search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குட்டிகளுடன் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்
    X

    குட்டிகளுடன் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்

    • வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
    • வன பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 குட்டிகளுடன் 9 யானைகள் முகாமிட்டன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூா்-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள வன பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 குட்டிகளுடன் 9 யானைகள் முகாமிட்டன.

    அப்பகுதியிலேயே சில நாள்கள் சுற்றித்திரிந்த யானைகள் தானாகவே வனப்பகுதிக்குள் சென்றன.

    இந்நிலையில், குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் டபுள்ரோடு, ரன்னிமேடு இடையே உள்ள தேயிலை தோட்டம், சோலைப் பகுதிகளில் பல்வேறு விதமான பழங்கள் விளைந்துள்ளன.

    இவற்றை உண்பதற்காக அப்பகுதியில் 2 குட்டிகளுடன் 9 யானைகள் முகாமிட்டுள்ளன. யானைகள் சாலைக்கு வராமல் தடுக்க 6 போ் கொண்ட வன ஊழியா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

    இந்நிலையில் நேற்று இரவு ரன்னிமேடு பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் வாழைகளை சேதப்படுத்தி உள்ளது.

    டபுள் ரோடு அருகே முகாமிட்டுள்ள யானைகளை பட்டாசுகள் வெடித்தும், தகரங்களை தட்டியும் விரட்டும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த காட்டு யானைகள் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வருடந்தோறும் உணவு தேடி நீலகிரி மாவட்டம் பகுதிக்கு வருவது வழக்கம் தான்.

    இருப்பினும், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும் என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்

    Next Story
    ×