search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Telangana Assembly election"

    • வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கவிதாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
    • கவிதா பேட்டி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் தெரிவித்தார்.

    தெலுங்கானா முதல்- மந்திரி சந்திரசேகர ராவ் மகள் கவிதா இன்று காலை ஐதராபாத் பஞ்சாரா ஹில்சில் உள்ள டி.ஏ.வி. பள்ளியில் வாக்களித்தார்.

    வாக்களித்து விட்டு வந்த பின்னர் பேட்டி அளித்த கவிதா பி.ஆர்.எஸ். கட்சிக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

    வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கவிதாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    மேலும் கவிதா பேட்டி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் தெரிவித்தார்.

    • இறுதி நாளான இன்று தலைவர்கள் அனைவரும் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
    • நாளை மறுதினம் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்படுகின்றன.

    ஐதராபாத்:

    5 மாநில தேர்தலில் கடைசி கட்டமாக தெலுங்கானாவில் நாளை மறுதினம் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    தெலுங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க பாரதிய ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக உழைத்து வருகின்றன. இதனால் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    பிரசாரத்தின் இறுதி நாளான இன்று கட்சியின் முன்னணி தலைவர்கள் அனைவரும் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் தீவிரம் காட்டினர்.

    கரீம் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ஆளும் சந்திரசேகர் ராவ் அரசையும், காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக சாடினார்.

    ஐதராபாத் அருகே நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர்.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓயந்தது.

    நாளை மறுதினம் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்படுகின்றன.

    • நிதி உதவி வழங்கும் திட்டத்தை ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியின் எம்.எல்.ஏ.வும், வேட்பாளருமான ஹரிஸ்ராவ் விளம்பரப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • பயிர் நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு அளித்த அனுமதியை தலைமை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றது.

    தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற 30-ந்தேதி நடக்கிறது. இதற்கான இறுதிகட்ட பிரசாரத்தை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ளன. இதற்கிடையே ராபி பயிர் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கும் மாநில அரசின் திட்டத்துக்கு தேர்தல் கமிஷன் அனுமதி அளித்து இருந்தது.

    அதன்படி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் இன்று நிதி உதவி வரவு வைக்கப்படும் என்று முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் தெரிவித்து இருந்தார். நிதி உதவி வழங்கும் திட்டத்தை ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியின் எம்.எல்.ஏ.வும், வேட்பாளருமான ஹரிஸ்ராவ் விளம்பரப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதைத்தொடர்ந்து பயிர் நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு அளித்த அனுமதியை தலைமை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றது. விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்க தேர்தல் முடியும் வரை தற்காலிக தடை விதிப்பதாக தெரிவித்துள்ளது.

    • தெலுங்கானாவில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • அங்கு ஆட்சியைப் பிடிக்க பிஆர்எஸ் கட்சி தீவிரமாக தேர்தல் வேலை செய்துவருகிறது.

    ஐதராபாத்:

    தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால் தேசிய தலைவர்கள் தெலுங்கானாவில் சூறாவளி பிரசாரம் செய்ய இருக்கிறார்கள்.

    தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க பிஆர்எஸ் கட்சி தீவிரமாக தேர்தல் வேலை செய்து வருகிறது.

    இந்நிலையில், ஊழலில் மூழ்கித் திளைக்கும் காங்கிரஸ் கட்சி ஊழல் பற்றி பேசலாமா? என ராகுல் காந்திக்கு முதல் மந்திரி மகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ராகுல் காந்திக்கு வரலாறு தெரியாது, அவர் 'பப்பு'. இன்று ராகுல் காந்தி வந்திருந்த இடம், அதே நிஜாமாபாத் தான். ராகுல் காந்தியின் பெரியப்பா நேரு அவர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா இடையே கட்டாயத் திருமணம் செய்து வைத்தார். இங்குள்ள மக்களுக்கு காங்கிரசின் வரலாறு முழுமையாக தெரியும். தெலுங்கானா வரலாறு பற்றி ராகுல் காந்திக்கு இருக்கும் அறிவிற்காக வருத்தப்படுகிறேன். இன்று ஊழல் பற்றி ராகுல் காந்தி பேசினால் மக்கள் சிரிப்பார்கள். ஏனெனில் காங்கிரஸ் கட்சி ஊழலில் மூழ்கி கிடக்கிறது என கடுமையாக சாடினார்.

    • நவம்பர் 22-ந் தேதி காலை 9 மணி முதல் நேற்று காலை 9 மணி வரை ரூ.12.16 கோடி மதிப்பிலான பணம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    • நேற்றைய நிலவரப்படி 8,574 கிலோ கஞ்சா, 479 கஞ்சா செடிகள், 30 கிலோ மஜ்ரிவாலா கலந்த சாக்லேட் பார்கள், 3 கிலோ கஞ்சா எண்ணெய் கைப்பற்றப்பட்டு உள்ளது

    தெலுங்கானா சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அக்டோபர் 9-ந் தேதி அறிவித்தது. அதன்படி வருகின்ற 30-ந் தேதி தெலுங்கானா சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    அதன்படி அக்டோபர் 9-ந் தேதி முதல் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தது. இதையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்கள் வழங்குவது தடுக்கும் விதமாக மாநில முழுவதும் ஆங்காங்கே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    வாகன தணிக்கையின் போது 2 லட்சத்து 96 ஆயிரத்து 595 கிலோ அரிசி, 9,207 யூனிட் குக்கர்கள், 88 ஆயிரத்து 496 புடவைகள், 18,576 கடிகாரங்கள், 7 லட்சத்து 24 ஆயிரத்து 713 செல்போன்கள், 86 ஆயிரத்து 113 தையல் ஏந்திரங்கள், 86 ஆயிரத்து 115 மின்விசிறிகள், 40 டிவிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அதிகபட்சமாக நவம்பர் 22-ந் தேதி காலை 9 மணி முதல் நேற்று காலை 9 மணி வரை ரூ.12.16 கோடி மதிப்பிலான பணம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    நேற்றைய நிலவரப்படி 8,574 கிலோ கஞ்சா, 479 கஞ்சா செடிகள், 30 கிலோ மஜ்ரிவாலா கலந்த சாக்லேட் பார்கள், 3 கிலோ கஞ்சா எண்ணெய் கைப்பற்றப்பட்டு உள்ளது. போதைப் பொருட்கள் கடத்தலின் மதிப்பு ரூ.35.09 கோடியாகும். இலவச பொருட்கள் மற்றும் இதர பொருட்களின் மதிப்பு ரூ.81.18 கோடி ஆகும். மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 87.23 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அக்டோபர் 9-ந் தேதி முதல் நேற்று வரை ரூ 260 கோடி மதிப்பிலான ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானா சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் நேற்று வரை மொத்தம் ரூ.669 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • தெலுங்கானாவில் வரும் 30-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
    • பிஆர்எஸ், காங்கிரஸ், பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.

    தெலுங்கானாவில் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக தி.மு.க. அறிவித்துள்ளது.

    இந்நிலையில், முதல் மந்திரி கே.சி.ஆர். மக்களைச் சந்திக்காமல் பண்ணை வீட்டில் முடிவுகளை எடுக்கிறார் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

    இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசுகையில், இது முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் ஊழலுக்கு எதிராகப் போராடுகிறோம். நீங்கள் விரும்பிய வளர்ச்சி நடக்கவில்லை. சாலை சரியில்லை, பாசனமும் நடக்கவில்லை. ஆனால், கே.சி.ஆர். கவலைப்படவில்லை. அவர் தனது பண்ணை வீட்டில் அமர்ந்து அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார், மக்களைச் சந்திப்பதில்லை என தெரிவித்தார்.

    • ஜீப்லிஹில்ஸ் தொகுதியில் பிரசாரம் செய்தபோது ஊழல், குடும்ப ஆதிக்கம் நிறைந்த சந்திரசேகர ராவ் ஆட்சிக்கு விடை கொடுங்கள்.
    • இந்தியாவை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும் பிரதமர் மோடியின் திட்டங்களும், கனவுகளும் நிறைவேற பா.ஜனதா வேட்பாளர்களை தேர்வு செய்யுங்கள் என்று குஷ்பு கூறினார்.

    ஐதராபாத்:

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து கடந்த இரண்டு நாட்களாக பிரசாரம் செய்து வருகிறார்.

    தமிழில் கொடிகட்டி பறந்தது போல் தெலுங்கு சினிமா உலகிலும் கொடி கட்டி பறந்தவர் குஷ்பு. எனவே தெலுங்கு மக்களிடமும் நன்கு அறிமுகமானவர். எனவே அவர் தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற போது அவரை பார்ப்பதற்காகவும் அவரோடு செல்பி எடுப்பதிலும் பெண்கள் ஆர்வம் காட்டினார்கள். தெருக்களில் நடந்து சென்று வாக்கு கேட்ட குஷ்பு, தன்னை பார்க்க திரண்டு நின்றவர்கள் அருகில் சென்று இளம்பெண்களாக இருந்தால் ரா ரா (வா... வா) கண்ணா என்று அவர்களது கண்ணங்களை தடவியும், வயதானவர்களாக இருந்தால் அவர்களை அம்மா என்று கும்பிட்டும் உங்கள் குஷ்பு வந்திருக்கேன். தாமரை பூவை மறந்திடாதீங்க என்று கேட்டு வாக்கு சேகரித்தார்.

    ஜீப்லிஹில்ஸ் தொகுதியில் பிரசாரம் செய்தபோது ஊழல், குடும்ப ஆதிக்கம் நிறைந்த சந்திரசேகர ராவ் ஆட்சிக்கு விடை கொடுங்கள். இந்தியாவை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும் பிரதமர் மோடியின் திட்டங்களும், கனவுகளும் நிறைவேற பா.ஜனதா வேட்பாளர்களை தேர்வு செய்யுங்கள் என்று கூறினார்.

    இதற்கிடையில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் இலங்கை பயணத்தை ரத்து செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் யாருக்கும் பயப்படவில்லை. பயப்படவும் மாட்டேன் என்பது தெரிந்த உண்மை. இலங்கையில் நடைபெற இருந்த ஹரிஹரன் கச்சேரியில் இருந்து நான் விலகிவிட்டேன், ஏனெனில் அந்த நேரத்தில் எனது மாமியார் ஒரு பெரிய இதய அறுவை சிகிச்சைக்கு திட்டமிட்டுள்ளார். எனது முன்னுரிமை அவர்தான். அவரை மீண்டும் நல்ல ஆரோக்கியத்துடன் பராமரிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.

    அதனால் நான் பின்வாங்கிவிட்டேன் என்று நினைப்பவர்கள் நீண்ட தூரம் நடந்து செல்லுங்கள். தெரியாதவர்கள், பெயர் தெரியாதவர்கள், முகம் தெரியாதவர்கள், அந்நியர்கள் என்னை ஒருபோதும் மிரட்ட முடியாது. தயவு செய்து வேறு கதவை தட்டுங்கள். தைரியம் என்பது என் பெயர்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • மாஸ்டர்கள் களத்தில் நிற்கும் போதெல்லாம் அங்கு மாயாஜாலம் நிகழ்கிறது என்று கவிதா பதிவிட்டுள்ளார்.
    • காலேஸ்வரம் ஊழலில் கே.சி.ஆர்.ஐ. மிஞ்ச ஒருவரும் இல்லை என்று கிண்டல் செய்து காங்கிரஸ் பதிவிட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மகள் கவிதா தன்னுடைய தந்தையை கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் ஒப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.

    கவிதா தன்னுடைய எக்ஸ் தளத்தில் முதல்- மந்திரி கே.சி.ஆர்.ஐ. போல் விராட் கோலி தோற்கடிக்க முடியாதவர்.

    மாஸ்டர்கள் களத்தில் நிற்கும் போதெல்லாம் அங்கு மாயாஜாலம் நிகழ்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

    இதற்கு பதிலடி கொடுத்து எக்ஸ் தள பக்கத்தில் காங்கிரஸ் கட்சி செய்துள்ள பதிவில், நாட்டுக்காக விளையாடுவதற்கும், கமிஷனுக்காக செயல்படுவதற்கும் வித்தியாசம் உள்ளது.

    கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு போட்டியில்லை. காலேஸ்வரம் ஊழலில் கே.சி.ஆர்.ஐ. மிஞ்ச ஒருவரும் இல்லை என்று கிண்டல் செய்து பதிவிட்டுள்ளது.

    • தெலுங்கானாவில் வரும் 30-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
    • பி.ஆர்.எஸ்., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

    ஐதராபாத்:

    தெலுங்கானாவில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பி.ஆர்.எஸ்., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    அனைத்து கட்சிகளின் தலைவர்களும் தெலுங்கானாவில் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் பூத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல் மந்திரியும், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரசும், பா.ஜ.க.வும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.

    பிரதமர் மோடிக்கு 100 கடிதங்கள் எழுதியும் அவர்கள் எங்களுக்கு ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட தரவில்லை.

    பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பது வீண். காங்கிரசுக்கு வாக்களிப்பது அதைவிட பெரிய வீண் என தெரிவித்தார்.

    • தெலுங்கானாவில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சிகளுக்கு இடையே அங்கு போட்டி நிலவுகிறது.

    ஐதராபாத்:

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஸ்ரவந்தி நேற்று அக்கட்சியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து, ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி கட்சியில் இன்று இணைந்தார். செயல் தலைவர் கே.டி.ராமாராவ் முன்னிலையில் பி.ஆர்.எஸ். கட்சியில் இணைந்தார்.

    காங்கிரஸ் கட்சி ஒருவரின் தலைமையின் கீழ் செயல்படுகிறது என குற்றம்சாட்டினார்.

    இம்மாத இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அக்கட்சியில் இருந்து விலகியது பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    • உங்களிடம் பேச வேண்டும் என இளம்பெண் ஒருவர் டவர் மீது ஏறினார்.
    • இதைக் கண்ட பிரதமர் மோடி இளம்பெண்ணின் செயலால் அதிர்ச்சியடைந்தார்.

    ஐதராபாத்:

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில், செகந்திராபாத்தில் பாஜக ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

    பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் இளம்பெண் ஒருவர் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் திடீரென டவர் மீது வேகமாக ஏறினார். இதையடுத்து, அந்த இளம் பெண்ணை பிரதமர் சமாதானப்படுத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பிரதமர் மோடி பேசிக்கொண்டிருந்தபோது இளம்பெண் ஒருவர், அங்கிருந்த மின்விளக்கு டவரின் மீது ஏறி பிரதமரிடம் பேச முயன்றார். இளம்பெண் டவர்மீது ஏறுவதைக் கண்ட பிரதமர் மோடி, தயவுசெய்து கீழே இறங்குங்கள் என பதைபதைப்புடன் கேட்டுக் கொண்டார். உங்களிடம் நான் பேசுகிறேன் என பிரதமர் கூறியதை அடுத்து, அப்பெண் டவரில் இருந்து கீழே இறங்கினார். இதனால் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தெலங்கானா மாநிலம் உதயமானதும் முதல் முதலமைச்சர் தலித் எனக்கூறிய கேசிஆர், பிறகு அந்த நாற்காலியை தானே பிடுங்கிக் கொண்டார். சுதந்திரத்திற்கு பிறகு அத்தனை அரசியல் கட்சிகளும் மடிகா சமூக மக்களை மோசம் செய்தன. தலித்களுக்கு 3 ஏக்கர் நிலம் கொடுப்பதாக சொன்ன பிஆர்எஸ் கட்சி அதை நிறைவேற்றவில்லை, அம்பேத்கரை தோற்கடித்த கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியால்தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்கப்படாமல் போனதாகவும் குற்றம் சாட்டினார்.

    • தெலுங்கானாவில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • வாரங்கல் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் மத்திய மந்திரி அனுராக் தாக்குர் பங்கேற்றார்.

    ஐதராபாத்:

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

    இந்நிலையில், தெலுங்கானாவின் வாரங்கல் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் மத்திய மந்திரி அனுராக் தாக்குர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    மக்கள் மத்தியில் ஆளும் கட்சி மற்றும் கே.சி.ஆர். மீது அதிக கோபம் உள்ளது. வாரிசு அரசியலாலும் ஊழலாலும் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

    காளேஸ்வரம் திட்ட ஊழல் முதல் டெல்லியின் கலால் கொள்கை ஊழல் வரை கே.சி.ஆர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் வெளிவந்துள்ளன.

    கர்நாடகா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் போலி வாக்குறுதிகளை அளித்து காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. ஓராண்டுக்குள் அவர்களின் அரசும், உத்தரவாதமும் தோல்வி அடைந்தது.

    காங்கிரசும், கே.சி.ஆரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள், இருவரும் ஊழல்வாதிகள் மற்றும் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகிறார்கள் என தெரிவித்தார்.

    ×