என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பத்தூரில் முதல்-அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு பந்தல் அமைக்கும் பணி தீவிரம்
    X

    மேடை அமைக்கும் பணிகளை பூஜை போட்டு கலெக்டர் அமர்குஷ்வாஹா, எம்எல்ஏக்கள் நல்லதம்பி, தேவராஜ், வில்வநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    திருப்பத்தூரில் முதல்-அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

    • புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பு
    • கலெக்டர், எம்.எல்.ஏக்கள் பங்கேற்பு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பு மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற 21-ந் தேதி நடக்கிறது.

    நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா டான் பாஸ்கோ மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடக்கிறது. விழா மேடை மற்றும் பந்தல் அழைப்பதற்கான பூஜை கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடந்தது.

    எம்எல்ஏக்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கிதாவெங்கடேசன், ஒன்றியக்குழு தலைவர்கள் சத்தியாசதிஷ்குமார், விஜயாஅருணாசலம், திருமுருகன், சங்கீதா, திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன், கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் கு.ராஜமாணிக்கம்,

    ஆம்பூர் நகர செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம், கந்திலி வடக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.அன்பழகன், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கே.சதிஷ்குமார், மாவட்ட கவுன்சிலர்கள் கவிதா தண்டபாணி, கே.ஏ.குணசேகரன், சுப்பிரமணி, சிந்துஜா, ஜெயாசுந்தரேசன், சுபாஷ் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×