சிம்பு-க்கு பதில் விஷ்ணு - கொரோனா குமாருக்கு பதில் 'வைப் குமார்'

ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளிவந்த சிங்கப்பூர் சலூன் படத்தை கோகுல் இயக்கினார்.படத்தின் தலைப்பை கொரோனா குமாரில் இருந்து வைப் குமார் என்று மாற்றியுள்ளார்.
சிம்பு-க்கு பதில் விஷ்ணு - கொரோனா குமாருக்கு பதில் 'வைப் குமார்'
Published on

இயக்குனர் கோகுல் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் வெளியாகியது. விஜய் சேதுபதி, அஸ்வின், சுவாதி, நந்திதா, பசுபதி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்தனர். இப்படம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தது. அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் 2018 ஆம் ஆண்டு ஜுங்கா படத்தை இயக்கினார்.

இதற்கடுத்து 2020 ஆம் ஆண்டு கொரொனா குமார் என்ற படத்தை சிம்பு நடிப்பில் இயக்க இருந்தார். ஆனால் சுழ்நிலைக் காரணமாக அப்படம் கைவிடப்பட்டது. ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளிவந்த சிங்கப்பூர் சலூன் படத்தை கோகுல் இயக்கினார்.

இந்நிலையில் அடுத்ததாக விஷ்ணு விஷால் நடிப்பில் படம் இயக்கவுள்ளார் . சிம்பு முதலில் நடிக்க இருந்த கொரோனா குமார் கதையைதான் இப்பொழுது விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்க போகிறார். படத்தின் தலைப்பை கொரோனா குமாரில் இருந்து வைப் குமார் என்று மாற்றியுள்ளார். இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கும் இப்படத்திற்கும் தொடர்பு இருக்கிறது என கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி இப்படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது. 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com