என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
  X

  உலக சுற்றுசூழல் தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

  உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தஞ்சையில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • கல்லூரி மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேரணியாக புறப்பட்டனர்.

  தஞ்சாவூர்:

  உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தஞ்சை ரெயிலடியில் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த பேரணியை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

  இதில் கல்லூரி மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேரணியாக புறப்பட்டனர். பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், மண் வளம் காப்போம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பல்வேறு முக்கிய இடங்கள் வழியாக சென்று அரண்மனையில் முடிவடைந்தது.

  இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், டாக்டர் சிங்காரவேலு, மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×