என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊட்டி அருகே பொதுமக்கள் சாலை மறியல்
- 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
- குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா்.
ஊட்டி
ஊட்டி அருகே மைனலா அரக்காடு சந்திப்பு பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக முறையாக குடிநீா் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து கேத்தி பேரூராட்சி நிா்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள், ஊட்டியிலிருந்து கோவை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கேத்தி போலீசார், பேரூராட்சி அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில், முறையாக குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story