search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sankaranarayana Swamy Temple"

    • பொதுவிருந்து நிகழ்ச்சிக்கு கோவில் துணை ஆணையர் ஜான்சிராணி தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொது விருந்தினை தொடங்கி வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் பொதுவிருந்து நிகழ்ச்சி நடந்தது. கோவில் துணை ஆணையர் ஜான்சிராணி தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் முன்னிலை வகித்தார்.

    இதில் தென்காசி வடக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொது விருந்தினை தொடங்கி வைத்து பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். முன்னதாக விருந்தில் பங்கேற்றவர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் வேஷ்டி-சேலைகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, சங்கரன்கோவில் நகரச் செயலாளர் பிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ். மாரியப்பன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சந்திரன், நகர அவை தலைவர் முப்பிடாதி, நகர துணைச் செயலாளர்கள் முத்துக்குமார், சுப்புத்தாய், வார்டு செயலாளர்கள் தங்கவேலு, வீரா, நகராட்சி கவுன்சிலர் செல்வராஜ் மற்றும் அஜய்மகேஷ்குமார், சங்கர்கணேஷ், வக்கீல் ஜெயக்குமார் மற்றும் கோவில் மேற்பார்வையாளர் முத்துராஜ், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தேரோட்டத்தை முன்னிட்டு பிரியாவிடை சமேத சங்கரலிங்க சுவாமி பெரிய தேரிலும், கோமதி அம்மன் சிறிய தேரிலும் நேற்று எழுந்தருளினர்.
    • தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி காலை சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் காலை, மாலை இருவேளைகளிலும் சுவாமி, அம்பாள் வீதி உலா வருவது வழக்கம். சித்திரை திருவிழா 9-ம் நாளான நேற்று சுவாமி அம்பாள் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு பிரியாவிடை சமேத சங்கரலிங்க சுவாமி பெரிய தேரிலும், கோமதி அம்மன் சிறிய தேரிலும் நேற்று காலை 5.30 மணிக்கு எழுந்தருளினர். அதனைத்தொடர்ந்து 6.45 மணிக்கு விநாயகர் முருகன் தேரோட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து காலை 10.20 மணிக்கு சுவாமி தேரோட்டம் தொடங்கியது.

    அதனைத்தொடர்ந்து அம்பாள் தேரோட்டம் தொடங்கியது. நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார். தொடர்ந்து ராஜா எம்.எல்.ஏ. சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர், பழங்கள் வழங்கப்பட்டது. இதில் சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன், கோவில் துணைஆணையர் ரத்தினவேல் பாண்டியன், மாவட்ட துணைச்செயலாளர் புனிதா, மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் சங்கரன்கோவில் மாரிச்சாமி, இளைஞர் அணி சரவணன், தி.மு.க. நகர துணைச் செயலாளர்கள் கே.எஸ்.எஸ்.மாரியப்பன முத்துக்குமார், சுப்புத்தாய், மாணவரணி அரசு வக்கீல்கள் கண்ணன், ஜெயக்குமார், சுற்றுச்சூழல் அணி அழகுதுரை, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கணேசன், அஜய் மகேஷ் குமார், வெங்கடேஷ், வீரா, வீரமணி, ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.

    • சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை கடைசி வெள்ளிக்கிழமை அன்று தெப்ப தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
    • தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை கடைசி வெள்ளிக்கிழமை அன்று தெப்ப தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தெப்ப தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் ஓடை தெருவில் ஆவுடை பொய்கை தெப்பத்தில் எதிரே உள்ள உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளினர்.

    தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் ஆவுடை பொய்கை தெப்பத்தில் இரவு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ராஜா எம்.எல்.ஏ, கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, இளைஞரணி சரவணன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இன்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தரிசனம் செய்தார்.
    • சங்கரன்கோவில் நாகசுனை தெப்பம், தங்கத்தேர், ஆவுடைபொய்கை தெப்பம் உள்ளிட்ட பகுதிகளை அமைச்சர் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இன்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தரிசனம் செய்தார்.

    தற்போது கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தொடங்கியுள்ளதால், அந்த பணிகளையும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

    சங்கரன்கோவில் நாகசுனை தெப்பம், தங்கத்தேர், ஆவுடைபொய்கை தெப்பம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    மேலும் தங்கத்தேருக்கு முலாம் பூச உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், கும்பாபிஷேக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், நாளை நடைபெற உள்ள தெப்பத்திருவிழாவை சிறப்பாக நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் சங்கரன்கோவில் ராஜா, வாசுதேவநல்லூர் சதன்திருமலைகுமார், நெல்லை அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, மண்டல இணை ஆணையர் அன்புமணி, சுசீந்திரம் துணை ஆணையர் ஞானசேகரன், சங்கரன்கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி மற்றும் கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்று.
    • இந்த கோவிலில் திருவாதிரை திருநாள் கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    சங்கரன்கோவில்:

    தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருநாள் கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் 6-ம் திருநாளான இன்று காலை 9.20 மணிக்கு பெருமாள் சயன கோலத்தில் பரமபத வாசல் வழியாக வந்து பெரிய ஆழ்வார் மற்றும் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய திரு விழாவான வருகிற 6-ந் தேதி ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடக்கிறது.

    • சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திரு வாதிரை திருநாள் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • முக்கிய திருவிழாவான 10-ம் திருநாள் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி 6-ந் தேதி நடக்கிறது.

    சங்கரன்கோவில்:

    தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திரு வாதிரை திருநாள் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி யேற்றத்தை முன்னிட்டு நேற்று இரவு அங்கூர் விநாயகர் சன்னதியில் வைத்து சுவாமி அம்பாளுக்கு அனுக்ஞை அலங்காரம் நிகழ்ச்சி நடந்தது.

    இன்று காலை 7.15 மணிக்கு சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 4-ம் திருநாள் அன்று 63 நாயன்மார்களுக்கு, சுவாமி- அம்பாள் திருக்கயிலாய காட்சி கொடுக்கும் வைபவமும், அதனை தொடர்ந்து 63 நாயன்மார்கள், சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.

    5-ம் திருநாள் அன்று சுவாமி அம்பாளுக்கு ஊடல் உற்சவம் நடைபெறுகிறது. 6-ம் திருநாளான வருகிற 2-ந் தேதி காலை 9 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும், கோவிலில் நடராஜர் பரிவட்டம் இறக்கம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 7-ம் திருநாள் அன்று இரவு 8 மணிக்கு நடராஜர் சிவப்பு சாத்தி அலங்காரத்திலும், இரவு 11 மணிக்கு வெள்ளை சாத்தி அலங்காரத்திலும், 8-ம் திருநாள் அன்று காலை பச்சை சாத்தி அலங்காரத்திலும் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.

    9-ம் திருநாள் அன்று காலை சுவாமி- அம்பாள் கோரதத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய திருவிழாவான 10-ம் திருநாள் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி 6-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 3 மணிக்கு சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெறுகிறது.

    4.45 மணிக்கு கோபூஜையும், 5 மணிக்கு ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியும் நடைபெறும். தொடர்ந்து தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது. அன்று காலை 8.30 மணிக்கு சப்பர தீபாராதனையும் 9 மணிக்கு நடராஜர் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்

    • 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடித்தபசு திருவிழா விமர்சையாக நடைபெற்றதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    • திருவிழாவை முன்னிட்டு நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் மேற்பார் வையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணாராஜ் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் நடைபெறும் ஆடித்தபசு திருவிழா பிரசித்தி பெற்றது.

    இந்தாண்டு திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றமும், 8-ந் தேரோட்டம் நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா 11-ம் நாளான நேற்று நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு காலை 5 மணிக்கு கோவில் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு கும்ப அபிஷேகம், காலை 9 மணி க்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், காலை 11 மணிக்கு தங்க சப்பரத்தில் கோமதி அம்பாள் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டபத்தில் எழுந்தருளினார்.

    மாலை 4.30 மணிக்கு சங்கரநாராயண சுவாமி ரிஷப வாகனத்தில் தபசு காட்சிக்கு எழுந்தருளினார். மாலை 6.39 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கர நாராயண சுவாமியாக ரிஷப வாகனத்தில் தபசு காட்சி கொடுத்தார்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடித்தபசு திருவிழா விமர்சையாக நடைபெற்றதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து அம்பாள் சங்கர நாராயணனை மூன்று முறை வலம் வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள், பக்தர்கள், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பருத்தி, வத்தல் உள்ளிட்ட விளைபொருட்களை சப்பரத்தில் மேல் எரிந்தனர்.

    விழாவில் சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி, முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, எம்.எல்.ஏ. ராஜா, தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் செல்லத்துரை, நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி, மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன், சுற்றுச்சூழல் அணி அழகுதுரை, அ.தி.மு.க. மானூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் செந்தில் குமார், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தி.மு. ராஜேந்திரன், மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ், இளைஞர் அணி துணைச் செயலாளர் இசக்கியப்பன், அ.தி.மு.க.மானூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் செந்தில்குமார், பாரதீய ஜனதா கட்சி கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வர பெருமாள், மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் ராஜா, செங்குந்தர் அபிவிருத்தி சங்க செயலாளர் மாரிமுத்து, புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் ராசையா, தி.மு.க. நகர செயலாளர் மாரிசாமி, துணைச் செயலாளர் கே. எஸ்.எஸ்.மாரியப்பன், ஒப்பந்ததாரர்கள் வெள்ளி முருகன், குட்டி ராஜ், நகர அ.தி.மு.க. செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் வேல்சாமி, கவுன்சிலர்கள் சந்திரசேகர், ராமதுரை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இரவு 12 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் காட்சி கொடுத்தார்.

    திருவிழாவை முன்னிட்டு நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் மேற்பார் வையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணாராஜ் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ஆடித்தபசு திருவிழாக் கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.

    12-வது திருநாளான இன்று பகல் 12 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ×