search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Financial Help"

    • திருமங்கலம் பகுதியில் அ.தி.மு.க. தொண்டர் சுயம்புலிங்கம் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார்.
    • தற்போது சுயம்புலிங்கம் கூடங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    வள்ளியூர்:

    மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாட்டில் நெல்லை மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விபத்தில் சிக்கி காயம்

    இந்த நிலையில் மாநாடு முடிவடைந்து வரும் வழியில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் கூடங்குளத்தை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் சுயம்புலிங்கம் என்பவர் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார்.

    காயம் அடைந்த அவருக்கு மதுரை திருமங்கலத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    உதவித்தொகை

    தற்போது கூடங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவருக்கு முன்னாள் எம்.பி.யும், நெல்லை மாவட்ட பொருளாளருமான சவுந்திரராஜன் மருத்துவ மனைக்கு நேரில் சென்று சுயம்புலிங்கத்திற்கு ஆறுதல் தெரிவித்து மருத்துவ உதவி தொகையை வழங்கினார்.

    உடன் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலா ராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ராதாபுரம் ஒன்றிய பொருளாளர் துரை ராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சுரேஷ் குமார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

    • நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற முருகராஜ், தமிழக அளவில் 3-வது இடம் பிடித்து கால்நடை மருத்துவ கல்லூரிக்கு தேர்வான முத்து லட்சுமியை பாராட்டி ஊக்கத்தொகை மற்றும் மருத்துவ உபகரணங்களை முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் குருவிகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் சுப்பையா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள நவநீதகிருஷ்ணபுரத்தில் ஏழ்மை குடும்பத்தில் பிறந்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற முருகராஜ், தமிழக அளவில் 3-வது இடம் பிடித்து கால்நடை மருத்துவ கல்லூரிக்கு தேர்வான அவரது சகோதரி முத்து லட்சுமி மற்றும் அவர்களது பெற்றோர்களையும் பாராட்டி ஊக்கத்தொகை மற்றும் மருத்துவ உபகரணங்களை முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. மாநில மகளிர் அணி துணைச் செயலாளருமான ராஜலெட்சுமி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் குருவிகுளம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுப்பையா பாண்டியன், சங்கரன் கோவில் ஒன்றிய செயலாளர் ரமேஷ், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், சங்கரன்கோ வில் நகர செயலாளர் ஆறுமுகம், மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், நகர ஜெய லலிதா பேரவை செயலாளர் சவுந்தர், நவநீதகிருஷ்ணா புரம் கிளை செயலாளர் அய்யாசாமி, நிர்வாகிகள் பாபு கதிரேசன் சிவஞான ராஜா முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜெயசெல்வன் சென்னை தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வருகிறார்.
    • பஞ்சாயத்து தலைவர் வேல்முருகன் தனது 5 மாத ஊதியத்தை ஜெயசெல்வனுக்கு வழங்கினார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் அருகே உள்ள வேப்பிலான்குளம் பஞ்சாயத்து சுண்டவளை கிராமத்தை சேர்ந்தவர் சாமுவேல், சமையல் தொழிலாளி. இவரது மகன் ஜெயசெல்வன் (வயது 20).

    மாற்றுத்திறனாளியான இவர் சென்னை தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வருகிறார். கடந்த மாதம் மாநில அளவில் ஈரோட்டில் நடந்த கூடைப்பந்து போட்டி யில் இவரது குழுவினர் முதலிடம் பிடித்தனர்.

    இதைதொடர்ந்து தேசிய அளவில் கடந்த 5-ந்தேதி முதல் 11-ந் தேதி வரை உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான கூடைப்பந்து போட்டியில் தனது குழுவினருடன் கலந்து கொண்டு 2-ம்இடம் பிடித்து சாதனை படைத்தார்.

    சாதனை படைத்த ஜெய செல்வனை பாராட்டிய வேப்பிலான் குளம் பஞ்சயத்து தலைவர் வேல்முருகன் அவருக்கு தனது 5 மாத ஊதியத்தை காசோலையாக வழங்கினார். வெற்றிபெற்றது குறித்து ஜெயசெல்வன் கூறுகையில், மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலியை எனக்கு யாரேனும் வழங்கினால் உலக அளவில் இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் மாண்பினை தலை நிமிர செய்வேன் என்றார்.

    • ஜோசப் நாடார் பனையில் ஏறிவிட்டு கீழே இறங்கும்போது தவறி விழுந்து இறந்தார்.
    • ஜோசப் நாடார் மனைவி ஜெ.முத்துவிடம் சங்கம் நலிந்தோர் நல நிதியில் இருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை கிராமம் அய்யாபுரம் அருகே அழகப்பபுரம் ஊரைச் சேர்ந்தவர் ஜோசப் நாடார். பனை ஏறும் தொழிலாளி. இவர் பனையில் ஏறிவிட்டு கீழே இறங்கும்போது தவறி விழுந்து இறந்தார். இதையடுத்து அவரது மனைவி ஜெ.முத்து என்பவர், தனது கணவர் இறந்து விட்டதால் குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதாகவும், வறுமையில் வாடுவதாகவும் சங்கத்தில் இருந்து உதவி செய்ய கேட்டு மனு கொடுத்திருந்தார்.

    அந்த மனுவை சங்க நிர்வாக சபை கூட்டத்தில் வைத்து பரிசீலனை செய்து உதவி தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஜோசப் நாடார் மனைவி ஜெ.முத்துவிடம் சங்கம் நலிந்தோர் நல நிதியில் இருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், செயலாளர் டி.ராஜ குமார் நாடார், பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார் மற்றும் காரியக்கமிட்டி, நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    • அரியலூர் மாவட்டம், தழுதாழைமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் ரூ.10.05 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி பராமரிப்புக்கான நிதியுதவியை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வழங்கியுள்ளது
    • இந்நிறுவனம் அரசுப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டிற்கு தொடர்ந்து நிதியுதவியளித்து வருகிறது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், தழுதாழைமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கழகத்தின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் ரூ.10.05 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட கட்டடங்கள் திறக்கப்பட்டது.

    விழாவுக்கு ஊராட்சித் தலைவர் திலகவதி மகேந்திரன் தலைமை வகித்தார். ஓஎன்ஜிசி நிறுவனத்தின் காரைக்கால் பிரிவு முதன்மைப் பொது மேலாளர் தி.சாய்பிரசாத் கலந்து கொண்டு ஓஎன்ஜிசி சார்பில் ரூ.10.05 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்து பேசியதாவது-

    நிறுவனத்தின் சார்பில் ரூ.10.5 லட்சம் செலவில் பள்ளி கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டு, மாணவர்கள் அமர்வதற்கு இருக்கை,மேஜைகளும், இதே போல் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்நிறுவனம் அரசுப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டிற்கு தொடர்ந்து நிதியுதவியளித்து வருகிறது.

    பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி, நிறுவனம் நாட்டின் எரிசக்தி தேவையை பெருமளவு பூர்த்தி செய்து வருகிறது. ஆண்டு வருவாயில் குறிப்பிட்ட தொகையை கல்வி, நலவாழ்வு, சுகாதாரம், மருத்துவம், பேரிடர் மேலாண்மை, கிராம மேம்பாடு, விளிம்புநிலை மக்களுக்கான வாழ்வாதாரம், கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவைகளில் அரசு துறைகளுடன் இணைந்து பொதுமக்களுக்கு குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு சேவையாற்றிவருகிறது.

    ஆண்டுக்கு சுமார் ரூ.300 கோடி ரூபாய் அளவுக்கு இந்நிறுவனம் தனது சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் பயனுள்ளவகையில் செலவிட்டு வருகிறது என்றார்.

    ஜெயம்கொண்டம் ரோஸ் அறக்கட்டளை இயக்நனர் ஜான். கே. திருநாவுக்கர, மத்திய அரசின் "சுஜித்தா பக்வாடா" எனும்

    தூய்மையே சேவை திட்டம் குறித்து மக்களிடம் எடுத்துரைத்தார்.

    இந்நிகழ்ச்சிக்கு, ஒன்றியக்குழு உறுப்பினர்சுமதி இளங்கோவன் , பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ம.தனசெல்வி, வார்டு உறுப்பினர்கள் எம். சக்திவேல், பி.சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் க.திருமுருகன் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் சி.அன்பழகன் நன்றி தெரிவித்தார்.

    • காரின் கதவு மூடிக் கொண்டதால் 3 சிறுவர்களும் காரிலேயே மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது
    • முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை நிதியுதவி

    நெல்லை:

    பணகுடி அருகே உள்ள லெப்பைகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகன் நிதிஷ், மகள் நிதிஷா பக்கத்து வீட்டைச் சேர்ந்த மணிகண்டன் மகன் கபிஷன் ஆகியோர் சம்பவத்தன்று வீட்டின் எதிரே உள்ள பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி விளையாடினர்.

    அப்போது திடீரென காரின் கதவு மூடிக் கொண்டதால் திறக்க முடியாமல் 3 சிறுவர்களும் காரிலேயே மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் லெப்பை குடியிருப்பு கிராமத்திற்கு சென்ற அ.தி.மு.க. சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரும் ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இன்பதுரை, பரிதாபமாக உயிரிழந்த 3 சிறுவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களுடைய பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியும் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அழகானந்தம், செல்வராஜ், அந்தோணி அமலராஜா, மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் அருண்குமார், மாவட்ட இணைசெயலாளர் ஞானபுனிதா, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சந்திரமோகன், வள்ளியூர் பேரூர் துணை செயலாளர் கருப்பசாமி, பணகுடி பேரூர் துணை செயலாளர் ஜெகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் தீபக், ரஸ்வின், விவேக், லெப்பை குடியிருப்பு கிளை செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×