சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் பொது விருந்து- ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்பு

பொதுவிருந்து நிகழ்ச்சிக்கு கோவில் துணை ஆணையர் ஜான்சிராணி தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொது விருந்தினை தொடங்கி வைத்தார்.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் பொது விருந்து- ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்பு
Published on

சங்கரன்கோவில்:

சுதந்திர தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் பொதுவிருந்து நிகழ்ச்சி நடந்தது. கோவில் துணை ஆணையர் ஜான்சிராணி தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் முன்னிலை வகித்தார்.

இதில் தென்காசி வடக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொது விருந்தினை தொடங்கி வைத்து பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். முன்னதாக விருந்தில் பங்கேற்றவர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் வேஷ்டி-சேலைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, சங்கரன்கோவில் நகரச் செயலாளர் பிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ். மாரியப்பன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சந்திரன், நகர அவை தலைவர் முப்பிடாதி, நகர துணைச் செயலாளர்கள் முத்துக்குமார், சுப்புத்தாய், வார்டு செயலாளர்கள் தங்கவேலு, வீரா, நகராட்சி கவுன்சிலர் செல்வராஜ் மற்றும் அஜய்மகேஷ்குமார், சங்கர்கணேஷ், வக்கீல் ஜெயக்குமார் மற்றும் கோவில் மேற்பார்வையாளர் முத்துராஜ், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com