நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார்

ஏ 1 படத்தில் இவர் நடித்த அனைத்து நகைச்சுவை காட்சிகளும் ஹிட் ஆனது.நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்தார்.
நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார்
Published on

தமிழ் சின்னத்திரையில் "லொள்ளு சபா" என்கிற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் சேஷூ. இவர் தனது தனித்துவமான நகைச்சுவை பாணியைக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

சந்தானம் நடிக்கும் பெரும்பாலான படங்களில் நடிகர் சேஷு நடித்துள்ளார்.

ஏ 1 படத்தில் இவர் நடித்த அனைத்து நகைச்சுவை காட்சிகளும் ஹிட் ஆனது. முக்கியமாக "அச்சச்சோ அவரா பயங்கரமான ஆள் ஆச்சே" என்று அவர் நடித்த காட்சிகள் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.

இதற்கு அடுத்து  வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் அவர் நடித்த காட்சிகள் அனைவராலும் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்தார். அவரின் சிகிச்சைக்காக பலர் நிதி திரட்டி கொடுத்தனர்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இச்செய்தி திரைப்பட கலைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com