

சங்கரன்கோவில்:
கடந்த 11-ந் தேதி தியாகி இம்மானு வேல் சேகரனின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு நீண்ட நாள் கோரிக்கையான பரமக்குடி யில் அவருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைத்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தென்காசி மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் சார்பில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சென்னையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அப்போது அமைச்சர்கள் ராஜகண்ணப்பன் மற்றும் கயல்விழி செல்வராஜ் , சண்முகையா எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.