search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road blockade"

    • ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் மருத்துவமனையில ஆய்வு செய்தனர்.
    • ஒரு தரப்பு மாணவர்கள் கல்லூரிக்கு சீல் வைத்ததை கண்டித்து இன்று காலை வெள்ளகோவிலில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள ஓலப்பாளையத்தில் செல்வநாயகி மெடிக்கல் இன்ஸ்டியூட் ஆப் எலக்ட்ரோபதி மருத்துவ மனை உள்ளது. வெள்ள கோவில் அருகே உள்ள தாசவநாயக்கன்பட்டியை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு முதல் இந்த மருத்துவமனையை நடத்தி வந்துள்ளார்.

    இந்த மருத்துவமனைக்கு முறையான அரசு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இங்கு மாணவர்களுக்கு மருத்துவ படிப்பும் கற்று கொடுத்து வந்துள்ளார். 44 மாணவ- மாணவிகள் தங்கி படித்து வந்துள்ளனர்.

    இந்தநிலையில் இங்கு போதிய மருத்துவ படிப்பு கற்று கொடுக்கவில்லை என மாணவர்கள் தங்கள் பெற்றோர் மூலமாக திருப்பூர் மாவட்ட கலெ க்டரிடமும், மருத்துவத்துறை இயக்குனரிடமும் புகார் அளித்தனர். இதையடுத்து திருப்பூர் கலெக்டர் உத்தரவின் பேரில் மருத்துவ ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் கனகராணி மற்றும் வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் மருத்துவமனையில ஆய்வு செய்தனர்.

    இதில் உரிய அங்கீகாரம் இன்றி இந்த மருத்துவ மனையை நடத்திக்கொண்டு கல்லூரி என்ற பெயரில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்கியும் முறையான மருத்துவ படிப்பு படிக்காமல் பாலசுப்பிரமணியம் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த மருத்துவ மனைக்கு சீல் வைத்தனர்.

    இந்தநிலையில் ஒரு தரப்பு மாணவர்கள் கல்லூரிக்கு சீல் வைத்ததை கண்டித்து இன்று காலை வெள்ளகோவிலில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கல்லூரியை மூடினால் எங்களது படிப்பு பாதிக்கப்படும்.எனவே கல்லூரியை திறக்க வேண்டும் என்றனர். 

    • ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு பா.ஜனதா கட்சியினர் ‘திடீர்’ சாலை மறியல் நடத்தினர்.
    • சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவரை வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்ய நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா தலைவராக தரணி முருகேசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றதில் இருந்து மாவட்டத்தில் பா.ஜன தாவை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் பா.ஜ.க. தலைவராக இருந்த கதிரவன் தூண்டுதலின் பேரில் சென்னை கூலிப்படையை சேர்ந்த 2 பேர் தரணி முருகேசனை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் கூலிப்படையினர் தாக்கியதில் தரணி முரு கேசன் மேலாளர் கணேசன் என்பவர் படுகாய மடைந்தார். அவர் ராமநாத புரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று அவரை ஆஸ்பத்திரி நிர்வாகம் வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்ய நடவ டிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில் தன்னை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதுபற்றி அறிந்த பா.ஜ.க.வினர் தரணி முருகேசன் தலைமையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் கேணிக்கரை இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர்கள் இது தொடர்பாக உரிய நடடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தை கைவிடுங் கள் என்று கேட்டுக்கொண்ட னர். இதைத்தொடர்ந்து பா.ஜ.க.வினர் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்தநிலையில் முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து டீனை மிரட்டியதால் அவர் கணேசனை டிஸ்சார்ஜ் செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    • தனியார் ஒப்பந்ததாரர் தூய்மை பணியாளர்களுக்கு சரியாக ஊதியம் வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
    • நகராட்சி கமிஷனர் ஹரிஹரன், சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில் நகராட்சி தூய்மை பணியாளர்களும், ஒப்பந்த அடிப்படையிலான தூய்மை பணியாளர்களும் சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சாலை மறியல்

    இந்நிலையில் நகராட்சி சுகாதார அதிகாரிகள் தூய்மை பணியாளர்களிடம் குப்பைக் கிடங்கில் குப்பைகளை கொட்டக்கூடாது, குப்பைகளை பெறும் பகுதிகளிலேயே குப்பையை அழித்துவிட வேண்டும், மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து கொண்டு வர வேண்டும் என நிர்பந்தம் செய்ததாக கூறப்படு கிறது.

    இதனிடையே தனியார் ஒப்பந்ததாரர் தூய்மை பணியாளர்களுக்கு சரியாக ஊதியம் வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்கள் தூய்மை பணிகளை புறக்கணித்து விட்டு நகராட்சி அலுவலகம் முன்பு திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    போலீசார் பேச்சுவார்த்தை

    தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் அவர்க ளிடம் பேச்சு வார்த்தை நடத்தி னர். இதன் பின்னர் அவர்கள் சாலை மறியலை கைவிட்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இதைத் தொடர்ந்து நகராட்சி கமிஷனர் ஹரிஹரன், சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் தூய்மை பணி யாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது தூய்மை பணியாளர்கள் அதிகாரிகள் கெடுபிடி செய்வது, கூலி உயர்வு வழங்காதது, பணி பாதுகாப்பு வழங்குவது குறித்து கேள்வி எழுப்பினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இன்று காலையில் நகரில் தூ ய்மைப்ப ணிகள் மேற்கொள்ள ப்படாததால் பல இடங்களில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கிறது.

    • கோயில்களில் குண்டம் திருவிழா நடைபெற்றதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு செல்ல குவிந்தனர்.
    • சிறப்பு பேருந்துகளாக போக்குவரத்து அதிகாரிகள் மாற்றி அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. நள்ளிரவு நேரங்களில் பயணிகள் மிக குறைந்த அளவே இருப்பதால் பஸ் இயக்குவது நிறுத்தப்படு கிறது. வார நாட்களில் கூட்டம் இல்லாத நிலையில் வார இறுதி நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் முயல்வதால் அனைத்து பஸ்களும் நிரம்பியே செல்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு செல்ல ஏராளமா னோர் திருப்பூர் கோவில் வழி பஸ் நிலையத்தில் குவிந்தனர். போக்குவரத்து அதிகாரிகள் தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் பயணிகள் வந்ததால் சிறப்பு பஸ்கள் இயக்கிவந்தனர். இந்தநிலையில் நேற்று சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன்கோவில், மேட்டுப்பாளையம் வனப த்ரகாளியம்மன் கோவில், பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோயி ல்களில் குண்டம் திருவிழா நடைபெற்றதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு செல்ல குவிந்தனர். திருப்பூர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களை கோவிலுக்கு சிறப்பு பேரு ந்துகளாக போக்குவரத்து அதிகாரிகள் மாற்றி அனுப்பி வைத்தனர். இதனால் பஸ் பற்றாக்குறை ஏற்பட்டு கோவில்வழி பஸ் நிலையத்தில் தென் மா வட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு பஸ் இல்லாமல் காத்திரு க்கும் நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்ட னர். தகவல் அறிந்த நல்லூர் போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    பஸ் வசதி செய்து கொடுப்பதாக தெரிவித்தனர். இதனை யடுத்து 1 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் கலைந்து தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். தென் மாவட்டங்களுக்கு முக்கியமான நாட்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என ெதன் மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராகுல் காந்தி எம்.பி.க்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
    • கயத்தாறு - மதுரை மெயின் ரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கயத்தாறு:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனையடுத்து அவரின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதனை கண்டித்து, கயத்தாறில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணை தலைவர் வக்கீல் அய்யலுச்சாமி தலைமையில் கயத்தாறு - மதுரை மெயின் ரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணை செயலாளரும், பன்னீர்குளம் பஞ்சாயத்து தலைவருமான பொன்னுச்சாமிபாண்டியன், கயத்தாறு ஒன்றிய தலைவர் செல்லத்துரை, எஸ்.சி. எஸ்.டி. பிரிவு நகர செயலாளர் ஏசுதாஸ் மற்றும் நிர்வாகிகள் பொன்னையா, சங்கரன், முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல் அய்யலுச்சாமி உள்ளிட்ட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • சாலைமறியல் போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • சாலைமறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    பூந்தமல்லி:

    பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் லயன் டி.ரமேஷ் தலைமையில் செங்குன்றம் பஸ் நிலையம் அருகே காங்கிரசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வி. அருணாச்சலம் , ஆர்.சாந்தகுமார், விக்டரி.எம்.மோகன், சங்கீதாபாபு, புழல் குபேந்திரன், கோபி, அலிம்புகாரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற போராட்டத்தில் நிர்வாகிகள் என்.வெங்கடேசன், ஏ.பி.சங்கர், எம்.சந்திரசேகரன், ஏ.நித்யானந்தம், கே.வி.ராஜன், எஸ்.பாபு, மணிகண்டன், ஜெ.ஜோஷிபிரேம்ஆனந்த், ஆர்.மதுசூதனராவ், ஆர்.ராமலு, டி.சிவசங்கர், ஏ.அமீத்பாபு , ஜெ.வி.எஸ்.மணிகண்டன் , கே.ஆர்.அன்பழகன், பி.அபிஷேக், எஸ்.கிரிதர், மாத்தூர் ரங்கநாயகி, ஜி.அச்சுதன், டி.ஜெயக்குமார், ஏ.ஆசீர்வாதம், ஜெ.மாரி, எஸ்.பி.நந்தன், எஸ் .கே.நவாஸ், பி.தேவேந்திரன், பி.சிவக்குமார், ஆர்.கலையரசன், ஜி.வேல்முருகன், க.தீனாள், விக்ரம்,மதன், ஆர்.ஆர்.சி.ராஜீவ்காந்தி, எச்.இஃபால்பாஷா, எஸ்.கே.வரதராஜன், ரஜினி, ஐசக், உமர், பயாஸ், இளங்கோ, அன்புக்கரசன், பிராகாஷ், வைத்தீஸ்வரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சாலைமறியல் போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    • திருபுவனையில் இயங்கி வருகிற கூட்டுறவு நூற்பாலை கடந்த 10 மாதங்களாக இயங்காமல் மூடி கிடக்கின்றது.
    • தொழிற்சங்கத்தை சேர்ந்த முருகன் வீராசாமி துரை லிங்கம் மஞ்சினி எல்லப்பன் பூபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை கூட்டுறவு நூற்பாலை ஊழியர்கள் 3 பேர் மன உளைச்சலில் இறந்து போனவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்க கோரியும், திருபுவனையில் இயங்கி வருகிற கூட்டுறவு நூற்பாலை கடந்த 10 மாதங்களாக இயங்காமல் மூடி கிடக்கின்றது.

    இந்நிலையில், அதில் பணிபுரியும் ஊழியர்கள் அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்கள் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆலை வாசலில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொழிற்சங்கத்தை சேர்ந்த முருகன் வீராசாமி துரை லிங்கம் மஞ்சினி எல்லப்பன் பூபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனைத் தொடர்ந்து அதிகாரியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர் அப்பொழுது போலீஸ்சாருக்கும் தொழிலாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உருவ பொம்மையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் புதுவை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    தொழிலாளர்களின் கோரிக்கையை அரசிற்கு தெரியப்படுத்துகிறோம் என்று வாக்குறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

    தொழிற்சங்கத்தின் தலைவர் சிவசங்கரன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

    • திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட களமருதூர் காலனி பெரியார் நகரில் பல மாதங்களாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு சரிசெய்யாததால்கு டிதண்ணீர் அந்தப் பகுதிக்கு செல்லாமல் மக்கள் அப் பகுதிகளில் உள்ள விவசாய மோட்டாருக்கு சென்று பிடித்து வந்தனர்.
    • எந்த விதமான நடவடிக்கையும் இல்லா ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று கூடி சாமறியலில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    உளுந்தூர் பேட்ைட அருேக குடிநீர் ேகட்டு ெபாதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.   கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட களமருதூர் காலனி பெரியார் நகரில் பல மாதங்களாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு சரிசெய்யாததால்கு டிதண்ணீர் அந்தப் பகுதிக்கு செல்லாமல் மக்கள் அப் பகுதிகளில் உள்ள விவசாய மோட்டாருக்கு சென்று பிடித்து வந்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவருக்கும் தகவல் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லா ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். மறியல் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பூதலூர் அருகே உளள வளம்பகுடியில் 14-ந்தேதி நடக்க இருந்த சாலை மறியல் ரத்து செய்யப்பட்டது.
    • உசிலம்பட்டி சிமென்ட் சாலை வரும் நிதியாண்டில் செய்து தரப்படும்.

    பூதலூர்:

    பூதலூர் தாலூகா செங்கிப்பட்டி சரகம், மனையேறிப்பட்டி அதனை சுற்றியுள்ள கிராமங்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரும் 14ம்தேதி தஞ்சை-திருச்சி சாலை வளம்பகுடியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் பொருட்டு அமைதி பேச்சுவார்த்தை பூதலூர் தாலூகா அலுவலகத்தில் பூதலூர் தாசில்தார் பெர்ஷியா தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் வருவாய் துறை, கல்வித்துறை, ஊரக வளர்ச்சி துறை, குடிநீர் வடிகால் வாரியம், போக்குவரத்து துறை, காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன்,

    மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்செல்லி, பூதலூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பாஸ்கர் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கீழ்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

    உசிலம்பட்டி கிராமத்தில் மூடப்பட்ட தொடக்கப்பள்ளியை பள்ளியை திறப்பது தொடர்பாக எதிர்வரும் 15.03.23 பதிலலிக்கப்படும்.

    துருசுப்பட்டி செல்லும் கட்டனை கால்வாய் சாலையை அமைத்துதருவது தொடர்பாக நெடுஞ்சாலை துறைக்கு முன்மொழிவுகள் அனுப்பபட்டுள்ளது.

    நியாய விலை அங்காடி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அமைத்துத்தரப்படும். தற்போது இயங்கி வரும் ஏ26 எண் கொண்ட பேருந்தை கிள்ளுக்கோட்டை வரை இயக்கிட வழி செய்யப்படும்.

    உசிலம்பட்டி சிமென்ட் சாலை வரும் நிதியாண்டில் செய்து தரப்படும்.உசிலம்பட்டி-துருசுப்பட்டி கிராமங்களுக்கு தற்போது நான்கு இணைப்பாக இருப்பதை ஒரு இணைப்பாக மாற்றி உசிலம்பட்டி ஊராட்சிக்கு குடிநீர் வர வழிவகை செய்யவழிசெய்யப்படும். வளம்பகுடியில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

    உசிலம்பட்டி கிராம பள்ளி மாணவர்கள் இழப்பீடு குறித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.என்று தெரிவித்ததை ஏற்று வரும் 14-ந்தேதி நடந்த இருந்த சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது.

    • அண்ணாதுரை (44) அ.தி.மு.க.பிரமுகர். இவர், டீக்கடை நடத்தி வந்தார் .இவரது டீக்கடையை காலி செய்ய கோரி நோட்டீஸ் வந்ததாக கூறப்படுகிறது.இதனால் விரக்தி அடைந்த அண்ணாதுரை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • அண்ணாதுரை உறவினர்கள், அவரது உடலுடன் பண்ருட்டி- சிதத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே அ.தி.மு.க. பிரமுகர் தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எஸ்.ஏரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை (44) அ.தி.மு.க.பிரமுகர். இவர், அதே பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார்.இவரது டீக்கடையை காலி செய்ய கோரி நோட்டீஸ் வந்ததாக கூறப்படுகிறது.இதனால் விரக்தி அடைந்த அண்ணாதுரை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்குமனைவி 2 மகள்கள் உள்ளனர். இதனால் அண்ணாதுரை உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அண்ணாதுரை உடலுடன்பண்ருட்டி- சிதத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது..இது பற்றிதகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுசாலை மறியலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

    ஊட்டி 

    ஊட்டி அருகே மைனலா அரக்காடு சந்திப்பு பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக முறையாக குடிநீா் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து கேத்தி பேரூராட்சி நிா்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள், ஊட்டியிலிருந்து கோவை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கேத்தி போலீசார், பேரூராட்சி அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில், முறையாக குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • நெல்லை டவுன் ஆர்ச் அருகே மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் வளாகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் போஸ் மார்க்கெட் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கிய போது அங்கிருந்த கடைகளை 3 இடங்களில் தற்காலிகமாக மாற்றினர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் ஆர்ச் அருகே மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் வளாகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    கடைகள்

    இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் போஸ் மார்க்கெட் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கிய போது அங்கிருந்த கடைகளை 3 இடங்களில் தற்காலிகமாக மாற்றினர். அதன் ஒரு பகுதியாக சில கடைகள் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே செயல்பட தொடங்கியது.

    பள்ளி கட்டிடத்தை சுற்றி காம்பவுண்டு கட்டப்படாத நிலையில், கடைகளுக்கு இரவு நேரங்களிலும் ஆட்கள் வந்து சென்றனர்.

    இந்த கடைகளால் பள்ளி மாணவர்கள் விளை யாடுவதற்கும் இடம் இல்லாமல் போனதாக கூறப்படுகிறது.

    மாணவர்கள் புகார்

    இந்நிலையில் கடை களுக்கு இரவு நேரங்களில் வருபவர்களில் சிலர் மது அருந்தி விட்டு பாட்டில்களை பள்ளி வளாக பகுதிகளில் வீசி செல்வதாகவும், அது மாணவர்களின் கால்களில் குத்தி காயப்படுத்து வதாகவும் மாணவர்கள் புகார் கூறினர். எனவே பள்ளி கட்டி டத்தை சுற்றி காம்பவுண்டு அமைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    இந்நிலையில் கோரிக்கை களை வலியுறுத்தி எஸ்.என்.ஹைரோட்டில் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார் விரைந்து சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளை விளக்கி கூறினர். உடனடியாக இதுபற்றி மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம், போலீஸ் துணைகமிஷனர் சரவணகுமார் பேசினார்.

    இதைத்தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில் அதிகாரி லெனின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி னார். அப்போது பள்ளி கட்டி டத்தை சுற்றி தகரத்தால் அடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து மாண வர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்

    ×