என் மலர்
நீங்கள் தேடியது "isari ganesh"
- பல வெற்றி திரைப்படங்களை தயாரித்துள்ளது ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்நெர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்
- இயக்குகிறார்கள் என்ற பட்டியலை தயாரிப்பு நிறுவனம் வீடியோவாக வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி மற்றும் பல வெற்றி திரைப்படங்களை தயாரித்துள்ளது ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்நெர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம். இதுவரை தமிழ் சினிமாவில் 25 திரைப்படங்களை தயாரித்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு பிரபுதேவா நடித்த தேவி திரைப்படத்திஅ முதன் முதலில் தயாரித்தது.
சமீபத்தில் ஜீவா நடித்த அகத்தியா மற்றும் மிர்ச்சி சிவா நடித்த சுமோ திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்நிலையில் அடுத்து இரண்டு ஆண்டுகளில் 10 திரைப்படங்களை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. அப்படத்தை யார் யார் இயக்குகிறார்கள் என்ற பட்டியலை தயாரிப்பு நிறுவனம் வீடியோவாக வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் அடுத்து திரைப்படம் இயக்கும் இயக்குநர்கள் பின்வருமாறு
டாடா படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு
கட்டா குஸ்தி படத்தை இயக்கிய செல்ல அய்யாவு
போர் தொழில் புகழ் விக்னேஷ் ராஜா
கனா புகழ் அருண்ராஜா காமராஜ்
2018 என்ற மலையாள படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப்,
96, மெய்யழகன் புகழ் பிரேம் குமார்
மாரிசெல்வராஜ், வெற்றிமாறன், கவுதம் வாசுதேவ் மேனன், சுந்தர் சி ஆகியோர் திரைப்படங்களை இயக்கவுள்ளனர்.
இன்னும் வரும் இரண்டு ஆண்டுகளில் மிகவும் தரமான திரைப்படங்கள் இந்த நிறுவனத்தின் கீழ் உருவாகி வெளியாக இருக்கிறது.
- தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணம் மிக பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது.
- விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பெற்றோர் மட்டுமே கலந்து கொண்டு இருந்தனர்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று விஜய் அறிவித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதன்பிறகு முழு அரசியல் பணிகளில் விஜய் ஈடுபட உள்ளார்.
இதனிடையே, சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணம் மிக பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது. திருமணத்திற்கும், அதன்பின் நடைபெற்ற திருமண வரவேற்பிற்கும் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் பங்கேற்று இருந்தனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு இருந்தனர். நடிகை ஷாலினியும் பங்கேற்றார்.


திருமண நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பெற்றோர் மட்டுமே கலந்து கொண்டு இருந்தனர். அவருடைய கட்சி சார்பாக ஆதவ் அர்ஜூனா வந்திருந்தார். திருமண வரவேற்பில் 25,000 பேருக்கு மேல் கலந்து கொண்டதால் நகர கூட முடியாமல் அனைவரும் தவித்துள்ளனர். இதற்கிடையில் விஜயும் வந்தால் இன்னும் கூட்டம் அலைமோதும் என்ற காரணத்தினால் தான் அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனது வீட்டில் ஒரு நாள் ஐசரி கணேஷின் மகள்- மருமகனுக்கு ஸ்பெஷல் விருந்து வைப்பதாக விஜய் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தமிழ் சினிமாத்துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று வேல்ஸ் நிறுவனமாகும்.
- இவரது மகளான ப்ரீத்தி-க்கு நேற்று திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
தமிழ் சினிமாத்துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று வேல்ஸ் நிறுவனமாகும்.இதன் உரிமையாளர் ஐசரி கணேஷ் ஆவார். இவரது மகளான ப்ரீத்தி-க்கு நேற்று திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இந்த விழாவில் தமிழ் சினிமாத்துறை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.
மேலும் நேற்று ஐசரி கணேஷ் அனாதை இல்லம் மற்றும் முதியோர் இல்லங்களில் இருந்து 1500 மேற்பட்ட ஆதரவற்ற மக்கள் இவரது மகள் திருமணத்தில் கலந்துக் கொண்டனர். அவர்கள் மணமக்களை அசிர்வதித்து மனதார உணவை உண்டு மகிழ்ந்தனர். பல மாற்று திறனாளிகள் கலை நிகழ்ச்சிகளை செய்தனர். இவர்களுடன் ஐசரி கணேஷும் இணைந்து ஆடினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அனைவரும் இவர் செய்த இந்த நற்காரியத்தை இணையத்தில் பாராடி வருகின்றனர்.
- புவனேஷ் அர்ஜுனன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரித்து இருக்கிறது.
- ஃபேண்டசி கதைக்களத்துடன் அமைந்துள்ள ஜீனி படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
மணி ரத்னம் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான பொன்னின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மனாக மக்களின் மனதை கவர்ந்தார் ஜெயம் ரவி. பின் நயந்தாராவுடன் இணைந்து இறைவன் படத்தில் நடித்தார்.
ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, யோகி பாபு, அனுபமா பரமேஸ்வரன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வெளியாகியது சைரன் படம்.
மக்கள் மத்தியில் சைரன் திரைப்படம் நல்ல பெயரை வாங்கியது. இதைத் தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக ஜீனி படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான புவனேஷ் அர்ஜுனன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரித்து இருக்கிறது.
கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஃபேண்டசி கதைக்களத்துடன் அமைந்துள்ள ஜீனி படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.இப்படம்தான் ஜெயம் ரவி திரை பயணத்தில் மிகப் பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்ட படம். படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை மதியம் 2 மணியளவில் வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஜெயம் ரவி முக்கியமானவர்
- அறிமுக இயக்குனரான புவனேஷ் அர்ஜுனன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரித்து இருக்கிறது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஜெயம் ரவி முக்கியமானவர். டிக் டிக் டிக் படத்தில் விண்வெளி வீரனாக, வனமகன் படத்தில் காட்டுவாசியாகவும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சைரன், அகிலன் , இறைவன் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக அவர் நடித்து கொண்டு இருக்கும் படம் ஜீனி. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.
இதில் ஒரு அலாவுதீன் பூதத்தைப்போல் தோற்றம் அளித்துள்ளார். உண்மையில் அவர் எப்பேர்பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார் என்று படத்தின் டிரெய்லர் வெளியானால் தான் தெரியும்.
அறிமுக இயக்குனரான புவனேஷ் அர்ஜுனன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரித்து இருக்கிறது.
கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஃபேண்டசி கதைக்களத்துடன் அமைந்துள்ள ஜீனி படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம்தான் ஜெயம் ரவி திரை பயணத்தில் மிகப் பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்ட படம். படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. 60 கோடிக்கு மேல் ஜீனி படத்தின் டிஜிட்டல் உரிமை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பி.டி.சார். படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
- படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வரும் 24-ந் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது .
ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பி.டி.சார். படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகியாக காஷ்மிரா மற்றும் அனிகா சுரேந்திரன், பிரனதி, பிரபு, கே.பாக்யராஜ், பாண்டியராஜன், தியாகராஜன், முனீஸ் காந்த், மதுவந்தி உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வரும் 24-ந் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது . இதையொட்டி படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னையில் நேற்று மாலை நடந்தது.
விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கலந்து கொண்டு பேசியதாவது:-
எங்கள் நிறுவனத்தில் இந்தப் படத்தை தயாரித்தது திருப்திகரமாக உள்ளது. இந்த கதையை ஆதி என்னிடம் கூறியவுடன் உடனே தயாரிக்க சம்மதம் சொன்னேன். இப்பொழுது படத்தை பார்க்கும் பொழுது முழு திருப்தி ஏற்படுகிறது.
இந்த படத்தில் வருவது போல பி.டி. சாருக்கும், இங்கிலீஷ் டீச்சருக்கும் காதல் என்பது பல இடங்களில் நடந்து கொண்டிருப்பது தான்.என்னுடைய பள்ளி பருவ காலத்திலும் பிடி சாரும் இங்கிலீஷ் டீச்சரும் காதலித்தனர். அவர்கள் காதலை சேர்த்து வைத்து திருமணத்தையே நான் தான் செய்து வைத்தேன். அப்பொழுது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இந்த படத்தில் நல்ல செய்தி இருக்கிறது. குடும்பத்தோடு வந்து பார்க்கும் படமாக இது இருக்கும் என்றார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஐசரி கணேஷ், ரஜினிகாந்த் நடிக்கும் 172-வது படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதே என்று கேட்டதற்கு, இது தொடர்பாக ரஜினிகாந்த்தை சந்தித்தது உண்மை. அவரிடம் பேசி உள்ளோம் விரைவில் நல்ல செய்தி வெளியாகும், இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.







