search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sankarankovil"

    • சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் அருகே ராஜபாளையம் மெயின் ரோட்டில் முப்புடாதி அம்மன் கோவில் அருகே அரசு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது.
    • இந்த கடை அருகே ஏராளமான குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளது. மேலும் சங்கரநாராயணசுவாமி கோவில் துணைக்கோவிலான முப்புடாதி அம்மன் கோவில் அமைந்துள்ளது.


    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் அருகே ராஜபாளையம் மெயின் ரோட்டில் முப்புடாதி அம்மன் கோவில் அருகே அரசு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடை அருகே ஏராளமான குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளது. மேலும் சங்கரநாராயணசுவாமி கோவில் துணைக்கோவிலான முப்புடாதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தப் பகுதிகளில் அரசு மதுபான கடை அமைந்துள்ளதால் மது குடிப்பவர்களின் நடவடிக்கையால் பள்ளி மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள் பக்தர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அவர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டு வாசலிலே அமர்ந்து மது குடிப்பதால் பொதுமக்களுக்கும் அவர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அரசு மதுபான கடையை அகற்ற கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனக் கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை அரசு மதுகடையை அகற்றக்கோரி நகர்மன்ற உறுப்பினர் சங்கரசுப்பிரமணியன், அய்யப்பா சேவா சங்கத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் திடீரென்று கடை முன்பு முற்றுகை இட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பெண்கள் கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் சங்கரன்கோவில் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உரிய அதிகாரிகள் வந்தால் தான் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வோம் என்று கூறினார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன்கோவில் தாசில்தார் பாபு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்களின் போராட்டம் குறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் கொடுத்து கடையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • ஊர்வலத்திற்கு அகில பாரத துறவியர் பேரவை இணை செயலாளர் சுவாமி ராகவானந்தா ஜீ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
    • கோவில் முன்பு இருந்து தொடங்கிய விநாயகர் ஊர்வலம் மெயின் ரோடு, திருவேங்கடம் சாலை, முக்கிய ரத வீதி வழியாக மீண்டும் கோவில் முன்பு சென்றடைந்தது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சங்கரன்கோவில் நகரில் உள்ள கோமதியாபுரம் தெருக்கள், லட்சுமியாபுரம் தெருக்கள், புதுமனை தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் அமைக்கப்பட்டிருந்த 25 விநாயகர் சிலைகளும், குருக்கள்பட்டி, பனவடலிசத்திரம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்ட 2 சிலைகளும், சங்கர நாராயணசாமி கோவில் முன்பு கொண்டு வரப்பட்டது.

    இதனை தொடர்ந்து நேற்று மாலை கோவில் முன்பு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு அகில பாரத துறவியர் பேரவை இணை செயலாளர் சுவாமி ராகவானந்தா ஜீ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்து முன்னணி தென்காசி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

    பாரதீய மஸ்தூர் சங்க மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் சிறப்புரையாற்றினார். தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்க மாநிலத் துணை தலைவர் மாரிமுத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கோவில் முன்பு இருந்து தொடங்கிய விநாயகர் ஊர்வலம் மெயின் ரோடு, ராஜ பாளையம், திருவேங்கடம் சாலை, முக்கிய ரத வீதி வழியாக மீண்டும் கோவில் முன்பு சென்றடைந்தது.

    இந்த ஊர்வலத்தில் பா.ஜனதா மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், நகர பொதுச்செயலாளர் மணிகண்டன், நகர செயலாளர் சுப்பிரமணியன், இந்து முன்னணி நெல்லை கோட்ட அமைப்பாளர் ஆறுமுகச்சாமி, இந்து முன்னணி நகர பொருளாளர் குருச்சந்திரன், பொதுச் செயலாளர் விஜய் பாலாஜி, நகர செயலாளர்கள் சங்கர், மாரிமுத்து, இளைஞரணி செயலாளர் பாலகுமார் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைத்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
    • இதையடுத்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சென்னையில் முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    சங்கரன்கோவில்:

    கடந்த 11-ந் தேதி தியாகி இம்மானு வேல் சேகரனின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு நீண்ட நாள் கோரிக்கையான பரமக்குடி யில் அவருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைத்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தென்காசி மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் சார்பில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சென்னையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    அப்போது அமைச்சர்கள் ராஜகண்ணப்பன் மற்றும் கயல்விழி செல்வராஜ் , சண்முகையா எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.

    • சங்கரன்கோவிலில் நெடுஞசாலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் சாலை திட்டப்பணிகளை தலைமை பொறியாளர் சந்திரசேகரன் ஆய்வு செய்தார்.
    • தலைமைப் பொறியாளர் சந்திரசேகரன் மரக்கன்றுகளை நட்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் சாலைப்பணியாளர்களுக்கு மரங்கள் நடுவது குறித்து ஆலோசனை வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு மற்றும் கோட்டப்பணிகளை சென்னை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் சந்திரசேகரன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது சங்கரன்கோவிலில் நெடுஞசாலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் சாலை திட்டப்பணிகள், வடகிழக்கு பருவ மழைக்கால முன்னேற்பாடு ஆயத்தப்பணிகள், சாலைகள் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார். சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் சென்னை தலைமைப் பொறியாளர் சந்திரசேகரன் மரக்கன்றுகளை நட்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் சாலைப்பணியாளர்களுக்கு மரங்கள் நடுவது குறித்து ஆலோசனை வழங்கினார். திட்டப்பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது, தென்காசி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை கோட்ட பொறியாளர் ராஜசேகர், சங்கரன்கோவில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள், உதவி பொறியாளர்கள் பலவேசம், முத்துமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் சென்னையில் நடைபெற்ற ஜோனல் போட்டியில் பங்கேற்ற மாணவி கபிலாவிற்கு ராஜா எம்.எல்.ஏ. பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    சங்கரன்கோவில்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சங்கரன் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பள்ளிக்கு மேஜைகள் மற்றும் இருக்கைகள் வழங்கினார்.

    தொடர்ந்து ஓட்டபயிற்சி மேற்கொள்ளும் மாணவி களுக்கு ஷூக்கள் வழங்க ப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு இந்த பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் நுழைந்துள்ள ஊத்துமலையை சேர்ந்த மாணவி கலைச்செல்விக்கு ஸ்டெதஸ்கோப் மறற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். தொடர்ந்து மாவட்ட அளவில் செஸ் போட்டியில் வெற்றி பெற்று சென்னையில் நடைபெற்ற ஜோனல் போட்டியில் பங்கேற்ற மாணவி கபிலாவிற்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    இதில் மாவட்ட துணைச்செயலாளர் புனிதா, மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் மாரியப்பன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் அணி கார்த்தி, மாணவரணி துணை அமைப்பாளர் வீரமணி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக் குழு உறுப்பினர் சங்கர், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பிரகாஷ், நகர துணைச் செயலாளர்கள் சுப்புத்தாய், முத்துக்குமார் வார்டு செயலாளர் பழனிச்சாமி, காவல் கிளி, ஜான், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தாட்கோ மூலம் மானிய விலையில் வங்கி கடன் 14 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சம் கனரா வங்கி சார்பில் வழங்கப்பட்டது.
    • புதிதாக வாங்கப்படும் கறவை மாடுகளிலிருந்து உற்பத்தியாகும் பால் முழுவதையும் ஆவினுக்கு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை பால்வளத்துறை மற்றும் ஆவின் இணைந்து நடத்திய கடன் வழங்கும் நிகழ்ச்சி 0.1884 சங்கரன்கோவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். துணைப்பதிவாளர் (பால்வளம்) நெல்லை மற்றும் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன் முன்னிலை வகித்தனர். இதில் தாட்கோ மூலம் மானிய விலையில் வங்கி கடன் 14 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சம் கனரா வங்கி சார்பில் வழங்கப்பட்டது.

    மேலும் 80 பயனாளி களுக்கு தாட்கோ மூலம் வங்கி கடன் விரைவில் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. விழாவில் அரசின் சார்பில் பால்வளத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மேலும் மாட்டுக்கடன்கள் குறித்து உறுப்பினர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. புதிதாக வாங்கப்படும் கறவை மாடுகளிலிருந்து உற்பத்தியாகும் பால் முழுவதையும் ஆவினுக்கு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது. இதில் 0.1884 சங்கரநயினார்கோவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செய லாட்சியர், தாட்கோ மேலாளர், தென்காசி, நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர், சங்கரன்கோவில் கனரா வங்கி முதன்மை மேலாளர், சங்கரன்கோவில் தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தென்காசி முதுநிலை ஆய்வாளர் (பால்) தென்காசி நன்றி கூறினார்.

    • எழும்பூர் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளருமான பரந்தாமன், ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் ஒண்டிவீரன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 252-வது நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. எழும்பூர் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளருமான பரந்தாமன் மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஒண்டிவீரன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கர பாண்டியன், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகரச் செயலாளர் பிரகாஷ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் அழகுதுரை, துணை அமைப்பாளர் விஜயபாண்டியன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் முருகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்தி, நகர துணைச் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் அப்துல் காதர் மற்றும் காவல் கிளி, ஜலால், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுவிருந்து நிகழ்ச்சிக்கு கோவில் துணை ஆணையர் ஜான்சிராணி தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொது விருந்தினை தொடங்கி வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் பொதுவிருந்து நிகழ்ச்சி நடந்தது. கோவில் துணை ஆணையர் ஜான்சிராணி தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் முன்னிலை வகித்தார்.

    இதில் தென்காசி வடக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொது விருந்தினை தொடங்கி வைத்து பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். முன்னதாக விருந்தில் பங்கேற்றவர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் வேஷ்டி-சேலைகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, சங்கரன்கோவில் நகரச் செயலாளர் பிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ். மாரியப்பன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சந்திரன், நகர அவை தலைவர் முப்பிடாதி, நகர துணைச் செயலாளர்கள் முத்துக்குமார், சுப்புத்தாய், வார்டு செயலாளர்கள் தங்கவேலு, வீரா, நகராட்சி கவுன்சிலர் செல்வராஜ் மற்றும் அஜய்மகேஷ்குமார், சங்கர்கணேஷ், வக்கீல் ஜெயக்குமார் மற்றும் கோவில் மேற்பார்வையாளர் முத்துராஜ், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற முருகராஜ், தமிழக அளவில் 3-வது இடம் பிடித்து கால்நடை மருத்துவ கல்லூரிக்கு தேர்வான முத்து லட்சுமியை பாராட்டி ஊக்கத்தொகை மற்றும் மருத்துவ உபகரணங்களை முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் குருவிகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் சுப்பையா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள நவநீதகிருஷ்ணபுரத்தில் ஏழ்மை குடும்பத்தில் பிறந்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற முருகராஜ், தமிழக அளவில் 3-வது இடம் பிடித்து கால்நடை மருத்துவ கல்லூரிக்கு தேர்வான அவரது சகோதரி முத்து லட்சுமி மற்றும் அவர்களது பெற்றோர்களையும் பாராட்டி ஊக்கத்தொகை மற்றும் மருத்துவ உபகரணங்களை முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. மாநில மகளிர் அணி துணைச் செயலாளருமான ராஜலெட்சுமி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் குருவிகுளம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுப்பையா பாண்டியன், சங்கரன் கோவில் ஒன்றிய செயலாளர் ரமேஷ், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், சங்கரன்கோ வில் நகர செயலாளர் ஆறுமுகம், மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், நகர ஜெய லலிதா பேரவை செயலாளர் சவுந்தர், நவநீதகிருஷ்ணா புரம் கிளை செயலாளர் அய்யாசாமி, நிர்வாகிகள் பாபு கதிரேசன் சிவஞான ராஜா முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சங்கரன்கோவில் தொகுதியில் 6 பள்ளிகளுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் மேஜைகள் வழங்கப்பட்டு உள்ளது.
    • நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை தெய்வப்பிரியா தலைமை தாங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து சங்கரன்கோவில் தொகுதியில் உள்ள 6 பள்ளிகளுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் மேஜைகள் வழங்கப்பட்டு உள்ளது. சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து பள்ளிகளுக்கு பெஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை தெய்வப்பிரியா தலைமை தாங்கினார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தொகுதியில் உள்ள பள்ளிகளுக்கு பெஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இதில் மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட பிரதிநிதிகள் செய்யது அலி, முத்துக்குமார், நகர அவை தலைவர் முப்புடாதி, நகர துணை செயலாளர்கள் முத்துக்குமார், சுப்புதாய், மாவட்ட ஆதி திராவிட அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ். மாரியப்பன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சந்திரன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் பிச்சை, மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ராஜ், அன்சாரி, மாவட்ட வக்கீல் துணை அமைப்பாளர் காளிராஜ், உதவி தலைமை ஆசிரியர் பூமாரி, உடற்கல்வி இயக்குனர் நாராயணன், தமிழ் ஆசிரியர் சங்கர்ராம், என்.சி.சி. அலுவலர் பாலமுருகன், ஆசிரியர் ராமநாதன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் குமார், துணை தலைவர் குமார், உறுப்பினர்கள் வெங்கடாசலபதி, மனோகரன், வேல்ராஜ் மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த அஜய்மகேஷ்குமார், கணேஷ், ஜெயக்குமார், நகராட்சி கவுன்சிலர் ராஜா ஆறுமுகம், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் செல்வராஜ், சங்கர், குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார்.
    • விஜயகாந்த் பிறந்தநாள் விழாவை நலத்திட்டங்களை வழங்கி கொண்டாடுவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட பொருளாளர் ராமர், செயற்குழு உறுப்பினர்கள் அயூப் கான், குருவையா ஆகியோர் வரவேற்று பேசினர். கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் செந்தில்குமார், சங்கர் அய்யா, துணைச்செயலாளர்கள் மங்கல செல்வி, தங்கமாரி, ஒன்றிய செயலாளர்கள் கடையநல்லூர் லிங்குசாமி, சங்கரன்கோவில் வடக்கு மாரியப்பன், தெற்கு மாரிமுத்து, வடக்கு ராதாகிருஷ்ணன், தெற்கு பாலமுருகன், வீமன், செங்கோட்டை குமார், வாசுதேவநல்லூர் சுப்புராஜ், நகர செயலாளர் கடையநல்லூர் முகமது ரபிக், மாவட்ட தொண்டரணி செயலாளர் கணேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

    கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவை ஏழை, எளிய மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி கொண்டாடுவது, பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இனிப்பு, பேனா, பென்சில் மற்றும் நோட் புத்தகங்கள் வழங்குதல், கட்சியின் தொடக்க நாளான வருகிற செப்டம்பர் 14-ந் தேதி கிளை கழகம் தோறும் கொடி ஏற்றுதல், பொருளாளர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது வருகையை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக கொண்டாடுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • ஸ்ரீகோமதி அம்பாள் பள்ளி வளாகத்தில் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கான கோப்பை சுற்றுப்பயண விழா நடந்தது.
    • நிகழ்ச்சியையொட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலகம் சார்பில் சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சென்னையில் நடைபெற உள்ள 7-வது ஹீரோ ஆசிய ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கான கோப்பை (பாஸ் தி பால்) சுற்றுப்பயண விழா நடந்தது.

    கலெக்டர் ரவிச்சந்திரன்

    நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வினு வரவேற்றார். உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., பாஸ் தி பால் நிகழ்வு மற்றும் கோப்பையினை அறிமுகப்படுத்தி பேசினார்.

    உற்சாக வரவேற்பு

    பின்னர் தனுஷ்குமார் எம்.பி., சதன்திருமலை குமார் எம்.எல்.ஏ.., தென்காசி மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் தமிழ்ச்செல்வி, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன், ஆக்கி யூனிட் ஆப் தென்காசி அமைப்பின் தலைவர் கல்யாணி சுந்தரம் மற்றும் ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் பழனிச்செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    தொடர்ந்து தென்காசி மாவட்டத்திற்கு வந்த கோப்பைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் புனிதா, நகர செயலாளர் பிரகாஷ், மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மாணவரணி உதயகுமார், அப்பாஸ் அலி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சரவணன், ராஜ், அன்சாரி, வீராசாமி, ராமர், ரகுமான் விளையாட்டு மேம்பாட்டு அணி மகாராஜன், தகவல் தொழில் நுட்ப அணி சிவாஜி மற்றும் சதாசிவம், காவல்கிளி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆக்கி யூனிட் ஆப் தென்காசி அமைப்பின் செயலாளர் பால்மகேஷ் நன்றி கூறினார்.

    ×