சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருநாள் கொடியேற்றம்- 6- ந் தேதி ஆருத்ரா தரிசனம்

சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திரு வாதிரை திருநாள் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய திருவிழாவான 10-ம் திருநாள் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி 6-ந் தேதி நடக்கிறது.
கொடிமரத்திற்கு தீபாராதனை நடைபெற்றபோது எடுத்த படம்.
கொடிமரத்திற்கு தீபாராதனை நடைபெற்றபோது எடுத்த படம்.
Published on

சங்கரன்கோவில்:

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திரு வாதிரை திருநாள் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி யேற்றத்தை முன்னிட்டு நேற்று இரவு அங்கூர் விநாயகர் சன்னதியில் வைத்து சுவாமி அம்பாளுக்கு அனுக்ஞை அலங்காரம் நிகழ்ச்சி நடந்தது.

இன்று காலை 7.15 மணிக்கு சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 4-ம் திருநாள் அன்று 63 நாயன்மார்களுக்கு, சுவாமி- அம்பாள் திருக்கயிலாய காட்சி கொடுக்கும் வைபவமும், அதனை தொடர்ந்து 63 நாயன்மார்கள், சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.

5-ம் திருநாள் அன்று சுவாமி அம்பாளுக்கு ஊடல் உற்சவம் நடைபெறுகிறது. 6-ம் திருநாளான வருகிற 2-ந் தேதி காலை 9 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும், கோவிலில் நடராஜர் பரிவட்டம் இறக்கம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 7-ம் திருநாள் அன்று இரவு 8 மணிக்கு நடராஜர் சிவப்பு சாத்தி அலங்காரத்திலும், இரவு 11 மணிக்கு வெள்ளை சாத்தி அலங்காரத்திலும், 8-ம் திருநாள் அன்று காலை பச்சை சாத்தி அலங்காரத்திலும் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.

9-ம் திருநாள் அன்று காலை சுவாமி- அம்பாள் கோரதத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய திருவிழாவான 10-ம் திருநாள் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி 6-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 3 மணிக்கு சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெறுகிறது.

4.45 மணிக்கு கோபூஜையும், 5 மணிக்கு ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியும் நடைபெறும். தொடர்ந்து தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது. அன்று காலை 8.30 மணிக்கு சப்பர தீபாராதனையும் 9 மணிக்கு நடராஜர் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com