என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tamil"
- ஏ 1 படத்தில் இவர் நடித்த அனைத்து நகைச்சுவை காட்சிகளும் ஹிட் ஆனது.
- நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்தார்.
தமிழ் சின்னத்திரையில் "லொள்ளு சபா" என்கிற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் சேஷூ. இவர் தனது தனித்துவமான நகைச்சுவை பாணியைக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.
சந்தானம் நடிக்கும் பெரும்பாலான படங்களில் நடிகர் சேஷு நடித்துள்ளார்.
ஏ 1 படத்தில் இவர் நடித்த அனைத்து நகைச்சுவை காட்சிகளும் ஹிட் ஆனது. முக்கியமாக "அச்சச்சோ அவரா பயங்கரமான ஆள் ஆச்சே" என்று அவர் நடித்த காட்சிகள் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.
இதற்கு அடுத்து வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் அவர் நடித்த காட்சிகள் அனைவராலும் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்தார். அவரின் சிகிச்சைக்காக பலர் நிதி திரட்டி கொடுத்தனர்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இச்செய்தி திரைப்பட கலைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளிவந்த சிங்கப்பூர் சலூன் படத்தை கோகுல் இயக்கினார்.
- படத்தின் தலைப்பை கொரோனா குமாரில் இருந்து வைப் குமார் என்று மாற்றியுள்ளார்.
இயக்குனர் கோகுல் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் வெளியாகியது. விஜய் சேதுபதி, அஸ்வின், சுவாதி, நந்திதா, பசுபதி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்தனர். இப்படம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தது. அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் 2018 ஆம் ஆண்டு ஜுங்கா படத்தை இயக்கினார்.
இதற்கடுத்து 2020 ஆம் ஆண்டு கொரொனா குமார் என்ற படத்தை சிம்பு நடிப்பில் இயக்க இருந்தார். ஆனால் சுழ்நிலைக் காரணமாக அப்படம் கைவிடப்பட்டது. ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளிவந்த சிங்கப்பூர் சலூன் படத்தை கோகுல் இயக்கினார்.
இந்நிலையில் அடுத்ததாக விஷ்ணு விஷால் நடிப்பில் படம் இயக்கவுள்ளார் . சிம்பு முதலில் நடிக்க இருந்த கொரோனா குமார் கதையைதான் இப்பொழுது விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்க போகிறார். படத்தின் தலைப்பை கொரோனா குமாரில் இருந்து வைப் குமார் என்று மாற்றியுள்ளார். இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கும் இப்படத்திற்கும் தொடர்பு இருக்கிறது என கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி இப்படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படத்தின் காட்சி முன்னோட்டத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்
- மார்ச் 29ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
அறிமுக இயக்குனர் பாஸ்கல், வெப்பம் குளிர் மழை படத்தை இயக்குகியுள்ளார். புதிய இசையமைப்பாளர் சங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். FDFS நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றி மாறன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார்.
இந்த படத்தில், திரவ் மற்றும் இஸ்மத் பானு ஆகியோர் நடிகர்களாக அறிமுகமாகின்றனர். எம்.எஸ். பாஸ்கர் இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின், டிரெயிலர் சென்ற வாரம் வெளியானது. மார்ச் 29ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் காட்சி முன்னோட்டத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஊர் பெரியவர் தோற்றத்தில் நடித்திருக்கும், எம்.எஸ் பாஸ்கர் மிகவும் நகைச்சுவையாக நடித்து இருக்கிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜி.வி. பிரகாஷ் அடுத்ததாக நடித்திருக்கும் படம் "டியர்"
- டியர்" படம் வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது
நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், மமிதா பைஜூ முன்னணி கதாப்பாத்திரங்களாக நடித்து மார்ச் 22 ஆம் தேதி வெளியாகியது ரெபெல் திரைப்படம். இந்த படம் மக்களிடையே கலந்த விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
ஜி.வி. பிரகாஷ் அடுத்து நடித்த கள்வன் திரைப்படம் ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகிறது. பாரதிராஜா, இவானா மற்றும் தீனா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் அடுத்ததாக நடித்திருக்கும் படம் "டியர்". "செத்தும் ஆயிரம் பொன்" படத்தை இயக்கிய ஆனந்த் ரவிசந்திரன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். ஐஷ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷும் ஐஷ்வர்யா ரஜேஷும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடலான 'மஜா வெட்டிங்' என்ற பாட்டின் ப்ரோமோ வீடியோவை இன்று மாலை வெளியிடுகிறார்கள்.
பாட்டின் முழு வீடியோவை நாளை வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்."டியர்" படம் வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- WIFE’ படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
- 'WIFE’ என்ற தலைப்பை இதற்கு முன் எந்தத் திரைப்படத்திற்கும் பயன்படுத்தப்படவில்லை என்ற விஷயம் தெரிய வந்தபோது ஆச்சரியமாக இருந்தது.
அறிமுக இயக்குநர் ஹேமநாதன் ஆர் இயக்கத்தில் மிர்ச்சி விஜய் மற்றும் அஞ்சலி நாயர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'WIFE' படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
படத்தின் தலைப்பு மற்றும் கதையின் முக்கியத்துவம் பற்றி இயக்குநர் ஹேமநாதன் ஆர் கூறுகையில், "கணவன் - மனைவிக்கு இடையிலான நவீன உறவை மையமாகக் கொண்டது இந்தப் படம்.
அதனாலேயே இந்தத் தலைப்பை நாங்கள் தேர்வு செய்தோம். சதுரங்க விளையாட்டில் ஒரு ராணிக்கு எப்படி அசைக்க முடியாத ஒரு சக்தி இருக்கிறதோ அதுபோலவே, ஒவ்வொரு வீட்டிலும் மனைவி ஒரு குடும்பத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
திருமணத்திற்குப் பிறகு மலரும் அன்பை எமோஷனலாக கதையில் எடுத்து வருவதே என் நோக்கம். 'WIFE' என்ற தலைப்பை இதற்கு முன் எந்தத் திரைப்படத்திற்கும் பயன்படுத்தப்படவில்லை என்ற விஷயம் தெரிய வந்தபோது ஆச்சரியமாக இருந்தது.
அப்படி பயன்படுத்ததாது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன். எல்லா வயதினரும் இந்தப் படத்துடன் கனெக்ட் செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்றார்.
பல படங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மிர்ச்சி விஜய் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் நடித்து வெளியான அடியே படத்தில் மிர்ச்சி விஜய் சிறப்பாக நடித்து இருந்தார்.
விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட 'டாணாக்காரன்' படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் புகழ் பெற்ற அஞ்சலி நாயர் இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மைத்ரேயன், ரெடின் கிங்ஸ்லி, கல்யாணி நடராஜன், விஜய் பாபு, லல்லு, கதிர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கே.ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார் மற்றும் சிவசங்கர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜான்வி கபூர் திருப்பதி வந்தது முதல் விமானத்தில் கேக் வெட்டி கொண்டாடியது வரை அவரது காதலன் ஷிகா பஹிரியா தனது செல்போனில் வீடியோ போட்டோக்களாக பதிவு செய்து இருந்தார்.
- ஜான்வி கபூர் தனது காதலனுடன் முட்டி போட்டபடி மலை பாதையில் உள்ள படிக்கட்டில் 3 மணி நேரம் ஏறி சென்றார்.
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் தற்போது இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
ஜான்வி கபூர் தனது தாயைப் போலவே அடிக்கடி ஆன்மீக சுற்றுலாவாக கோவில்களுக்கு சென்று வருகிறார்.
அதன்படி ஜான்வி கபூர் தனது பிறந்த நாளை முன்னிட்டு அவரது காதலன் என கூறப்படும் ஷிகா பஹாரியா மற்றும் அவரது நண்பர் ஓரியுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார்.
ஜான்வி கபூர் மற்றும் அவரது காதலன் இருவரும் வெள்ளை நிற பேண்ட், வெளிர் நிறத்தில் குர்தாவும் அணிந்து இருந்தனர்.
பின்னர்ஜான்வி கபூர் தனது காதலனுடன் முட்டி போட்டபடி மலை பாதையில் உள்ள படிக்கட்டில் 3 மணி நேரம் ஏறி சென்றார். அதன் பிறகு முட்டி போட்டபடி செல்ல சிரமம் அடைந்ததால் நடந்து சென்றார்.
ஜான்வி கபூரை அடையாளம் கண்ட பக்தர்கள் அவருடன் சேர்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்த பிறகு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
விமானத்திலேயே கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். ஜான்வி கபூர் திருப்பதி வந்தது முதல் விமானத்தில் கேக் வெட்டி கொண்டாடியது வரை அவரது காதலன் ஷிகா பஹிரியா தனது செல்போனில் வீடியோ போட்டோக்களாக பதிவு செய்து இருந்தார். அவரது செல்போன் பதிவுகளை தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- "டியர்" படம் வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது
- "செத்தும் ஆயிரம் பொன்" படத்தை இயக்கிய ஆனந்த் ரவிசந்திரன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்
ஜிவி பிரகாஷ் நடிப்பில் நிகேஷ் இயக்கத்தில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் "ரெபெல்". இந்த படம் வெளியாகி மக்களிடையே கலந்த விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதை அடுத்து, ஒளிப்பதிவாளர் பி. வி சங்கரின் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் "கள்வன்". ஜனவரி மாதம் இப்படத்தின் டீசர் வெளியானது. பாரதிராஜா, இவானா மற்றும் தீனா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 4 வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் அடுத்ததாக நடித்திருக்கும் படம் "டியர்". "செத்தும் ஆயிரம் பொன்" படத்தை இயக்கிய ஆனந்த் ரவிசந்திரன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். ஐஷ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷும் ஐஷ்வர்யா ரஜேஷும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது.
மனைவி குறட்டை சத்தத்தினால் அவதிப்படும் கணவனை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
"டியர்" படம் வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஜிவி பிரகாஷிற்கு அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளதால், ரசிகர்கள் உற்சகத்தில் உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நான் மதுரை திருப்பரங்குன்றத்தில் இருந்து டெல்லிக்கு வந்து விருதை வென்றுள்ளேன். என்னால் முடியும் என்றால் உங்கள் எல்லாராலும் வெல்ல முடியும்.
- இந்தி சினிமாவில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை குவித்தது ஜவான்.
அட்லீ குமார் தனது 19வது வயதில் சங்கரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். எந்திரன் மற்றும் நண்பன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
இதைஅடுத்து, ஆர்யா, சந்தானம் , நசிரியா, நயன்தாரா, ஜெய் நடிப்பில் 2013 வெளிவந்த ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார் அட்லீ.
பின்னர், நடிகர் விஜய் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு தெறி, 2017 ஆம் ஆண்டு மெர்சல் மற்றும் 2019 ஆம் ஆண்டு பிகில் என அடுத்தடுத்து 3 ஹிட் படங்களை இயக்கினார் அட்லீ.
3 படங்களுமே வசூலை அள்ளியது. இதற்கு அடுத்து 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஐகானான நடிகர் ஷாருக்கான் நடிப்பில் "ஜவான்" படத்தை இயக்கி பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.
நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுக்கோண் நடித்த இப்படம் இந்தி சினிமாவில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை குவித்தது ஜவான்.இந்தி சினிமாவில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை குவித்தது ஜவான்.
புதுடெல்லியில் நேற்று 'NDTV-ன் இந்தியன் ஆஃப் தி இயர்' விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் ஜவான் படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான விருதை அட்லீ வென்றார். மத்திய அமைச்சரான ஹர்தீப் புரி அட்லீக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
இந்த விழாவில் ஜவான் படம் ஷாருக்கனை வைத்து இயக்க தோன்றியது ஏன் என்ற கேள்விக்கு," ஷாருக்கான் ஒரு மிகப்பெரிய நடிகர். "க்ளோபல் ஐகான்" அவரை வைத்து சமூக கருத்து நிறைந்த ஒரு படத்தை எடுக்க வேண்டும் என நினைத்தேன்" என்றார் அட்லீ.
பின் அட்லீ 2019 ஆம் ஆண்டில் ஷாருக்கானை சந்தித்த நிகழ்வைப் பற்றி பகிர்ந்துக் கொண்டார்.
"நானும் ஷாருக்கான் சாரும் 2019 ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல் போட்டிக்கு சென்றோம். சென்னை சூப்பர் கிங்க்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைப்பெற்றது. அப்போது, நானும் ஷாருக்கான் சாரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது. அந்த புகைப்படத்தைப் பார்த்து வாழ்த்தியவர்கள் சில பேர் மட்டும்தான்.
அதை விமர்சித்தவர்கள் தான் நிறைய பேர். ஷாருக்கானுடன் சேர்ந்து எப்படி இவனால் படம் எடுக்க முடியும்? இவன் சரியானவனா, அவர் முன்னாடி நிற்கும் தகுதி இவனுக்கு இருக்கா ? என பலப்பேர் விமர்சித்தனர். அவர்களுக்கான பதில் தான் இந்த விருது. அனைத்து ஹேட்டர்ஸ்க்கும் நன்றி" என தெரிவித்தார்.
மேலும்," நான் மதுரை திருப்பரங்குன்றத்தில் இருந்து டெல்லிக்கு வந்து விருதை வென்றுள்ளேன். என்னால் முடியும் என்றால் உங்கள் எல்லாராலும் வெல்ல முடியும். யாருக்காகவும் உங்கள் கனவை விட்டு கொடுத்து விடாதீர்கள். உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை நோக்கி பயணியுங்கள்" என்றார் அட்லீ.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது
- கேரளாவில் இருந்து கிளம்புவதற்கு முன்பு கூட கேரள ரசிகர்களை விஜய் சந்த்தித்து பேசினார்.
லியோ வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. கேரள ரசிகர்களின் அன்பு வெள்ளத்தில் நான்கு நாட்களாக மிதந்தார் விஜய். அவர் கேரளாவில் காலடி எடுத்து வைத்ததிலிருந்து ரசிகர்கள் அவரை சூழ்ந்துக் கொண்டனர்.
அவர்களின் அன்பை பெற்ற விஜய், நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்களை சந்தித்து வந்தார். கேரளாவில் இருந்து கிளம்புவதற்கு முன்பு கூட கேரள ரசிகர்களை விஜய் சந்த்தித்து பேசினார்.
அவரின் மனமார்ந்த நன்றியை மலையாலத்திலேயே கேரள ரசிகர்களிடம் கூறினார். படப்பிடிப்பை முடித்து விட்டு விஜய் மற்றும் படக்குழு சென்னை திரும்பினர். அடுத்த கட்டமான படப்பிடிப்பை ரஷ்ஷியாவின் தலை நகரமான மாஸ்கோவில் படம்பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் வெங்கட் பிரபு அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்துடன்," தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" படத்தின் போஸ்டர் ஷூட்டின் போது விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் என்றும் நடிகர் விஜய்க்கும் அதை எடுத்த புகைப்பட கலைஞரான சுதர்ஷனுக்கும் நன்றியை தெரிவித்து வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- குருதிபுனல் படத்தில் முதல் முதலாக டோல்பி ஸ்டீரியோ சவுண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தினார்.
- நடன இயக்குனரான சுந்திரம் மாஸ்டருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்
நடிகர் கமல்ஹாசன் சினிமாவின் மீது அதிகம் பற்று கொண்டவர். தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு கமல்ஹாசனுக்கு உண்டு. புது புது தொழில் நுட்பத்தை தமிழ் சினிமாவிற்கு அவர் எடுக்கும் படங்கள் மூலம் அறிமுகம் செய்துள்ளார். வெற்றியோ தோல்வியோ கமல்ஹாசன் அதை பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார், புதுப்புது முயற்சிகளையும், சோதனைகளையும் செய்து கொண்டே இருப்பார்.
முதன் முதலில் 1986 ஆம் ஆண்டு அவர் நடித்து வெளியான விக்ரம் படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் கணினியை வைத்து ரெக்கார்ட் செய்யப்பட்ட பாடல்கள். 1994 ஆம் ஆண்டு வெளிவந்த மகாநதி படத்தில் ஏவிட் என்ற எடிட்டிங் சாஃப்ட்வேரை அறிமுகப் படுத்தினார்.
குருதிபுனல் படத்தில் முதல் முதலாக டோல்பி ஸ்டீரியோ சவுண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தினார். லைவ் சவுண்ட் ரெகார்டிங் தொழில்நுட்பத்தை விருமாண்டி படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில் கமல்ஹாசன் இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் அவர்களின் பெருமையை போற்றும் வகையில் மார்ச் 20 ஆம் தேதி அபூர்வ சிங்கீதம் என்ற திரைப்பட விழா நடத்தினார்.
இத்திரைப்படவிழாவில் ராஜபார்வை, பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மும்பை எக்ஸ்பிரஸ் படங்களை திரையிட்டனர்.
வைரமுத்து, லோகேஷ் கனகராஜ், சிதம்பரம், மணி ரத்னம், சுகாசினி போன்ற பல திரைப்பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இந்நிலையில் கமல்ஹாசன் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கமல்ஹாசன் நடன இயக்குனரான சுந்திரம் மாஸ்டருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் "அன்ணாத்த ஆடுறார்" அபூர்வ சிங்கீதம் நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுந்திரம் மாஸ்டரூடன் ஒத்தைகாலில் நின்று ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொண்டேன் என்று பதிவு செய்திருக்கிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கல்லூரியில் படித்து கொண்டே பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கும் இளைஞரின் வறுமையை உணர்ந்து அந்த மாணவருக்கு பைக்கை பரிசாக பாலா வழங்கினார்.
- நடிகர் பாலா ஏழை இளைஞருக்கு பைக் வழங்கிய சம்பவத்தை பொம்மையாக உருவாக்கி உள்ளார்
சின்னத்திரை காமெடி நடிகராக லட்சக் கணக்கானோர் மனதில் இடம் பிடித்தவர் பாலா. இவரது சமூக சேவை பணிகள் வைரலாகி வருகின்றன.
அந்த வகையில் மேல்மருவத்தூரில் கல்லூரியில் படித்து கொண்டே பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கும் இளைஞரின் வறுமையை உணர்ந்து அந்த மாணவருக்கு பைக்கை பரிசாக பாலா வழங்கினார்.
அனைவராலும் பாராட்டப்பட்ட இதனை செய்தியாக கடந்து விடாமல் கலை சிற்பமாக மாணவர் ஒருவர் வடிவமைத்துள்ளார். புதுச்சேரி சேலியமேடு கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர் ஜெகதீஷ் கலை பொம்மையாக மாற்றியுள்ளார்.
பள்ளியின் நுண்கலை ஆசிரியர் உமாபதி கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களுக்கு கிராமங்களில் கிடைக்கும் பயனற்ற தேங்காய் குருமி,தென்னை நார், சுரக்காய் குடுவை போன்றவற்றைக் கொண்டு கலைநயமிக்க பொம்மைகளை உருவாக்கும் பயிற்சி அளித்து வந்தார்.
இதில் பயிற்சி பெற்ற மாணவர் ஜெகதீஷ்,நடிகர் பாலா ஏழை இளைஞருக்கு பைக் வழங்கிய சம்பவத்தை பொம்மையாக உருவாக்கி உள்ளார்.இந்த பைக் பொம்மையை பாலாவுக்கு தான் தர விரும்புவதாக கூறியுள்ளார்.
தான் சென்னைக்கு செல்ல இயலாது என்ற காரணத்தினால் புதுச்சேரிக்கு நடிகர் பாலா எப்பொழுது வருகிறாரோ அப்போது தருவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஜெயம் ரவி முக்கியமானவர்
- அறிமுக இயக்குனரான புவனேஷ் அர்ஜுனன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரித்து இருக்கிறது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஜெயம் ரவி முக்கியமானவர். டிக் டிக் டிக் படத்தில் விண்வெளி வீரனாக, வனமகன் படத்தில் காட்டுவாசியாகவும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சைரன், அகிலன் , இறைவன் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக அவர் நடித்து கொண்டு இருக்கும் படம் ஜீனி. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.
இதில் ஒரு அலாவுதீன் பூதத்தைப்போல் தோற்றம் அளித்துள்ளார். உண்மையில் அவர் எப்பேர்பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார் என்று படத்தின் டிரெய்லர் வெளியானால் தான் தெரியும்.
அறிமுக இயக்குனரான புவனேஷ் அர்ஜுனன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரித்து இருக்கிறது.
கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஃபேண்டசி கதைக்களத்துடன் அமைந்துள்ள ஜீனி படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம்தான் ஜெயம் ரவி திரை பயணத்தில் மிகப் பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்ட படம். படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. 60 கோடிக்கு மேல் ஜீனி படத்தின் டிஜிட்டல் உரிமை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்