காதலனுடன் முட்டிப் போட்டு ஏறிய ஜான்வி கபூர்

ஜான்வி கபூர் திருப்பதி வந்தது முதல் விமானத்தில் கேக் வெட்டி கொண்டாடியது வரை அவரது காதலன் ஷிகா பஹிரியா தனது செல்போனில் வீடியோ போட்டோக்களாக பதிவு செய்து இருந்தார். ஜான்வி கபூர் தனது காதலனுடன் முட்டி போட்டபடி மலை பாதையில் உள்ள படிக்கட்டில் 3 மணி நேரம் ஏறி சென்றார்.
காதலனுடன் முட்டிப் போட்டு ஏறிய ஜான்வி கபூர்
Published on

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் தற்போது இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

ஜான்வி கபூர் தனது தாயைப் போலவே அடிக்கடி ஆன்மீக சுற்றுலாவாக கோவில்களுக்கு சென்று வருகிறார்.

அதன்படி ஜான்வி கபூர் தனது பிறந்த நாளை முன்னிட்டு அவரது காதலன் என கூறப்படும் ஷிகா பஹாரியா மற்றும் அவரது நண்பர் ஓரியுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார்.

ஜான்வி கபூர் மற்றும் அவரது காதலன் இருவரும் வெள்ளை நிற பேண்ட், வெளிர் நிறத்தில் குர்தாவும் அணிந்து இருந்தனர்.

பின்னர்ஜான்வி கபூர் தனது காதலனுடன் முட்டி போட்டபடி மலை பாதையில் உள்ள படிக்கட்டில் 3 மணி நேரம் ஏறி சென்றார். அதன் பிறகு முட்டி போட்டபடி செல்ல சிரமம் அடைந்ததால் நடந்து சென்றார்.

ஜான்வி கபூரை அடையாளம் கண்ட பக்தர்கள் அவருடன் சேர்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்த பிறகு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

விமானத்திலேயே கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். ஜான்வி கபூர் திருப்பதி வந்தது முதல் விமானத்தில் கேக் வெட்டி கொண்டாடியது வரை அவரது காதலன் ஷிகா பஹிரியா தனது செல்போனில் வீடியோ போட்டோக்களாக பதிவு செய்து இருந்தார். அவரது செல்போன் பதிவுகளை தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com