என் மலர்
நீங்கள் தேடியது "Welfare assistance"
தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் சார்பில் 63 தொழில் முனைவு பயனாளிகளுக்கு ரூ.25 லட்சம் நுண் தொழில் நிறுவன நிதி கடன் வழங்கப்பட்டது.
ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் அனைத்து ஊராட்சியிலுள்ள தொழில் முனைவு பயனாளிகளுக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் தலைமை தாங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கால்நடை மற்றும் மீன்வளம் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொழில் முனைவு பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் பொறுப்பு வீரபத்திரன் வட்டார அணித்தலைவர் பாலமுருகன் வட்டார வேளாண் உதவி, இயக்குநர் அல்லிராணி மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், ஒன்றிய செயலாளர் நவீன்குமார், தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த், தென்திருப்பேரை நகர பொறுப்பாளர் முத்து வீர பெருமாள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து தென்திருப்பேரை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மரகன்றுகள் நடும் நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் கலந்து கொண்டு மரகன்றுகள் நட்டார். நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த், வார்டு உறுப்பினர் ஆனந்த், துணை தலைவர் அமிர்த வல்லி, பேரூராட்சி செயல் அலுவலர் ரமேசுபாபு உட்பட அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பு
- கலெக்டர், எம்.எல்.ஏக்கள் பங்கேற்பு
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பு மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற 21-ந் தேதி நடக்கிறது.
நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா டான் பாஸ்கோ மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடக்கிறது. விழா மேடை மற்றும் பந்தல் அழைப்பதற்கான பூஜை கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடந்தது.
எம்எல்ஏக்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கிதாவெங்கடேசன், ஒன்றியக்குழு தலைவர்கள் சத்தியாசதிஷ்குமார், விஜயாஅருணாசலம், திருமுருகன், சங்கீதா, திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன், கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் கு.ராஜமாணிக்கம்,
ஆம்பூர் நகர செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம், கந்திலி வடக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.அன்பழகன், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கே.சதிஷ்குமார், மாவட்ட கவுன்சிலர்கள் கவிதா தண்டபாணி, கே.ஏ.குணசேகரன், சுப்பிரமணி, சிந்துஜா, ஜெயாசுந்தரேசன், சுபாஷ் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் தலைமையில் மனுநீதி முகாம் நடைபெற்றது.
- மனுநீதி முகாமில் 29 பயனாளிகளுக்கு பட்டாவும், முதியோர் உதவித்தொகை 13 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.
சிவகிரி:
சிவகிரி தாலுகா தென்மலை பாகம் 1 கிராமத்தைச் சார்ந்த வண்ணான்பாறை என்ற ஏ.சுப்பிரமணியாபுரம், அருகன்குளம், செந்தட்டியாபுரம்புதூர், இனாம்கோவில்பட்டி ஆகிய கிராமங்களுக்கு தென்மலை கிராம நிர்வாக அலுவலகத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
முகாமில் முதியோர் உதவித்தொகை, விவசாய பயிர்கள் சம்பந்தமான சலுகைகள், பட்டா மாறுதல் போன்ற கோரிக்கைகள் குறித்து பொது மக்களிடமிருந்து 71 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றிற்கு விளக்கம் மற்றும் தீர்வு காணும் வகையில் தென்மலை பாகம் 1 சமுதாய நலக்கூடத்தில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் தலைமையில் மனுநீதி முகாம் நடைபெற்றது. சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
முன்னோடி மனுநீதி நாளில் பெறப்பட்ட 71 மனுக்களில் 41 மனுக்கள் ஏற்கப்பட்டன. 30 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மனுநீதி முகாமில் 29 பயனாளிகளுக்கு பட்டாவும், முதியோர் உதவித்தொகை 13 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. ஹஸ்ரத் பேகம், உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குணசேகரன், சிவகிரி தாசில்தார் செல்வக்குமார், மண்டல துணை தாசில்தார் மைதீன் பாட்ஷா, சமூக பாதுகாப்பு திட்டத் தாசில்தார் திருமலைச்செல்வி, குடிமை பொருள் வழங்கல் தாசில்தார் சாந்தி, வாசுதேவநல்லூர் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன்,
மாவட்ட கவுன்சிலர் சந்திரலீலா, பஞ்சாயத்து யூனியன் துணைத்தலைவர் சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர் செல்வி, ஊராட்சி மன்ற தலைவர் மீனலதா, வருவாய் ஆய்வாளர் அய்யனார், கிராம நிர்வாக அலுவலர்கள் லோகநாதன், வீரசேகரன், பால கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
- கூட்டத்தில் காயல்பட்டினம் நகர புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நகர நிர்வாகிகள் தேர்தலுக்கான பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நகர தலைவர் முகமது ஹசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மஹ்மூதுல் ஹசன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் மன்னர் அப்துல் அஸ்ஷப் வரவேற்று பேசினார். சாகுல் ஹமீது இறை வணக்கம் பாடினார். நகர பொருளாளர் சுலைமான் அறிக்கை வாசித்தார்.
மாவட்ட தலைவர் மீராசா மரைக்காயர் தொடக்க உரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் காயல்பட்டினம் நகர புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
இதன்படி புதிய தலைவராக நூஹ் சாகிப், செயலாளராக அபூ சாலிஹ், பொருளாளராக சுலைமான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் துணை தலைவர்கள், துணை செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் இளைஞர் அணி, மாணவரணி, மகளிர் அணி நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.
சிறுபான்மை பாதுகாப்பு மற்றும் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தை காயல் பட்டினத்தில் நடத்துவது, கட்சியின் 75 ஆண்டு விழாவை முன்னிட்டு 75 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, நபிகள் நாயகம் குறித்து தரக்குறைவாக பேசிய பா.ஜ.க.வை சேர்ந்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.நிறைவில் முகமது உமர் பிரார்த்தனை பாடினார்.
- செஞ்சியில் ஜமாபந்தி நிறைவு: 302 பயனாளிகளுக்கு ரூ.1. 31 கோடி நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
- மொத்தம் 302 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழுப்புரம்:
செஞ்சி வட்டத்தில் 1431-ம் பசலி ஜமாபந்தி கடந்த 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. திண்டிவனம் உதவி கலெக்டர் அமீத் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டு வந்தார்.
மேற்படி ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று செஞ்சி தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திண்டிவனம் உதவி கலெக்டர் அமீத் தலைமை தாங்கினார். தாசில்தார் பழனி வரவேற்றார்.
இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் 71 பயனாளிகளுக்கு பட்டா மாற்ற ஆணை, 14 பேருக்கு உட்பிரிவு பட்டா மாற்றம், 100 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை ஆணை, 43 பேருக்கு மின்னணு குடும்ப அட்டை, 20 பேருக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டை, 45 நபர்களுக்கு பிரதம மந்திரி தொகுப்பு வீடுகள் கட்ட ஆணை மற்றும் 9 பயனாளிகளுக்கு விவசாயத் துறை தோட்டக்கலை சார்பிலும் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 302 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், வல்லம் ஒன்றிய குழு தலைவர் அமுதா ரவிக்குமார், வல்லம் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய பொருளாளர் தமிழரசன், தனி தாசில்தார் நெகருன்னிசா, துணை தாசில்தார் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர்கள் கண்ணன், பரமசிவம், கீதா, கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழகம் முழுவதும் மக்களின் குறைகளை போக்க பல முகாம்களை அதிகாரிகள் நடத்தி வருகிறார்கள்.
- இந்த முகாமின் மூலம் பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டது.
கோத்தகிரி,
தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழகம் முழுவதும் மக்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் மக்களின் குறைகளை போக்க பல முகாம்களை அதிகாரிகள் நடத்தி வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி நெடுகுளா பகுதியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் மக்கள் மனு நீதிநாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 154 பயனாளிகளுக்கு சுமார் 66.19 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இம்முகாமினை முன்னிட்டு பொதுமக்களிடமிருந்து 282 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 165 மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டு 117 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.
குறிப்பாக இந்த முகாமின் மூலம் பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஊராட்சித்தலைவர் பொன்தோஸ்,
தனித்துணை ஆட்சியர் முருகன் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை.
- அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஊட்டி,
அதிமுகவின் 51 வது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட இடத்தில் மாவட்ட செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கப்பச்சிவினோத், அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு அவர் இனிப்புகள், அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் வழங்கினார்.
அப்போது பேசிய அவர் பொய் வாக்குறுதிகளை வழங்கி வெற்றி பெற்றனர். ஆனால் இதுவரை எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை. எப்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலும் மக்களை ஏமாற்றும் வேலையைதான் செய்கிறது என்றார்.
நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் அர்ஜூனன், முன்னாள் எம்.எல்.ஏ. சாந்தி ராமு, பாசறை மாவட்ட செயலாளர் அக்கீம்பாபு, ஒன்றிய செயலாளர்கள் பேரட்டி ராஜீ, ஹேம்சந்த், கிருஷ்ணன், கிளை செயலாளர் நொண்டிமேடு கார்த்திக், ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஆகாஷ் பெற்றுக்கொண்டார்
- 10 பயனாளிகளுக்கு 47 ஆயிரத்து 500 மதிப்பிலான இலவச இஸ்திரி பெட்டிகளையும் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஆகாஷ் பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.55 ஆயிரம் மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும் மற்றும் 10 பயனாளிகளுக்கு 47 ஆயிரத்து 500 மதிப்பிலான இலவச இஸ்திரி பெட்டிகளையும் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 415 மனுக்கள் பெறப்பட்டது.






