என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவிலில் ஒண்டிவீரன் நினைவு தின நிகழ்ச்சி-எம்.எல்.ஏ.க்கள் ராஜா, பரந்தாமன் பங்கேற்பு
- எழும்பூர் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளருமான பரந்தாமன், ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் ஒண்டிவீரன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 252-வது நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. எழும்பூர் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளருமான பரந்தாமன் மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஒண்டிவீரன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கர பாண்டியன், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகரச் செயலாளர் பிரகாஷ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் அழகுதுரை, துணை அமைப்பாளர் விஜயபாண்டியன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் முருகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்தி, நகர துணைச் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் அப்துல் காதர் மற்றும் காவல் கிளி, ஜலால், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






