தாரமங்கலம் பகுதியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

நகராட்சியின் 8,9-வது வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த 15 நாட்களாக முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. தாரமங்கலத்தில் இருந்து ஓமலூர் செல்லும் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.
Published on

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி 27 வார்டுகளை உள்ளடக்கிய பெரும் பகுதி ஆகும். இங்கு சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

குடிநீர் வினியோகம் இல்லை

இந்த நிலையில் நகராட்சியின் 8,9-வது வார்டுகளை சேர்ந்த கைலாஷ் நகர், வேடப்பட்டி பிரிவு ரோடு, ஓமலூர் மெயின் ரோடு, அருணாசலம் புதூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த 15 நாட்களாக முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதையடுத்து இப்பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் திரண்டு வந்து 8-வது வார்டு உறுப்பினர் ஜெயந்தி தலைமையில் தாரமங்கலத்தில் இருந்து ஓமலூர் செல்லும் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த தாரமங்கலம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடுமாறு வலியுறுத்தினர். மேலும் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

அதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் தாரமங்கலம் - ஓமலூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com