search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குஷ்'பூ' வந்திருக்கேன் தாமரை பூவை மறக்காதீங்க... தெலுங்கானாவில் தெலுங்கில் கலக்குகிறார்

    • ஜீப்லிஹில்ஸ் தொகுதியில் பிரசாரம் செய்தபோது ஊழல், குடும்ப ஆதிக்கம் நிறைந்த சந்திரசேகர ராவ் ஆட்சிக்கு விடை கொடுங்கள்.
    • இந்தியாவை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும் பிரதமர் மோடியின் திட்டங்களும், கனவுகளும் நிறைவேற பா.ஜனதா வேட்பாளர்களை தேர்வு செய்யுங்கள் என்று குஷ்பு கூறினார்.

    ஐதராபாத்:

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து கடந்த இரண்டு நாட்களாக பிரசாரம் செய்து வருகிறார்.

    தமிழில் கொடிகட்டி பறந்தது போல் தெலுங்கு சினிமா உலகிலும் கொடி கட்டி பறந்தவர் குஷ்பு. எனவே தெலுங்கு மக்களிடமும் நன்கு அறிமுகமானவர். எனவே அவர் தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற போது அவரை பார்ப்பதற்காகவும் அவரோடு செல்பி எடுப்பதிலும் பெண்கள் ஆர்வம் காட்டினார்கள். தெருக்களில் நடந்து சென்று வாக்கு கேட்ட குஷ்பு, தன்னை பார்க்க திரண்டு நின்றவர்கள் அருகில் சென்று இளம்பெண்களாக இருந்தால் ரா ரா (வா... வா) கண்ணா என்று அவர்களது கண்ணங்களை தடவியும், வயதானவர்களாக இருந்தால் அவர்களை அம்மா என்று கும்பிட்டும் உங்கள் குஷ்பு வந்திருக்கேன். தாமரை பூவை மறந்திடாதீங்க என்று கேட்டு வாக்கு சேகரித்தார்.

    ஜீப்லிஹில்ஸ் தொகுதியில் பிரசாரம் செய்தபோது ஊழல், குடும்ப ஆதிக்கம் நிறைந்த சந்திரசேகர ராவ் ஆட்சிக்கு விடை கொடுங்கள். இந்தியாவை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும் பிரதமர் மோடியின் திட்டங்களும், கனவுகளும் நிறைவேற பா.ஜனதா வேட்பாளர்களை தேர்வு செய்யுங்கள் என்று கூறினார்.

    இதற்கிடையில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் இலங்கை பயணத்தை ரத்து செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் யாருக்கும் பயப்படவில்லை. பயப்படவும் மாட்டேன் என்பது தெரிந்த உண்மை. இலங்கையில் நடைபெற இருந்த ஹரிஹரன் கச்சேரியில் இருந்து நான் விலகிவிட்டேன், ஏனெனில் அந்த நேரத்தில் எனது மாமியார் ஒரு பெரிய இதய அறுவை சிகிச்சைக்கு திட்டமிட்டுள்ளார். எனது முன்னுரிமை அவர்தான். அவரை மீண்டும் நல்ல ஆரோக்கியத்துடன் பராமரிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.

    அதனால் நான் பின்வாங்கிவிட்டேன் என்று நினைப்பவர்கள் நீண்ட தூரம் நடந்து செல்லுங்கள். தெரியாதவர்கள், பெயர் தெரியாதவர்கள், முகம் தெரியாதவர்கள், அந்நியர்கள் என்னை ஒருபோதும் மிரட்ட முடியாது. தயவு செய்து வேறு கதவை தட்டுங்கள். தைரியம் என்பது என் பெயர்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×