காமெடி நடிகர் பாலாவுக்கு பரிசளிக்க பைக் பொம்மை தயார் செய்த மாணவர் ஜெகதீஸ்

கல்லூரியில் படித்து கொண்டே பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கும் இளைஞரின் வறுமையை உணர்ந்து அந்த மாணவருக்கு பைக்கை பரிசாக பாலா வழங்கினார்.நடிகர் பாலா ஏழை இளைஞருக்கு பைக் வழங்கிய சம்பவத்தை பொம்மையாக உருவாக்கி உள்ளார்
காமெடி நடிகர் பாலாவுக்கு பரிசளிக்க பைக் பொம்மை தயார் செய்த மாணவர் ஜெகதீஸ்
Published on

சின்னத்திரை காமெடி நடிகராக லட்சக் கணக்கானோர் மனதில் இடம் பிடித்தவர் பாலா. இவரது சமூக சேவை பணிகள் வைரலாகி வருகின்றன.

அந்த வகையில் மேல்மருவத்தூரில் கல்லூரியில் படித்து கொண்டே பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கும் இளைஞரின் வறுமையை உணர்ந்து அந்த மாணவருக்கு பைக்கை பரிசாக பாலா வழங்கினார்.

அனைவராலும் பாராட்டப்பட்ட இதனை செய்தியாக கடந்து விடாமல் கலை சிற்பமாக மாணவர் ஒருவர் வடிவமைத்துள்ளார். புதுச்சேரி சேலியமேடு கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர் ஜெகதீஷ் கலை பொம்மையாக மாற்றியுள்ளார்.

பள்ளியின் நுண்கலை ஆசிரியர் உமாபதி கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களுக்கு கிராமங்களில் கிடைக்கும் பயனற்ற தேங்காய் குருமி,தென்னை நார், சுரக்காய் குடுவை போன்றவற்றைக் கொண்டு கலைநயமிக்க பொம்மைகளை உருவாக்கும் பயிற்சி அளித்து வந்தார்.

இதில் பயிற்சி பெற்ற மாணவர் ஜெகதீஷ்,நடிகர் பாலா ஏழை இளைஞருக்கு பைக் வழங்கிய சம்பவத்தை பொம்மையாக உருவாக்கி உள்ளார்.இந்த பைக் பொம்மையை பாலாவுக்கு தான் தர விரும்புவதாக கூறியுள்ளார்.

தான் சென்னைக்கு செல்ல இயலாது என்ற காரணத்தினால் புதுச்சேரிக்கு நடிகர் பாலா எப்பொழுது வருகிறாரோ அப்போது தருவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com