search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிதண்ணீர்"

    • விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலக்குலத் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • அந்த பகுதி மக்கள் தண்ணீர் எடுப்பதற்கு வெகு தூரம் சென்று எடுத்துவரும் சூழல் உள்ளது.

    கடலூர்:

    குடிதண்ணீர் மற்றும் சாலை வசதி அமைத்து தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு அளித்து ஆர்ப்பாட்டம். விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலக்குலத் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால் அந்த பகுதியில், குடிநீர் வசதிக்காக குடிநீர் குழாய் மற்றும் நீர்த்தேக்க தொட்டி ஆகியவை அமைக்கப்படவில்லை.   இதனால் அந்த பகுதி மக்கள் தண்ணீர் எடுப்பதற்கு வெகு தூரம் சென்று எடுத்துவரும் சூழல் உள்ளது.   இது குறித்து கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், ஊராட்சி மன்ற தலைவரிடத்திலும் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

    இந்நிலையில் தங்கள் பகுதிக்கு புதிய நீர்தேக்க தொட்டி மற்றும் சாலை வசதி அமைத்து தர கோரி விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு கம்மாபுரத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர் ஆ  ர்ப்பாட்டத்திற்கு பின் விருத்தாசலம் சார் ஆட்சியர் (பொறுப்பு) லூர்து சாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட சார் ஆட்சியர் மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் வசதி அளிக்கப்படும் என உறுதி அளித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த அசோகன், கலைச்செல்வன், நெல்சன், செந்தில், சின்னதம்பி, சத்யா, கவிதா உள்ளிட்ட கம்மாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட களமருதூர் காலனி பெரியார் நகரில் பல மாதங்களாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு சரிசெய்யாததால்கு டிதண்ணீர் அந்தப் பகுதிக்கு செல்லாமல் மக்கள் அப் பகுதிகளில் உள்ள விவசாய மோட்டாருக்கு சென்று பிடித்து வந்தனர்.
    • எந்த விதமான நடவடிக்கையும் இல்லா ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று கூடி சாமறியலில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    உளுந்தூர் பேட்ைட அருேக குடிநீர் ேகட்டு ெபாதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.   கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட களமருதூர் காலனி பெரியார் நகரில் பல மாதங்களாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு சரிசெய்யாததால்கு டிதண்ணீர் அந்தப் பகுதிக்கு செல்லாமல் மக்கள் அப் பகுதிகளில் உள்ள விவசாய மோட்டாருக்கு சென்று பிடித்து வந்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவருக்கும் தகவல் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லா ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். மறியல் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×