search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேசன் அரிசி
    X
    ரேசன் அரிசி

    கும்மிடிப்பூண்டியில் ரெயிலில் கடத்திய ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல்

    ரேசன் அரிசியை கடத்திய மா்ம நபா்கள் குறித்து குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
    திருவள்ளூர்:

    கும்மிடிப்பூண்டியில் இருந்து ரெயில் மூலம் ஆந்திரத்துக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக திருவள்ளூர் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து திருவள்ளூா் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுந்தராம்பாள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி உஷா மற்றும் போலீசாா் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலைய வளாகத்தில் சோதனை மேற்கொண்டனா். அப்போது ரெயில் நிலைய நடைமேடை 1-ல் போலீசார் சோதனை செய்தனா். அப்போது, கேட்பாரற்றுக் கிடந்த 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளில் ஒரு டன் ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருவள்ளூா் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா்.

    மேலும், ரேசன் அரிசியை கடத்திய மா்ம நபா்கள் குறித்து குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

    Next Story
    ×