என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
- எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை.
- அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஊட்டி,
அதிமுகவின் 51 வது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட இடத்தில் மாவட்ட செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கப்பச்சிவினோத், அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு அவர் இனிப்புகள், அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் வழங்கினார்.
அப்போது பேசிய அவர் பொய் வாக்குறுதிகளை வழங்கி வெற்றி பெற்றனர். ஆனால் இதுவரை எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை. எப்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலும் மக்களை ஏமாற்றும் வேலையைதான் செய்கிறது என்றார்.
நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் அர்ஜூனன், முன்னாள் எம்.எல்.ஏ. சாந்தி ராமு, பாசறை மாவட்ட செயலாளர் அக்கீம்பாபு, ஒன்றிய செயலாளர்கள் பேரட்டி ராஜீ, ஹேம்சந்த், கிருஷ்ணன், கிளை செயலாளர் நொண்டிமேடு கார்த்திக், ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






