search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alwarthirunagani"

    ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
    தென்திருப்பேரை:

    தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் சார்பில் 63 தொழில் முனைவு பயனாளிகளுக்கு ரூ.25  லட்சம் நுண் தொழில் நிறுவன நிதி கடன் வழங்கப்பட்டது.

    ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் அனைத்து ஊராட்சியிலுள்ள தொழில் முனைவு பயனாளிகளுக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் தலைமை தாங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கால்நடை மற்றும் மீன்வளம் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொழில் முனைவு பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் பொறுப்பு வீரபத்திரன் வட்டார அணித்தலைவர் பாலமுருகன் வட்டார வேளாண் உதவி, இயக்குநர் அல்லிராணி மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், ஒன்றிய செயலாளர் நவீன்குமார், தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த், தென்திருப்பேரை நகர பொறுப்பாளர் முத்து வீர பெருமாள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து தென்திருப்பேரை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மரகன்றுகள் நடும் நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் கலந்து கொண்டு மரகன்றுகள் நட்டார். நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த், வார்டு உறுப்பினர் ஆனந்த், துணை தலைவர் அமிர்த வல்லி, பேரூராட்சி செயல் அலுவலர் ரமேசுபாபு உட்பட அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×