search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Petition Day Camp"

    • மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் தலைமையில் மனுநீதி முகாம் நடைபெற்றது.
    • மனுநீதி முகாமில் 29 பயனாளிகளுக்கு பட்டாவும், முதியோர் உதவித்தொகை 13 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.

    சிவகிரி:

    சிவகிரி தாலுகா தென்மலை பாகம் 1 கிராமத்தைச் சார்ந்த வண்ணான்பாறை என்ற ஏ.சுப்பிரமணியாபுரம், அருகன்குளம், செந்தட்டியாபுரம்புதூர், இனாம்கோவில்பட்டி ஆகிய கிராமங்களுக்கு தென்மலை கிராம நிர்வாக அலுவலகத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

    முகாமில் முதியோர் உதவித்தொகை, விவசாய பயிர்கள் சம்பந்தமான சலுகைகள், பட்டா மாறுதல் போன்ற கோரிக்கைகள் குறித்து பொது மக்களிடமிருந்து 71 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றிற்கு விளக்கம் மற்றும் தீர்வு காணும் வகையில் தென்மலை பாகம் 1 சமுதாய நலக்கூடத்தில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் தலைமையில் மனுநீதி முகாம் நடைபெற்றது. சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    முன்னோடி மனுநீதி நாளில் பெறப்பட்ட 71 மனுக்களில் 41 மனுக்கள் ஏற்கப்பட்டன. 30 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மனுநீதி முகாமில் 29 பயனாளிகளுக்கு பட்டாவும், முதியோர் உதவித்தொகை 13 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. ஹஸ்ரத் பேகம், உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குணசேகரன், சிவகிரி தாசில்தார் செல்வக்குமார், மண்டல துணை தாசில்தார் மைதீன் பாட்ஷா, சமூக பாதுகாப்பு திட்டத் தாசில்தார் திருமலைச்செல்வி, குடிமை பொருள் வழங்கல் தாசில்தார் சாந்தி, வாசுதேவநல்லூர் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன்,

    மாவட்ட கவுன்சிலர் சந்திரலீலா, பஞ்சாயத்து யூனியன் துணைத்தலைவர் சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர் செல்வி, ஊராட்சி மன்ற தலைவர் மீனலதா, வருவாய் ஆய்வாளர் அய்யனார், கிராம நிர்வாக அலுவலர்கள் லோகநாதன், வீரசேகரன், பால கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×