ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஜெயம் ரவி முக்கியமானவர்அறிமுக இயக்குனரான புவனேஷ் அர்ஜுனன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரித்து இருக்கிறது.
ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
Published on: 

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஜெயம் ரவி முக்கியமானவர். டிக் டிக் டிக் படத்தில் விண்வெளி வீரனாக, வனமகன் படத்தில் காட்டுவாசியாகவும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சைரன், அகிலன் , இறைவன் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக அவர் நடித்து கொண்டு இருக்கும் படம் ஜீனி. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.

இதில் ஒரு அலாவுதீன் பூதத்தைப்போல் தோற்றம் அளித்துள்ளார். உண்மையில் அவர் எப்பேர்பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார் என்று படத்தின் டிரெய்லர் வெளியானால் தான் தெரியும்.

அறிமுக இயக்குனரான புவனேஷ் அர்ஜுனன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரித்து இருக்கிறது.

கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

ஃபேண்டசி கதைக்களத்துடன் அமைந்துள்ள ஜீனி படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம்தான் ஜெயம் ரவி திரை பயணத்தில் மிகப் பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்ட படம். படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. 60 கோடிக்கு மேல் ஜீனி படத்தின் டிஜிட்டல் உரிமை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com