர்ந்து இரண்டு நாட்களாக கண்காணித்து வந்தனர்.
- கால்நடை பண்ணையில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகளும் கர்னூர் பெரிய ஏரியில் நுழைந்துள்ளது.
ஓசூர்:
கர்நாடக மாநிலத்தில் ஆனேக்கல் பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் தமிழக கிராம பகுதிகள் வழியாக இடம் பெயர்ந்து ஓசூர் அருகே உள்ள மத்திகிரி கால்நடை பண்ணைக்குள் புகுந்தது.
இந்த காட்டு யானைகளை ஓசூர் வனச்சரகர் ரவி தலைமையிலான வனத்துறையினர் தொடர்ந்து இரண்டு நாட்களாக கண்காணித்து வந்தனர்.
மூங்கில் காடுகளை கொண்ட அடர்ந்த கால்நடை பண்ணைக்குள் தஞ்சமடைந்த இந்த காட்டு யானைகளை மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் காட்டு யானைகளை வேறு பகுதிக்கு விரட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று அதிகாலை கால்நடை பண்ணையில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகளும் கர்னூர் பெரிய ஏரியில் நுழைந்துள்ளது.
இந்த ஏரியில் அதிக அளவில் ஆகாயத்தாமரை செடிகள் உள்ளிட்ட அடர்ந்த செடி கொடிகள் இருப்பதால் தண்ணீரில் நீந்த முடியாமல் 3 யானைகளும் தத்தளித்தது. ஆனாலும் தொடர்ந்து மறுகரைக்குச் செல்ல நீந்தி வருகிறது. பல மணி நேரமாக காட்டு யானைகள் நீந்தி வருகிறது.
இந்த காட்டு யானைகள் ஏரி நீரில் நீந்தி மறுகரையில் உள்ள கால்நடை பண்ணைக்குள் செல்லும், இதனை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கால்நடை பண்ணைக்குள் செல்லும் காட்டு யானைகளை வனத்துறையினர் இன்று மாலை கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட திட்டமிட்டுள்ளனர்.
- சாலையை கடக்க நின்ற அந்த யானைகளை கடக்க விடாமல் காரை விட்டு மறித்து அதில் இருந்தவர்கள் புகைப்படம் எடுத்தனர்.
- யானைகள் அச்சம் அடைந்து அங்கும் இங்குமாக சென்று மிரண்டன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் மஞ்சூா், கெத்தை, முள்ளி வழியாக ஊட்டி செல்லக்கூடிய சாலை அடா்ந்த வனப்பகுதியையொட்டி உள்ளது. இந்த சாலையில் வன விலங்குகள் நடமாட்டம் காணப்படுவது வழக்கம்.
இந்நிலையில், காரமடை வழியாக ஊட்டிக்கு இருசக்கர வாகனம் மற்றும் காரில் வந்த சுற்றுலா பயணிகள் கெத்தை மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த 5 காட்டு யானைகளை தொந்தரவு செய்ததுடன், ஆபத்தை உணராமல் அவற்றுடன் விளையாட்டில் ஈடுபட்டனா்.
சாலையை கடக்க நின்ற அந்த யானைகளை கடக்க விடாமல் காரை விட்டு மறித்து அதில் இருந்தவர்கள் புகைப்படம் எடுத்தனர். இதேபோல அந்த வழியாக ஜீப்பில் வந்தவர்களும் இவ்வாறு புகைப்படம் எடுத்தனர்.
இதனால் யானைகள் அச்சம் அடைந்து அங்கும் இங்குமாக சென்று மிரண்டன. யானைகள் ஆவேசப்பட்டால் நிலைமை என்னவாகும் என்பதை உணராமல் அந்த வாகன ஓட்டிகள் இவ்வாறு யானைகளை தொந்தரவு செய்து படம் பிடித்துள்ளனர்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. எனவே இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்கின ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- காட்டு யானைகள், சிறுத்தை, புலி, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
- யானை நடமாட்டத்தால் வெளியில் வரவே அச்சப்படுகிறார்கள்.
அரவேணு
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள், சிறுத்தை, புலி, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தையொட்டிய குடியிருப்புக்குள் நுழைவது வாடிக்கையாக உள்ளது.குறிப்பாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் குஞ்சப்பனை, மாமரம், முள்ளூர், கோழிக்கரை ஆகிய பழங்குடியின கிராமங்கள் உள்ளது.
இந்நிலையில் கோழிக்கரை பழங்குடியின கிராமம் வழியாக செல்லும் சாலையை மேல்கூப்பு, கீழ்கூப்பு, செம்மநாரை, வாகப்பனை, அட்டடி, கோழித்தொரை உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
கடந்த சில தினங்களாக இந்தசாலையை ஓட்டிய தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள் முகா மிட்டுள்ளன. அவ்வப்போது குடியிருப்பையொட்டிய பகுதிகளுக்குள்ளும் வந்து செல்கிறது.
இதனால் இந்த கிராம மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். யானை நடமாட்டத்தால் வெளியில் வரவே அச்சப்படுகிறார்கள்.
எனவே வனத்துறையினர் தங்கள் பகுதியில் இரவு நேரங்களில் வாகன ரோந்து மேற்க்கொண்டு காட்டு யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சானமாவு வனப்பகுதிக்கு யானைகளை விரட்டியுள்ளனர்.
- விவசாயிகள் யாரும் இரவு நேரங்களில் வயலுக்கு காவலுக்கு செல்ல வேண்டாம்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து 14-க்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன. ஏற்கனவே 4 யானைகள் முகாமிட்டிருந்த நிலையில், தற்போது குட்டிகளுடன் மேலும் யானைகள் வந்துள்ளன. இதனால் அப்பகுதியில் யானைகளின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.
இந்த யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் நுழைந்து, அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. அதிகாலை நேரங்களில் மீண்டும் வனப்பகுதிக்கு சென்று விடும்.
இந்நிலையில் இரவு சானமாவு வனப்பகுதியிலிருந்து, நாயக்கனபள்ளி கிராம பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு யானைகள் சென்றன.
அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி, முட்டைகோஸ் பயிர்களை சேதப்படுத்தியது. கடந்த இரண்டு நாட்களாக வனப்பகுதியை ஒட்டியுள்ள சினிகிரிப்பள்ளி, ராமபுரம், அம்பலட்டி, ஆழியாளம் பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் விவசாய பயிர்கள் சேதப்படுத்தியுள்ளன. இதை பார்த்த பொதுமக்கள், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வன ஊழியர்கள், பட்டாசு வெடித்து, கூச்சலிட்டு அருகில் உள்ள சானமாவு வனப்பகுதிக்கு யானைகளை விரட்டியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் சானமாவு வனப்பகுதியில் சுமார் 60 யானைகள் ஒரே இடத்தில் முகாமிட்டுள்ளன. அதனால் இரவு நேரங்களில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் காட்டுயானைகள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. அதனால் விவசாயிகள் யாரும் இரவு நேரங்களில் வயலுக்கு காவலுக்கு செல்ல வேண்டாம். வனப்பகுதியை ஒட்டியுள்ள ஆழியாளம் உள்பட 10 கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.
- வனத்துறையினர் விரட்டியடித்தனர்.
- வனத்திற்குள் செல்லாமல் அடம் பிடித்து நின்றது.
வடவள்ளி
கோவை தொண்டா முத்தூர் அருகே தாளியூர் பகுதியில் இன்று அதிகாலையில் குட்டிகளுடன் 5 யானைக்கூ ட்டங்கள் வனத்தை விட்டு வெளியே வந்தது. இதனையடுத்து யானைக்கூட்டங்கள் முடுவு வனப்பகுதியில் இருந்து விளை நிலங்களுக்கு புகுந்தது.
மேலும் தாளியூர் பள்ளம் வழியாக கருப்பராயன் கோவில் வரை யானை கூட்டம் முகாமிட்டு நின்றது. யானை கூட்டத்தின் சத்தம் கேட்டு அந்த வழியாக நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் வாகன ஓட்டிகள் சிலர் யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். 1 மணி நேரத்திற்கு பிறகு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை சுடுகாட்டு பள்ளம் வழியாக துரத்தும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர போராட்டத்திற்க்கு பிறகு யானை கூட்டத்தை வனத்துறையினர் விரட்டினர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக யானை கூட்டத்தை வனத்திற்கு விரட்ட முயன்றனர். ஆனால் யானைகள் வனத்திற்குள் செல்லாமல் அடம் பிடித்து நின்றது. யானை கூட்டத்தை கண்ட ஊர் பொதுமக்கள் சிலர் தங்களது செல்போனில் புகை படம் மற்றும் வீடியோ பதிவு செய்து அதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர்.
மேலும் அட்டுகள் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக அங்குள்ள ஜெயபிரகாஷ் தோட்டம், ஓவியக் கல்லூரி ஆகிய பகுதிகளில் சுற்றி திரிந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- பல்வேறு பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சியில் உள்ளது தோலம்பாளையம் புதூர் கிராமம்.
இந்த கிராமமானது அடர்ந்த வனத்தையொட்டி உள்ளது. இங்குள்ள மக்கள் தென்னை, வாழை உள்பட பல்வேறு பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
அடர்ந்த வனப்பகுதியையொட்டி இருப்பதால் வனத்தை விட்டு வனவிலங்குகள் வெளியேறி அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகின்றன. அவ்வாறு வரும் யானைகள் விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் 5 காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் வந்தன. வெகுநேரமாக அங்கு சுற்றிய யானைகள் அந்த பகுதியில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.கே.சின்னராஜூவின் தோட்டத்திற்குள் புகுந்தது.
10 மணிக்கு புகுந்த யானைகள் கூட்டம் அதிகாலை 5 மணி வரை அங்கேயே நின்றது. அப்போது யானைகள் அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து சேதப்படுத்தியது.
தொடர்ந்து யானைகள் இதுபோன்ற அட்டகாகத்தில் ஈடுபட்டு வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தென்னை மரங்களை சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேதோட்டத்தில் புகுந்த யானைகள் கூட்டம் 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- 9 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது.
- தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.
குன்னூர்,
குன்னூர் அருகே தேயிலை தோட்டங்களில் கடந்த 30 நாட்களாக சமவெளி பகுதிகளில் இருந்து வந்த 9 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது. அவை தோட்டங்கள் மற்றும் தொழிலாளர்கள் குடியிருப்பிலும் உலா வந்தன. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இந்தநிலையில் குன்னூர் நான்சச் தொழிலாளர்கள் குடியிருப்பை காட்டு யானைகள் முற்றுகையிட்டன. இதனால் தொழிலாளர்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து காட்டு யானைகளை பக்காசூரன் வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர். இருப்பினும், காட்டு யானைகள் மீண்டும் வராமல் இருக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- யானைகளுக்கு பயந்து பெரும்பாலான தேயிலை தொழிலாளா்கள் பணிக்கு செல்லாமல் உள்ளனா்.
- தகரங்களைத் தட்டி ஓசை எழுப்பி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூா்-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் டபுள் ரோடு, ரன்னிமேடு வனப்பகுதிக்கு 2 குட்டிகளுடன் 9 காட்டு யானைகள் கடந்த மாதம் 16-ந் தேதி வந்தது.
மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வந்த இந்த யானைகள் உலிக்கல், சின்னக்கரும்பாலம், கிளன்டேல் ஆகிய பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் மாறி மாறி முகாமிட்டு வருகின்றன.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் அச்சத்தில் உள்ளனா்.
யானைகளுக்கு பயந்து பெரும்பாலான தேயிலை தொழிலாளா்கள் பணிக்கு செல்லாமல் உள்ளனா்.
தொடர்ந்து யானை நடமாட்டம் இருப்பதால் மக்களும் வெளியில் வருவதற்கு அச்சப்பட்டு வீடுகளுக்குள்ளேயே இருக்கின்றனர்.
இந்த யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து விடாமலும், சாலை பகுதிகளுக்குள் வந்துவிடாமலும் தடுப்பதற்காக வனத்துறையினா் தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
தகரங்களைத் தட்டி ஓசை எழுப்பி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.