search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில்  நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு பணிகளை  தலைமை பொறியாளர் ஆய்வு
    X

    சங்கரன்கோவிலில் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு பணிகளை தலைமை பொறியாளர் ஆய்வு

    • சங்கரன்கோவிலில் நெடுஞசாலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் சாலை திட்டப்பணிகளை தலைமை பொறியாளர் சந்திரசேகரன் ஆய்வு செய்தார்.
    • தலைமைப் பொறியாளர் சந்திரசேகரன் மரக்கன்றுகளை நட்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் சாலைப்பணியாளர்களுக்கு மரங்கள் நடுவது குறித்து ஆலோசனை வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு மற்றும் கோட்டப்பணிகளை சென்னை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் சந்திரசேகரன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது சங்கரன்கோவிலில் நெடுஞசாலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் சாலை திட்டப்பணிகள், வடகிழக்கு பருவ மழைக்கால முன்னேற்பாடு ஆயத்தப்பணிகள், சாலைகள் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார். சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் சென்னை தலைமைப் பொறியாளர் சந்திரசேகரன் மரக்கன்றுகளை நட்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் சாலைப்பணியாளர்களுக்கு மரங்கள் நடுவது குறித்து ஆலோசனை வழங்கினார். திட்டப்பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது, தென்காசி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை கோட்ட பொறியாளர் ராஜசேகர், சங்கரன்கோவில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள், உதவி பொறியாளர்கள் பலவேசம், முத்துமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×