டியர் படத்தின் பாடல் நாளை வெளியீடு

ஜி.வி. பிரகாஷ் அடுத்ததாக நடித்திருக்கும் படம் "டியர்"டியர்" படம் வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது
டியர் படத்தின் பாடல் நாளை வெளியீடு
Published on

நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், மமிதா பைஜூ முன்னணி கதாப்பாத்திரங்களாக நடித்து மார்ச் 22 ஆம் தேதி வெளியாகியது ரெபெல் திரைப்படம். இந்த படம் மக்களிடையே கலந்த விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

ஜி.வி. பிரகாஷ் அடுத்து நடித்த கள்வன் திரைப்படம் ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகிறது. பாரதிராஜா, இவானா மற்றும் தீனா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் அடுத்ததாக நடித்திருக்கும் படம் "டியர்". "செத்தும் ஆயிரம் பொன்" படத்தை இயக்கிய ஆனந்த் ரவிசந்திரன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். ஐஷ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷும் ஐஷ்வர்யா ரஜேஷும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடலான 'மஜா வெட்டிங்' என்ற பாட்டின் ப்ரோமோ வீடியோவை இன்று மாலை வெளியிடுகிறார்கள்.

பாட்டின் முழு வீடியோவை நாளை வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்."டியர்" படம் வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com