என் மலர்
நீங்கள் தேடியது "பொதுமக்கள்"
கடலூர்:
கடலூர் மையப்பகுதியில் அமைந்துள்ளது மஞ்சக்குப்பம் மைதானம். இந்த மஞ்சக்குப்பம் மைதானம் என்பது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தலைவர்களுக்கு மிகவும் பரிச்சியமானது என அனைவரும் அறிந்ததாகும். மேலும் அனைத்து தலைவர்களின் கட்சிகளின் கூட்டமும் இந்த மைதானத்தில் நடைபெறுவது வழக்கம் கடலூர் மையப் பகுதியில் இந்த மைதானம் அமையப்பெற்றதால் தினந்தோறும் ஆயிரக்க ணக்கான பொதுமக்கள் இவ்வழியாக சென்று வருவதோடு மாலை நேரங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மைதானத்தில் காற்றோட்டமாக அமர்ந்து பேசி செல்வது வழக்கம்.
இந்த மைதானம் அவர்களுக்கு மட்டும் ஏற்ற இடம் இல்லை. மது பிரியர்களான எங்களுக்கும் இந்த காற்றோட்டமான மைதானம் என்பது எந்தவித டென்ஷனும் இல்லாமல் அமைதியாக தங்கள் நண்பர்களுடன் அமர்ந்து குடிப்பதற்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது என்பதனை குறிப்பது போல் தினந்தோறும் குடிபிரியர்கள் இங்கு அமர்ந்து மது குடித்து சென்று வருகின்றனர் இதன் காரணமாக மஞ்சகுப்பம் மைதானத்தில் தற்போது மது பாட்டில்கள் அதிக அளவில் படர்ந்து சூழ்ந்து உள்ளன. மேலும் மைதானத்தில் வாகனத்தில் செல்பவர்கள் மது பாட்டில்களின் மீது ஏற்றி செல்வதால் மது பாட்டில்கள் முழுவதும் உடைந்து கண்ணடி துகள்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றது மேலும் ஒரு சில மது பிரியர்கள் அதிக போதை காரணமாக மைதானத்தில் மது பாட்டில்களை உடைத்து வீசி செல்வதால் நடந்து செல்லும் பொது மக்களுக்கு அடிக்கடி காயம் ஏற்பட்டு வருவதையும் காண முடிந்தது.
மேலும் இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லக்கூடிய பெரும்பாலான மோட்டார் சைக்கிள் பஞ்சர் ஆகி பாதிப்பை உண்டாக்குவதும் இருந்து வருகின்றது.
இந்த நிலையில் இந்த மஞ்சகுப்பம் மைதானம் சுற்றியும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் இருந்த போதிலும் மதுபிரியர்கள் தங்களுக்கான மைதானமாக மாற்றியது அனைவரையும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சி யையும் ஆழ்த்தியுள்ளது.
ஆகையால் இரவு நேரங்களில் போலீசார் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
- நகராட்சியின் 8,9-வது வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த 15 நாட்களாக முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
- தாரமங்கலத்தில் இருந்து ஓமலூர் செல்லும் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி 27 வார்டுகளை உள்ளடக்கிய பெரும் பகுதி ஆகும். இங்கு சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
குடிநீர் வினியோகம் இல்லை
இந்த நிலையில் நகராட்சியின் 8,9-வது வார்டுகளை சேர்ந்த கைலாஷ் நகர், வேடப்பட்டி பிரிவு ரோடு, ஓமலூர் மெயின் ரோடு, அருணாசலம் புதூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த 15 நாட்களாக முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதையடுத்து இப்பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் திரண்டு வந்து 8-வது வார்டு உறுப்பினர் ஜெயந்தி தலைமையில் தாரமங்கலத்தில் இருந்து ஓமலூர் செல்லும் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தாரமங்கலம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடுமாறு வலியுறுத்தினர். மேலும் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
அதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் தாரமங்கலம் - ஓமலூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- திருநாகேஸவரம் சன்னாபுரம் கிராமத்தில் பொது மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- பட்டாவிற்காக பலபோராட்டங்களை நடத்தி வந்தனர்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸவரம் சன்னாபுரம் கிராமத்தில் உள்ள மணல் மேட்டு தெரு, சிவன் திருமஞ்சன வீதி, பனந்தோப்பு தெற்கு தெரு,மேல தெரு, சிவன் சன்னதி மேல மட விளாகம், கீழ மட விளாகம், தெற்கு மட விளாகம்,வடக்கு மட விளாகம், தோப்பு தெரு, நேதாஜி தெரு,எடத்தெரு, செட்டி தெரு, உப்பிலியப்பன் கோவில் திருமஞ்சன வீதி, சந்தன மாரியம்மன்கோவில் தெரு, பழைய செட்டி தெரு, புளியந்தோப்பு, பழைய சேச தெரு, பழைய குடியான தெரு, உப்பிலியப்பன்கோவில் நான்கு வீதிகள் ஆகிய பகுதிகளில் சுமார் 2,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு இது வரை வீட்டு மனை பட்டா வழங்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில் அவர்கள் பட்டாவிற்காக பலபோராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் மேலவீதியில் அரசு பட்டா வழங்க வேண்டும் என கூறி, நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் தாசில்தார் வெங்கடேசன், திருவிடைமருதுார் போலீஸ் துணை சூப்பிரண்டு, ஜாபர் சித்திக் ஆகியோர் திருநாகேஸ்வரம் சன்னாபுரம் குடியிருப்போர் சங்கத் தலைவர் ஆறுமுகம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, வரும் 20ம் தேதி தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- மின்சாரம் தடைபட்டதால் இருளில் கொசுக்கடியால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினார்கள்.
- தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பூதலூர்:
திருக்காட்டுபள்ளி நகரில் அதிகாலை 12.30 மணியில் இருந்து திடிர் என மின்சாரம் தடைபட்டது.
தூறல் மழையும் குளிரிலும் தவித்த மக்கள் மின்சாரம் தடைபட்டதால் இருளில் கொசுக்கடியால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினார்கள்.
மின்சாரம் எப்போது வரும் என்று தெரியாத நிலையில் திருக்காட்டுபள்ளி நகர மக்கள் விடிய விடிய அவதிப்பட்டனர்.
5மணி நேர மின்சார தடைக்கு பிறகு காலை 6 மணியளவில் மீண்டும் மின்சாரம் கிடைத்தது.
இரவு நேரங்களில் தடையின்றி மின்சாரம் கிடைக்க உரியவாறு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






