ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' - நாளை வெளியாகும் பர்ஸ்ட் லுக்

புவனேஷ் அர்ஜுனன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரித்து இருக்கிறது.ஃபேண்டசி கதைக்களத்துடன் அமைந்துள்ள ஜீனி படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' - நாளை வெளியாகும் பர்ஸ்ட் லுக்
Published on

மணி ரத்னம் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான பொன்னின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மனாக மக்களின் மனதை கவர்ந்தார் ஜெயம் ரவி. பின் நயந்தாராவுடன் இணைந்து இறைவன் படத்தில் நடித்தார்.

ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, யோகி பாபு, அனுபமா பரமேஸ்வரன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வெளியாகியது சைரன் படம்.

மக்கள் மத்தியில் சைரன் திரைப்படம் நல்ல பெயரை வாங்கியது. இதைத் தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக ஜீனி படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான புவனேஷ் அர்ஜுனன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரித்து இருக்கிறது.

கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

ஃபேண்டசி கதைக்களத்துடன் அமைந்துள்ள ஜீனி படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.இப்படம்தான் ஜெயம் ரவி திரை பயணத்தில் மிகப் பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்ட படம். படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை மதியம் 2 மணியளவில் வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com