search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Road block Protest"

    • சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் அருகே ராஜபாளையம் மெயின் ரோட்டில் முப்புடாதி அம்மன் கோவில் அருகே அரசு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது.
    • இந்த கடை அருகே ஏராளமான குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளது. மேலும் சங்கரநாராயணசுவாமி கோவில் துணைக்கோவிலான முப்புடாதி அம்மன் கோவில் அமைந்துள்ளது.


    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் அருகே ராஜபாளையம் மெயின் ரோட்டில் முப்புடாதி அம்மன் கோவில் அருகே அரசு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடை அருகே ஏராளமான குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளது. மேலும் சங்கரநாராயணசுவாமி கோவில் துணைக்கோவிலான முப்புடாதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தப் பகுதிகளில் அரசு மதுபான கடை அமைந்துள்ளதால் மது குடிப்பவர்களின் நடவடிக்கையால் பள்ளி மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள் பக்தர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அவர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டு வாசலிலே அமர்ந்து மது குடிப்பதால் பொதுமக்களுக்கும் அவர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அரசு மதுபான கடையை அகற்ற கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனக் கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை அரசு மதுகடையை அகற்றக்கோரி நகர்மன்ற உறுப்பினர் சங்கரசுப்பிரமணியன், அய்யப்பா சேவா சங்கத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் திடீரென்று கடை முன்பு முற்றுகை இட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பெண்கள் கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் சங்கரன்கோவில் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உரிய அதிகாரிகள் வந்தால் தான் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வோம் என்று கூறினார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன்கோவில் தாசில்தார் பாபு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்களின் போராட்டம் குறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் கொடுத்து கடையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று சென்னையில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
    • வண்ணார்பேட்டையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    சட்டசபையில் எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ. பன்னீர்செல்வம் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் முடிவை கண்டித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று சென்னையில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

    அ.தி.மு.க. போராட்டம்

    இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதைத்தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லை வண்ணார்பேட்டையில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    200 பேர் கைது

    திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதாபரமசிவன், அவைத்தலைவர் பரணிசங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், முன்னாள் எம்.பி.க்கள் சவுந்தரபாண்டியன், முத்துக்கருப்பன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, எம்.ஜி.ஆர். மன்ற பெரியபெருமாள், ஆவின்பால்துரை, ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், மருதூர் ராமசுப்பிரமணியன், பகுதி செயலாளர்கள் ஜெனி, திருத்துசின்னதுரை, சிந்துமுருகன், கவுன்சிலர் சந்திரசேகர், வள்ளியூர் லாசர், செவல்முத்துசாமி, பாறையடி மணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    போக்குவரத்து நெருக்கடி

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சாலை மறியலால் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதையடுத்து மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 200 பேரை போலீசார் கைது செய்து கொக்கிரகுளத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    மறியலின் போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளுக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    திசையன்விளை

    இதே போல் திசையன்விளையில் திசையன்விளை பழைய பஸ்நிலையம் முன்பு அ.தி.மு.க. வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் மாநில அமைப்பு செயலாளர் சீனிவாசன், மாவட்ட மகளிர் செயலாளரும், பேரூராட்சி தலைவருமான ஜான்சிராணி, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, நகர செயலாளர் ஜெயக்குமார், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாராயணபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 45 அ.தி.மு.க.வினரை இன்ஸ்பெக்டர் சாந்தி கைது செய்தார். 

    ×