search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்லிகார்ஜுன் கார்கே"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிரடி நடவடிக்கையாக 141 எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டனர்
    • சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் நீக்கப்பட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்

    நடைபெற்று கொண்டிருக்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் டிசம்பர் 13 அன்று மக்களவையிலும், பாராளுமன்ற வளாகத்திலும் நடைபெற்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இச்சம்பவம் குறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி பாராளுமன்றத்தின் இரு அவையிலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    ஆனால், அவர்கள் கோரிக்கைக்கு ஆளும் பா.ஜ.க. செவிசாய்க்கவில்லை. மேலும், அவை நடவடிக்கைக்கு எதிராக கண்ணியக்குறைவாக நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு எதிர்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளானார்கள்.

    இதுவரை 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இன்று, ஆளும் பா.ஜ.க.விற்கு எதிராக "இந்தியா கூட்டணி" உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற கூட்டணி கட்சி உறுப்பினர்கள், சஸ்பெண்டு ஆன எம்.பி.க்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

    போராடி வரும் உறுப்பினர்கள் "ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்" (save democracy) என எழுதப்பட்டிருந்த பேனர்களை தாங்கியபடி கோஷங்களை எழுப்பினர்.

    இப்போராட்டம் குறித்து மல்லிகார்ஜுன் கார்கே கூறும் போது, "பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும். சஸ்பென்ஷன் நடவடிக்கையை நீக்க வேண்டும். எங்கள் கோரிக்கை ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும். நான் துணை ஜனாதிபதிக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளேன். அதற்கு விரைவாக பதில் எதிர்பார்க்கிறேன்" என தெரிவித்தார்.


    • டெல்லி காவல்துறை இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்துகிறது
    • எதிர்ப்பு குரல்களை நசுக்கி மசோதாக்களை நிறைவேற்ற முயல்வதாக கார்கே குற்றச்சாட்டு

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4 அன்று தொடங்கியது. இக்கூட்டத்தொடர் இம்மாதம் 22 வரை நடக்க உள்ளது.

    டிசம்பர் 13 அன்று பாராளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் மக்களவை அலுவல்கள் வழக்கம் போல் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து 2 பேர் அவையில் குதித்தனர். ஒருவர் கோஷமிட்டு கொண்டே உடலில் மறைத்து வைத்திருந்த புகை குப்பியை வீசினார். இதில் மஞ்சள் நிற புகை வெளிக்கிளம்பி பல எம்.பி.க்களின் கண்களில் எரிச்சலை ஏற்படுத்தியது. அந்த நபர் மேசைகளின் மீது தாவி குதித்து கொண்டே சபாநாயகர் இருக்கை அருகே செல்ல முயன்றார். மற்றொரு நபர் கோஷமிட்டு கொண்டே அங்கும் இங்கும் ஓடினார். சில உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்து நின்ற போதும் ஒரு சில எம்.பி.க்கள் துணிந்து அந்த இருவரையும் மடக்கி பிடித்து, அங்கு விரைந்து வந்த சபைக்காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

    இச்சம்பவம் நடைபெற்ற அதே நேரம், அவைக்கு வெளியே பாராளுமன்ற வளாகத்தில் ஒரு ஆணும் பெண்ணும் இதே போன்று கோஷமிட்டு, வர்ண புகை குப்பிகளை வீசினர்.

    நால்வரையும் கைது செய்துள்ள டெல்லி காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

    2011 டிசம்பர் 13 அன்று பாராளுமன்ற வளாகத்திற்குள் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய 22-வது நினைவு தினத்தன்றே இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    இச்சம்பவம் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்றும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அவையில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் எதிர்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டனர். ஆனால், அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்களில் 47 எம்.பி.க்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

    இந்நிலையில் ஆளும் பா.ஜ.க.வை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்திருப்பதாவது:

    பாதுகாப்பு குறைபாடு காரணமாக மர்ம நபர்கள் பாராளுமன்றத்தையே தாக்க துணிந்தனர். ஆனால், மோடி பாராளுமன்றத்தையும் ஜனநாயக மாண்புகளையும் தாக்குகிறார். 47 பாராளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ததன் மூலம் அனைத்து ஜனநாயக மாண்புகளையும் மோடி குப்பை தொட்டிக்குள் போட்டு விட்டார்.

    எங்களுக்கு 2 கோரிக்கைகள்தான்: பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டது மன்னிக்க முடியாதது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும். மற்றொன்று, இச்சம்பவம் குறித்த ஆழமான விவாதம் நடைபெற்றே ஆக வேண்டும்.

    அச்சு ஊடகத்தில் பிரதமர் பேட்டியளிக்கிறார்; தொலைக்காட்சி சேனல்களில் உள்துறை அமைச்சர் பேட்டி அளிக்கிறார். ஆனால், இந்திய மக்களின் பிரதிநிதித்துவ அமைப்பான பாராளுமன்றத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையில் இருந்து இருவரும் தவறி, பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள்.

    இதன் மூலம் எதிர்கட்சிகள் இல்லாத பாராளுமன்றத்தை உருவாக்கி, எதிர்ப்பு குரல்களை நசுக்கி, அவர்கள் விரும்பும் வகையில் அவர்கள் கொண்டு வர துடிக்கும் சட்டங்களை எந்த வித விவாதங்களோ எதிர்ப்புகளோ இல்லாமல் எளிதாக கொண்டு வர முடியும்.

    இவ்வாறு கார்கே குற்றம் சாட்டினார்.

    • தெலுங்கானாவில் வரும் 30-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
    • பிஆர்எஸ், காங்கிரஸ், பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.

    தெலுங்கானாவில் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக தி.மு.க. அறிவித்துள்ளது.

    இந்நிலையில், முதல் மந்திரி கே.சி.ஆர். மக்களைச் சந்திக்காமல் பண்ணை வீட்டில் முடிவுகளை எடுக்கிறார் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

    இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசுகையில், இது முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் ஊழலுக்கு எதிராகப் போராடுகிறோம். நீங்கள் விரும்பிய வளர்ச்சி நடக்கவில்லை. சாலை சரியில்லை, பாசனமும் நடக்கவில்லை. ஆனால், கே.சி.ஆர். கவலைப்படவில்லை. அவர் தனது பண்ணை வீட்டில் அமர்ந்து அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார், மக்களைச் சந்திப்பதில்லை என தெரிவித்தார்.

    • மெகுல் சோக்சிக்கு எதிராக பிறப்பித்த ரெட் கார்னர் நோட்டீஸ் உத்தரவை இன்டர்போல் நீக்கியது.
    • இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

    புதுடெல்லி:

    பஞ்சாப் தேசிய வங்கி பணமோசடி வழக்கில் சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் வைர வியாபாரி மெகுல் சோக்சி. அவருக்கு எதிராக பிறப்பித்த ரெட் கார்னர் நோட்டீஸ் உத்தரவை இன்டர்போல் நீக்கியது. எனினும், இந்தியாவில் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்ற வழக்கை இந்த நடவடிக்கை எந்த வகையிலும் பாதிக்காது. இந்த வழக்கு விசாரணையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அந்த வழக்கு தொடர்ந்து நடைபெறும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை இருக்கிறது. ஆனால், மோடிஜியின் நமது மெகுல் பாய், இன்டர்போலில் இருந்து விடுவிக்கப்படுகிறார். சிறந்த நண்பருக்காக பாராளுமன்றம் முடக்கப்படும்போது 5 ஆண்டுக்கு முன் தப்பியோடிய பழைய நண்பருக்கு உதவுவதில் இருந்து எப்படி மறுப்பு தெரிவிக்க முடியும்? என பதிவிட்டுள்ளார்.

    • ஜே.பி.நட்டாவின் கருத்து கண்டனத்திற்கு உரியது என மல்லிகார்ஜுன் கார்கே கூறினார்.
    • ஜனநாயகத்தைப் பற்றி விவாதிப்பவர்கள் தேச விரோதிகளா? என கேள்வி எழுப்பினார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், இந்திய ஜனநாயக கட்டமைப்புகள் அனைத்தும் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது. தற்போதைய பா.ஜ.க. ஆட்சியில் நாட்டின் ஜனநாயக நிறுவனங்கள் அனைத்தும் முழு அளவிலான தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக குற்றம்சாட்டினார்.

    ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஜனநாயகத்தை விமர்சித்ததன் மூலமும், இந்திய ஜனநாயகத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என்று அந்நிய மண்ணில் தெரிவித்ததன் மூலமும் நம் நாட்டின் இறையாண்மை மீது ராகுல் காந்தி பெரிய தாக்குதல் நடத்தியுள்ளார். இந்திய மக்களால் திரும்ப திரும்ப நிராகரிக்கப்பட்ட ராகுல் காந்தி, இந்தியாவிற்கு எதிரான சக்திகளின் நிரந்தரமான கருவியாக மாறிவிட்டார் என விமர்சித்துள்ளார்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள், ஆங்கிலேயர்களுக்காக வேலை செய்தவர்கள் பிறரை தேசவிரோதிகள் என்று சொல்வதா? அவர்கள்தான் தேசவிரோதிகள்.

    வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் போன்ற பிரச்சினைகளில் இருந்து திசை திருப்புவதற்காக இதைச் செய்கிறார்கள்.

    ராகுல் காந்தி தேச விரோதியாக இருக்கமுடியுமா? ஜனநாயகத்தைப் பற்றி விவாதிப்பவர்கள் தேச விரோதிகளா? ஜே.பி.நட்டாவின் கருத்து கண்டனத்திற்குரியது. இதற்கு பாராளுமன்றத்தில் கடும் பதிலடி கொடுப்போம். ராகுல் காந்தியே இதற்கு பதில் சொல்வார். அதனால்தான் அவர்கள் (பா.ஜ.க.) பயப்படுகிறார்கள். அவருக்கு ஏன் பாராளுமன்றத்தில் பேச வாய்ப்பளிக்கவில்லை?

    பிரதமர் மோடி கூட ஆறு முதல் ஏழு நாடுகளுக்குச் சென்ற பிறகு, 'இந்தியாவில் பிறந்த நான் என்ன பாவம் செய்தேன் என்று மக்களும் தொழிலதிபர்களும் கூறுகிறார்கள்' என்று கூறினார். இப்படி நாட்டு மக்களை அவமானப்படுத்தியவர் எங்களை தேசவிரோதி என்கிறாரா? முதலில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார்.

    • எதிர்க்கட்சிகளின் அமளியால், மதியம் 2 மணிவரை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.
    • பாராளுமன்றத்தில் நாங்கள் அதானி விவகாரம் பற்றி எழுப்பினாலே மைக் அணைக்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 29-ம் தேதி தொடங்கி நடந்தது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசினார். இதன்பின், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. இதனையடுத்து, பிப்ரவரி 11-ம் தேதியுடன் முதல் அமர்வு கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. இதன்படி, இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கின. ஏப்ரல் 6-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறும். இதில், உக்ரைன் விவகாரம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வட்டி குறைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்தன.

    இரு அவைகளில் எதிர்க்கட்சிகளின் அமளியால், மதியம் 2 மணிவரை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. பின்னர் அவை கூடியதும், எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்தது. இதனை தொடர்ந்து, இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.

    இதன்பின், பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மோடிஜியின் கீழ் சட்ட விதிகளோ, ஜனநாயகமோ இல்லை. சர்வாதிகாரம் போன்று அவர்கள் நாட்டை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதன்பின், அவர்கள் ஜனநாயகம் பற்றி பேசி வருகின்றனர் என கூறியுள்ளார்.

    அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும் என நாங்கள் கோரி வருகிறோம். நாங்கள் இந்த விவகாரம் பற்றி அவையில் எழுப்பும் போதெல்லாம், மைக்குகள் அணைக்கப்பட்டு விடுகின்றன. அவையில் அமளி தொடங்கி விடுகிறது என தெரிவித்துள்ளார்.

    • கடந்த 17-ந் தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது.
    • இந்த தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கே அபார வெற்றி பெற்றார்.

    கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இதையடுத்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார்.

    இந்நிலையில் காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மல்லிகார்ஜுன் கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு மொத்தம் 9 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் வாக்களித்தனர். இதில் பதிவான வாக்குகள் கடந்த 19-ந் தேதி எண்ணப்பட்டன.

    இதில் 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூருக்கு 1000 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைய அலுவலகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே இன்று பதவி ஏற்கிறார்.இதன் மூலம் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் கட்சி தலைவர் பதவியை வகிக்க உள்ளது குறிப்பிடத்ததக்கது.

    • இன்று வேட்புமனுக்கள் குறித்து ஆய்வு நடைபெற்றது.
    • மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் இடையே நேரடிப் போட்டி.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், ஜார்கண்ட் மாநில முன்னாள் அமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான கேஎன் திரிபாதி ஆகியோர் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். 


    இந்த நிலையில், வேட்புமனுக்கள் குறித்து ஆய்வு இன்று நடைபெற்றதாக கட்சியின் தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி தெரிவித்துள்ளார். இதில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

    வேட்புமனுவை விதிமுறைகளின் படி பூர்த்தி செய்யாததால் கே.என் திரிபாதியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக மதுசூதன் மிஸ்த்ரி கூறினார். அவரது வேட்புமனுத் தாக்கலின் போது மொத்தம் 20 படிவங்கள் பெறப்பட்டன. அவற்றில் நான்கு கையொப்பங்கள் மீண்டும் மீண்டும் போடப்பட்டிருந்ததால் நிராகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

    வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான அக்டோபர் 8ந் தேதி கடைசி நாள். அன்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் இடையே நேரடிப் போட்டி உறுதியாகி உள்ள நிலையில், 8ந் தேதிக்குள் யாரும் வாபஸ் பெறா விட்டால், 17ந் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும் மதுசூதன் மிஸ்த்ரி கூறியுள்ளார். 

    • இந்த தேர்தலில் போட்டியிட சசிதரூர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
    • மல்லிகார்ஜுன கார்கேவும் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட முன்னாள் மத்திய மந்திரியும், அக்கட்சியின் எம்.பி.யுமான சசிதரூர் வேட்புமனுவை இன்று காலை தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து பிற்பகல் அக்கட்சியின் மூத்த தலைவரும், பாராளுமன்ற மாநிலங்களைவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் வேட்புமனுவை தாக்கல் செய்தார். 


    டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரியிடம் வேட்புமனுவை அவர் வழங்கினார். அசோக் கெலாட் உள்பட காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் அப்போது உடன் இருந்தனர். இந்த நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட ஜார்க்கண்ட் மாநில முன்னாள் அமைச்சர் கே.என். திரிபாதியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.


    இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (திரிபாதி பிரிவு) தேசியத் தலைவராக அவர் பணியாற்றி உள்ளார். திரிபாதி போட்டியிடுவதன் மூலம் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மும்முனை போட்டி உறுதியாகி உள்ளது.

    ×