search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைது"

    அண்ணாமலை மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.ம.மு.க. கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    திராவிட மாடல் தமிழக அரசை தொடர்ந்து விமர்சனம் என்ற பெயரில் இழிவு படுத்தி பேசி  கோட்டை முற்றுகை என்ற பெயரில் வன்முறையை உத்வேகப்படுத்தி வரும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டுக்கு, தமிழ் மண்ணுக்கு விரோதமாக  பிரச்சனைகளை உருவாக்கி வருகிறார். 

    அதனை நமது திராவிட மாடல் அரசு அனுமதித்து வருவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த சலசலப்பை உருவாக்கியுள்ளது.தேசியக் கட்சி என்ற பெயரில் பா.ஜனதா ஒன்றிய அரசு தமிழகம் மீதான வன்முறை அரசியலுக்கு, மதவாதத்தை தூண்டும் அரசியலுக்கு  அண்ணாமலையை வைத்து அடித்தளம் அமைத்து வருகிறது.  

    அதனை கண்டும் காணாமல் ஜனநாயகம் காத்தல் என்ற பெயரில் விட்டு வைப்பது சரியாகாது. நமது முதல்-அமைச்சரின் திராவிட மாடல் அரசு என்பது திரைவாசகமாய் மட்டும் மாறிப்போகாமல்  நடைமுறை அரசாக அண்ணாவின் கொள்கை, பெரியாரின் வேகம், கலைஞரின் விவேகம் கொண்டு தகுந்த நடவடிக்கை மூலமாக திராவிட மாடல் அரசை முன்னிலைப்படுத்த, வலுப்படுத்த வன்முறை யாளர்களை ஒடுக்க வேண்டும்.

    அண்ணாமலையை கைது செய்ய தக்க சமயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    மாதவரத்தில் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொளத்தூர்:

    மாதவரம் பால்பண்ணை 4 வது யூனிட் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 34).

    இவர் ஆட்டோ ஓட்டி வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் மோகன் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் உறவினர்களான‌ அதே பகுதியை சேர்ந்த பிரபு (வயது 38), திருவெற்றியூர் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெபா (எ) ஜெயகுமார் (வயது 34) மற்றும் சில நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார்.

    அப்போது பிரபுவும், ஜெயகுமாரும் மோகனின் மனைவியை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறிய நிலையில் பிரபுவும் ஜெயகுமாரும் மது பாட்டிலால் மோகனை கடுமையாக தாக்கி குத்தினர். இதில் மோகன் மயங்கினார். பின்னர் அனைவரும் தப்பி சென்று விட்டனர்.

    இந்த நிலையில் மணலி சின்னசாமி நகரில் வசிக்கும் மோகனின் அண்ணன் செந்தில், மோகனை பார்க்க நேற்று மதியம் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு சுயநினைவு இன்றி இருந்த மோகனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். மணலி போலீஸ் உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி, மாதவரம் பால்பண்ணை போலீசார் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மோகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பிரபுவும், ஜெயக்குமாரும் மதுபாட்டிலால் குத்தியதில் மோகன் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் பிரபு, ஜெயக்குமார் இருவரையும் கைது செய்தனர். இவர்களில் ஜெயக்குமார் ரவுடி என்றும் அவர் மீது வழக்குகள் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கேரளாவில் தேயிலை தோட்டத்தில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் உள்ளூர், வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இதற்கிடையில், மேற்குவங்காளத்தை சேர்ந்த தம்பதி தங்கள் 15 வயது மகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன் கேரளாவுக்கு வந்துள்ளனர். அந்த தம்பதி இடுக்கி மாவட்டம் சந்தன்புரா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய வந்துள்ளனர்.

    இந்நிலையில், அந்த சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பருடன் பூபாரா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர். அந்த சிறுமியின் நண்பனும் மேற்குவங்காளத்தை சேர்ந்தவர் தான். அவர் இடுக்கியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

    தேயிலை தோட்டத்தில் இருந்து சிறுமியும் அவரது நண்பரும் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த 4 பேர் சிறுமியின் நண்பரை கடுமையாக தாக்கினர்.

    பின்னர் அந்த சிறுமியை தேயிலை தோட்டத்தில் வைத்து அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இதையடுத்து, சிறுமியின் ஆண் நண்பன் கூச்சலிட்டதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்ததால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

    இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிசென்றது அப்பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்துவந்த தொழிலாளர்கள் என்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து, தப்பியோடிய 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். தீவிர தேடுதல் வேட்டையையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரில் 2 பேர் மேற்குவங்காளத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், 4 பேரில் 2 பேர் சிறுவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது. பின்னர், கைது செய்யப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ரேசன் அரிசியை கடத்திய மா்ம நபா்கள் குறித்து குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
    திருவள்ளூர்:

    கும்மிடிப்பூண்டியில் இருந்து ரெயில் மூலம் ஆந்திரத்துக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக திருவள்ளூர் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து திருவள்ளூா் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுந்தராம்பாள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி உஷா மற்றும் போலீசாா் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலைய வளாகத்தில் சோதனை மேற்கொண்டனா். அப்போது ரெயில் நிலைய நடைமேடை 1-ல் போலீசார் சோதனை செய்தனா். அப்போது, கேட்பாரற்றுக் கிடந்த 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளில் ஒரு டன் ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருவள்ளூா் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா்.

    மேலும், ரேசன் அரிசியை கடத்திய மா்ம நபா்கள் குறித்து குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

    நாமக்கல் அன்பு நகரில் உல்லாச வாழ்க்கைக்காக ஆடு திருடிய 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் அன்பு நகரில் போலீசார் வாகன தணிக்கையில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் 2 சிறுவர்கள் ஆட்டு குட்டியை எடுத்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் ஆட்டுக்குட்டியை போட்டு விட்டு தப்பி ஓடினர். 

    அவர்களை துரத்தி பிடித்த போலீசார் விசாரணை செய்ததில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் நாமக்கல் இ.பி. காலனி, மற்றும் கொண்டிசெட்டிபட்டியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்கள் நாமக்கல் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்தனர். 

    இந்த நிலையில் பள்ளியில் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு எஸ்.கே.நகரில் உள்ள ஒரு வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி கொண்டு துத்திக்குளம் பகுதியில் ஆட்டுக்குட்டியை திருடி சென்றுள்ளனர். மேலும் அவர்கள் உல்லாச வாழ்க்கைக்காக செலவிற்கு ஆடு திருடியதாக போலீசார் விசாரணையில் கூறியுள்ளனர்.

    மேலும் இந்த திருட்டு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட மற்றொரு இளைஞரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
    ஜேடர்பாளையம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன் போக்சோவில் கைது.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்த  17 வயது சிறுமி வெளியில் செல்வதாக கூறி சென்றார். அங்கிருந்து திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில்  சிறுமியை தேடிப்பார்த்தனர். இருப்பினும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

    இது குறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யாக்கண்ணு வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார். 

    இந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த சிறுமியை  ஈரோடு மாவட்டம் கருமாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த   17 வயது சிறுவன் கடத்தி  பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது.  

    இதையடுத்து அவரை போலீசார்  போக்சோ சட்டத்தில் கைது செய்து  நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    சேலம் மாநகரில் 5 மாதங்களில் 55 பேர் குண்டாசில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    சேலம்:

    சேலம் மாநகரில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற  ெதாடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகளை குண்டர் தடுப்பு காவலில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்து வருகிறார்கள்.

    அதன்படி    நடப்பாண்டில் இது வரை ெதாடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 55 ரவுடிகள் குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் மே மாதத்தில் மட்டும் 14 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

     மிக  முக்கிய வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் , தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபடும் நபர்களை  இவ்வாறு  சிறையில் அைடக்கப்பட்டு வருவதாக   போலீஸ் அதிகாரிகள்  தெரிவித்தனர். 
    மத்திய பிரதேசத்தில் ரூ.700 கோடி ஜி.எஸ்.டி. வரி மோசடி தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். 500 போலி நிறுவனங்களை உருவாக்கி, ஆவணங்கள், முகவரிகள், அடையாள அட்டைகளை போலியாக தயாரித்துள்ளனர்.
    போபால்:

    ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதில் முறைகேடுகளை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறர்கள். போலி ரசீது மூலம் சிலர் மோசடியில் ஈடுபடுவது குறித்து புகார்கள் வந்ததையடுத்து ஜி.எஸ்.டி. வரி அதிகாரிகள் அடிக்கடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் ரூ.700 கோடி ஜி.எஸ்.டி. வரி மோசடி தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். 500 போலி நிறுவனங்களை உருவாக்கி, ஆவணங்கள், முகவரிகள், அடையாள அட்டைகளை போலியாக தயாரித்துள்ளனர்.

    இந்த போலி நிறுவனங்கள் மூலம் போலியான ஆவணங்களை பயன்படுத்தி ரூ.700 கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வரி மோசடியில் ஈடுபட்டனர். பல்வேறு செல்போன் எண்களுடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் கணக்குகள் மூலம் பரிவர்த்தனைகளை நடத்தியது தெரியவந்தது.

    இந்தூரில் உள்ள மத்திய ஜி.எஸ்.டி வரி கமிஷன் மற்றும் மத்திய பிரதேச போலீசின் சைபர் பிரிவு ஆகியவற்றின் கூட்டு விசாரணையில் இந்த மிகப்பெரிய மோசடி அம்பலமானது. மோசடி தொடர்பாக 5 பேர் குஜராத் மாநிலம் சூரத்தில் கைது செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஷித்கான் கூறும்போது, ‘மோசடியில் ஈடுபட்டவர்கள் வழக்கமான வங்கி சேவைகளை தவிர்ப்பதற்காக பல டிஜிட்டல் வாலட் கணக்குகள் மூலம் பரிவர்த்தனைகளை செய்துள்ளனர்.

    சோதனையின்போது சூரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருந்த கட்டிடத்தில் போலி நிறுவனங்களின் செல்போன்களின் சிம் கார்டுகள், ஆவணங்கள் லெட்டர் பேடு, முத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. கைதான அனைவரும் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள்’ என்றார்.
    ரஞ்சித், கவிதா உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

    உடுமலை:

    உடுமலை ஏரிப்பாளையத்தை சேர்ந்த அஸ்வின் மனைவி வளர்மதி மற்றும் ரஞ்சித் மனைவி கவிதாவுக்கும், பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருந்தது. கடந்த, 22-ந் தேதி, ரஞ்சித், கவிதா ஆகியோர் சொந்த ஊரான நெல்லைக்கு செல்ல திட்டமிட்டு வீட்டை காலி செய்து கொண்டிருந்தனர்.

    பணத்தை கொடுத்து விட்டு காலி செய்யுமாறு அஸ்வின் மற்றும் அவரது நண்பரான இந்து முன்னணி உடுமலை வடக்கு நகர் பொறுப்பாளராக இருந்த குமரவேல் ஆகியோர் மறித்துள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில், ரஞ்சித் மற்றும் அவருடன் இருந்தவர்கள் குமரவேலை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து தப்பினர்.

    உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நெல்லை மாவட்டம், திசையன்விளை வடக்கு தெருவை சேர்ந்த, சிவானந்தம்(30), தூத்துக்குடி சாவளபேரி ஆதியப்பன், (45), கோவையை சேர்ந்த செந்தில்(31) ஆகியோரை 22-ந்தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் இதில் தொடர்புடைய, கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் ஜான்சன்(31), நெல்லை பாளையங்கோட்டை சமாதானபுரத்தை சேர்ந்த மாரியப்பன் ஆகிய 2பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ரஞ்சித், கவிதா உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

    பள்ளிக்கரணை மற்றும் ராஜமங்கலத்தில் மொத்தம் ஒரு டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    வேளச்சேரி:

    தமிழகத்தில் குட்கா, புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனினும் கடைகளில் புகையிலை விற்பனை தடையை மீறி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் பள்ளிக்கரணை, துலுக்கானத்தம்மன் கோயில் தெருவில் உள்ள கடையில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் கடை மற்றும் வியாபாரியின் வீட்டில் சோதனை நடத்தினர். இதில் அங்கு மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக வியாபாரி ஜெயராம் என்பவரை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    கொளத்தூர், ராஜமங்கலம் பகுதியில் குட்கா, புகையிலை பொருட்கள் கைமாற்றப்படுவதாக அண்ணாநகர் துணை கமிஷனர் சிவ பிரசாத்துக்கு தகவல் கிடைத்தது.

    ராஜமங்கலம் போலீஸ் நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளி சாலையில் தனிப்படை போலீசார் சொகுசு கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தன.

    காரில் இருந்த வாலிபர் கொடுத்த தகவலின் பேரில் அந்த வழியாக வந்த மேலும் 2 கார்களை நிறுத்தி சோதனை செய்தபோது அதிலும் குட்கா மூட்டைகள் இருந்தன. இதையடுத்து கார்களில் இருந்த 520 கிலோ குட்கா, புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக கார்களில் இருந்த கோவில்பட்டியைச் சேர்ந்த முருகன், படப்பை பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வம் , சுகுமார், ஆண்டனி பாஸ்கர், குன்றத்தூரை சேர்ந்த குமார், கார்த்திக் ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் 3 கார் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    பள்ளிக்கரணை மற்றும் ராஜமங்கலத்தில் மொத்தம் ஒரு டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    சேலம் சூரமங்கலம் அடுத்த பெரிய மோட்டூர் பகுதியில் திருவிழாவில் மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது.
    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அடுத்த பெரிய மோட்டூர் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி  இன்று காலையில் நடந்தது. 

    அப்போது அதே ஊரை சேர்ந்த கோபி (வயது 29) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சேலம் டவுன் கிச்சிப்பாளையம் குப்பைமேடு ஹவுசிங் போர்டு காலனியைச்சேர்ந்த  தங்கராஜ் (27) என்பவர் அந்த மோட்டார்சைக்கிளை திருட முயற்சி செய்தார். இதைபார்த்த கோபி ஓடி வந்து அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

    இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு, தங்கராைஜ கைது செய்தனர்.
    திருவிழாவில் மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது
    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அடுத்த பெரிய மோட்டூர் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி  இன்று காலையில் நடந்தது. 

    அப்போது அதே ஊரை சேர்ந்த கோபி (வயது 29) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சேலம் டவுன் கிச்சிப்பாளையம் குப்பைமேடு ஹவுசிங் போர்டு காலனியைச்சேர்ந்த  தங்கராஜ் (27) என்பவர் அந்த மோட்டார்சைக்கிளை திருட முயற்சி செய்தார். இதைபார்த்த கோபி ஓடி வந்து அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

    இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு, தங்கராைஜ கைது செய்தனர்.
    ×