search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road blockade"

    • கூட்டுக் குடிநீர் திட்டங்கள் வாயிலாக நாள்தோறும் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.
    • கிராமங்களில் தற்போது உள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு குடிநீர் வழங்கப்படுவதில்லை.

    உடுமலை:

    உடுமலை சுற்றுப்புற கிராமங்களுக்கு திருமூர்த்தி அணையின் மூலம் செயல்படுத்தப்படுகின்ற கூட்டுக் குடிநீர் திட்டங்கள் வாயிலாக நாள்தோறும் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் குடிநீர் திட்டத்தில் நிலவுகின்ற பல்வேறு குளறுபடிகள் காரணமாக கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

    இதனால் ஆவேசம் அடையும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது.அந்த வகையில் நேற்று ஆர். வேலூர் ஊராட்சியில் பூலாங்கிணறு குடிநீர் திட்டத்திற்கு வால்வு பொருத்துவதற்கு அதிகாரிகள் வருகை தந்தனர். ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் வால்வு பொருத்தக் கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சீரான முறையில் குடிநீர் வழங்குமாறும் தெரிவித்தனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,

    கிராமங்களில் தற்போது உள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு குடிநீர் வழங்கப்படுவதில்லை. பழைய பட்டியலில் உள்ள எண்ணிக்கைக்கு தகுந்தவாறு குடிநீர் வழங்குகிறார்கள்.அது மட்டுமின்றி குடிநீர் குழாயில் பொருத்தப்பட்டுள்ள பழைய வால்வை அகற்றிவிட்டு அளவு சிறியதாக உள்ள வால்வை பொருத்துகிறார்கள்.

    இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள் என்று தெரிவித்தனர்.

    • குறுவைப் பயிர் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
    • போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு பகுதியில் கருகும் குறுவைப் பயிர் சாகுபடியை காப்பாற்ற உடனடியாக கூடுதலாக முறையில்லாமல் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி ஆலங்குடி கடைத்தெருவில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    வாட்டாக்குடி ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் நீலமேகம் தலைமை வகித்தார்.

    போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மதியழகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. 

    • நேற்று பா.ம.க. சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
    • போலீசார் சாலை மறியல் போராட்டம் நடத்தியவர்களை அப்புறப்படுத்தினர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் விலை நிலங்களில் நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்தின் சார்பில் கால்வாய் அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டனர் இதனால் நெய்வேலி என்.எல்.சி.நிர்வாகத்தினை கண்டித்து நேற்று பா.ம.க. சார்பில் முற்றுகை போ ராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மரக்காணம் நகர பா.ம.க .சார்பில் விவசாயிகளுக்காக போராட்டம் நடத்திய அன்புமணியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி மரக்காணம்கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று மாலை சாலை மறியல் போராட்டம் நடத்தினர் .இதனைப் பார்த்த மரக்காணம் போலீசார் சாலை மறியல் போராட்டம் நடத்தியவர்களை அப்புறப்படுத்தினர். இந்நிலையில் மரக்காணத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நகர செயலாளர் ரமேஷ் ,முன்னாள் நகர செயலாளர் திருநாவுக்கரசு ,கர்ணன், மணிகண்டன், விநாயகமூர்த்தி உள்பட 25 பேர்கள் மீது மரக்காணம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • போக்குவரத்து பாதிப்பு
    • காட்டேரிக்குப்பம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே காட்டேரிக்குப்பத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் 100 நாள் வேலை திட்டப் பணிக்காக லிங்கா ரெட்டிப் பாளையம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் பொது மக்கள் இன்று காலை வேலைக்கு சென்றனர்.

    அப்போது அங்கு வந்த காட்டேரிக்குப்பம் கிராம பொதுமக்கள் எங்கள் ஊர் ஏரியில் நீங்கள் எப்படி வந்து வேலை செய்யலாம் என கேட்டு அவர்களை வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பின ருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து காட்டேரிக்குப்பம் கிராம மக்கள் அங்குள்ள கடை வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த காட்டேரிக்குப்பம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    இதனால் சுமார் ½ மணி நேரத்துக்கும் மேலாக காட்டேரிக்குப்பத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • 3 ஆயிரத்து 700 குவிண்டால் பருத்தியை விவசாயிகள் ஏலத்திற்காக கொண்டு வந்திருந்தனர்.
    • 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே உள்ள கொட்டையூர் பகுதியில் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது.

    இந்த விற்பனை கூடத்தில் கடந்த சில வாரங்களாக பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.

    இதில் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பருத்தி விவசாயிகள் தங்களது பருத்தியை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    விவசாயிகள் கொண்டு வரும் பருத்தியை வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

    இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான பருத்தி விலை குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரத்து 80-ம், அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 380-ம் மத்திய அரசு நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது.

    ஆனால் கடந்த 3 வாரங்களாக கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்று வரும் பருத்தி ஏலத்தில் கலந்து கொள்ளும் வெளியூர் வியாபாரிகள் மத்திய அரசின் விலையை விட குறைந்த விலைக்கு பருத்தியை ஏலம் எடுத்து வருகின்றனர்.

    கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பருத்தி 30 முதல் 40 சதவீதம் விலை குறைத்து ஏலம் போவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 700 குவிண்டால் பருத்தியை விவசாயிகள் ஏலத்திற்காக கொண்டு வந்திருந்தனர்.

    இந்த ஏலத்தில் குறைந்த அளவிலான பருத்தி வியாபாரிகள் மட்டுமே கலந்து கொண்டு பருத்தி கிலோ ஒன்றிற்கு குறைந்தபட்சம் ரூ 59-ம், அதிகபட்சம் ரூ.66 வரை ஏலம் எடுத்தனர்.

    பருத்திக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததை கண்டித்தும், பருத்திக்கு கட்டுப்படியான விலையை மத்திய,மாநில அரசுகள் நிர்ணயம் செய்யக் கோரி கும்பகோணம் - திருவையாறு சாலையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • சாலை மறியலில் அய்யப்பன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பஸ் நிலையத்திற்கு மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் என 4 மாவட்டங்களில் இருந்து பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த 4 மாவட்டங்களை இணைக்கும் மையப்பகுதி யாக உசிலம்பட்டி பஸ் நிலையம் உள்ளது.

    1996-ம் ஆண்டு கட்டப்பட்ட பஸ் நிலையம் சிதிலமடைந்தது. இதைத் தொடர்ந்து சுமார் ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைப்பு மற்றும் விரிவாக்க பணி களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

    பயணிகள் வசதிக்காக அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு 2 தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. புனரமைப்பு மற்றும் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக பஸ் நிலையத்தில் உள்ள கட்டிடங்களை நகராட்சி சார்பில் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன் அறிவிப்பின்றி பஸ் நிலையத்தை மூடியுள்ளதாக குற்றம் சாட்டி பஸ் நிலைய வளாக கடை வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து வந்த அய்யப்பன் எம்.எல்.ஏ., வியாபாரிகளுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்டார். உசிலம்பட்டி போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் எம்.எல்.ஏ., வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து தடுப்புகளை நகராட்சி நிர்வாகம் அகற்றியது. கால அவகாசம் அளிக்கப்பட்டு அனைத்து துறைகளின் அனுமதி பெற்ற பின்னர் பணிகள் தொடங்கும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மதியழகன் தனது விசைப்படகை நடுக்கடலி லேயே நங்கூரமிட்டு நிறுத்தி விட்டு கரைக்கு வந்துள்ளார்.
    • முன்விரோதம் காரணமாக யாரேனும் விசைப்படகிற்கு தீவைத்து விட்டனரா கோணத்தில் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அனுமந்தை மீனவ குப்பம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 56). இவர் நேற்று வழக்கம் போல் மீன் பிடித்து விட்டு தனது விசைப்படகை நடுக்கடலி லேயே நங்கூரமிட்டு நிறுத்தி விட்டு கரைக்கு வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் இவரது விசைப்படகு மர்மமான முறையில் தீப்பற்றி எரிவதாக அப்பகுதி பொதுமக்கள் மதியழகனுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மதியழகன் மற்றும் அப்பகுதி மீனவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து தங்களது சிறிய படகு மூலம் அங்கு செல்வதற்குள் விசைப்படகு முற்றிலும் எரிந்து நாசமாயியது. இந்த தீ விபத்தினால் 30 லட்சம் மதிப்பிலான விசைப்படகு மற்றும் வலை உள்ளிட்ட மீன் பிடி சாதனங்கள் எரிந்து சேதமானது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் மீன்வளத்துறை அதிகாரிகள் கடலோர காவல் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று முன்விரோதம் காரணமாக யாரேனும் விசைப்படகிற்கு தீவைத்து விட்டனரா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணையை நடத்தி வருகின்றனர். மேலும் தி.மு.க. விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் நேரில் சென்று மதியழகனை சந்தித்து ஆறுதல் கூறினார். இதனையடுத்து விசைபடகு மர்மமான முறையில் எரிந்ததற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவர்கள் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் மரக்காணம் போலீசார் பேச்சுவார்த்ைத நடத்தி வருகின்றனர்.

    • வக்கீல்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி நெல்லை மாவட்ட வக்கீல் சங்கம் சார்பில் வக்கீல்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தொடர்ந்து அவர்கள் வக்கீல்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்தும், வக்கீல்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் கோஷம் எழுப்பினர்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரை சேர்ந்தவர் வக்கீல் அசோக்ராஜ் மற்றும் அவரது பெரியப்பா துரைராஜ் ஆகியோர் நேற்று முன்தினம் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

    சாலை மறியல்

    இந்நிலையில் இந்த கொலையை கண்டித்தும், வக்கீல்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெறுவ தாகவும், வக்கீல்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி நெல்லை மாவட்ட வக்கீல் சங்கம் சார்பில் வக்கீல்கள் இன்று சாலை மறியல் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு நடை பெற்ற போராட் டத்திற்கு வக்கீல் சங்கத் தலைவர் ராஜேஷ்வரன் தலைமை தாங்கினார். செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தார்.

    கலந்து கொண்டவர்கள்

    மறியலில் துணைத் தலைவர் சீதா, வக்கீல்கள் மணிகண்டன், லெட்சு மணன் ரமேஷ், அருள்ராஜா, விஜயன், சுரேஷ், பால சுப்பிரமணியன், சிதம்பரம், மகேஷ், இசக்கிபாண்டி, அருள்பிரவின், சுதர்சன், மகாராஜன், முத்துராஜ், பிரசன்னா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அவர்கள் வக்கீல்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்தும், வக்கீல்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் கோஷம் எழுப்பி னர். போராட்டத்தால் பாளை- திருச்செந்தூர் சாலையில் சிறிது நேரம் ேபாக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • மீனவ பெண்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட தந்திராயன் குப்பத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் மீன்பிடித்து வந்து தங்களது படகுகளை தந்திராயன்குப்பம் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைப்பது வழக்கம். தந்திராயன்குப்பம் அருகே உள்ள மீனவ கிராமம் சின்னமுதலியார் சாவடி. இந்த கிராமத்திலும் அதிகமான மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இதனையடுத்து சின்னமுதலியார்பேட்டை சாவடியில் உள்ள மீனவர்கள் சில நாட்களாக தங்களது படகுகளை சின்னமுதலியார் சாவடி கடற்கரை ஓரமாக நிறுத்தாமல் தந்திராயன்குப்பம் கடற்கரை பகுதியில் நிறுத்தி வருகின்றனர். இதனால் தந்திராயன்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் தங்களது படகுகளை அவர்களது பகுதி கடற்கரை ஓரங்களில் நிறுத்த இடமில்லாமல் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் படகுகளை கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைப்பதில் மீனவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட வண்ணம் இருந்தது.

    இதனை கண்டித்து தந்திராயன்குப்பம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விழுப்புரம் மாவட்ட கலெக்டரிடமும், வானூர் தாசில்தாரிடமும் பலமுறை மனு அளித்தனர். ஆனால் இதுநாள் வரை அந்த மனுவிற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தந்திராயன்குப்பம் மீனவர்கள் ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை புதுச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோட்டக்குப்பம் மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்படைந்து வாகனங்கள் அனைத்தும் நீண்ட வரிசையில் நின்றது. இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சமீபகாலமாக தங்கள் பகுதி மீனவ கிராமத்திற்கு பக்கத்து மீனவ கிரமமான சின்னமுதலியார் சாவடி பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்களது படகுகளை அவர்கள் பகுதி கடற்கரையில் நிறுத்தாமல் எங்களது பகுதி கடற்கரை ஓரமாக நிறுத்துகின்றனர். இதனால் நாங்கள் எங்களது படகுகளை கடற்கரை ஓரமாக நிறுத்த இடமில்லாமல் தினந்தோறும் அல்லல்பட்டு வருகிறோம். இதனை சரிசெய்ய பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் அந்த மனுவிற்கு இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த பிரச்சனைக்கு அதிகாரிகளால் தீர்வு எடுக்க வேண்டும் என்றும், நாங்கள் அளித்த மனுவிற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி இந்த சாலை மறியலில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சாலை மறியலில் ஈடுபட்டபோது அங்கு இருந்த சில பெண்கள் மற்றும் ஆண்கள் தாங்கள் கொண்டு வந்த மண்ணெண்ணெய் கேனை கையில் எடுத்து அவர்கள் மீது ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முற்பட்டனர். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த (பெண்) போலீசார் அவர்களிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி அவர்களை மீட்டனர். இதனையடுத்து சம்பந்தபட்ட அதிகாரிகள் மூலம் இந்த பிரச்சினைக்கு உடனடியா தீர்வு எடுக்கப்படும் என போலீசார் கூறியதின்பேரில் மீனவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். ஆனால் அதிகாரிகள் எங்களிடம் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறி கலைந்து செல்லாமல் அங்கேயே கூட்டம் கூட்டமாக நின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பதட்டமாக உள்ளது. அங்கு எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாத வண்ணம் போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். படகுகளை கடற்கரை ஓரமாக நிறுத்துவதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மீனவ பெண்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • கடந்த 15 நாட்களாக விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை எடைபோட்டு கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது.
    • கூத்தக்குடி - கள்ளக்குறிச்சி சாலையில் நெல் மூட்டைகளை சாலையில் அடுக்கி மறியலில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 33 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்குகின்றன. இந்த நிலையங்கள் கடந்த 31-ந் தேதி முதல் மூடப்பட்டன. இதனால் கடந்த 15 நாட்களாக விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை எடைபோட்டு கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. இதற்கு உயரதிகாரிகளின் அனுமதி கிடைக்காததால் கொள்முதல் நடக்கவில்லை எனத் தெரிகிறது. இதில் தியாகதுருகம் அருகே கூத்தக்குடியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 15 நாட்களாக விவசாயி கள் மூட்டைகளில் கொண்டு வந்த நெல், கொள்முதல் செய்ய ப்படாமல் தேங்கி இருக்கிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள், கூத்தக்குடி - கள்ளக்குறிச்சி சாலையில் நெல் மூட்டைகளை சாலையில் அடுக்கி மறியலில் ஈடுபட்டனர். அங்கு விரைந்து சென்ற கள்ளக்குறிச்சி, வரஞ்சரம் போலீசார் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில், உயர் அதிகாரிகளிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், நெல்லை எடைபோட்டு விரைவில் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில் நெல்லை கொள்முதல் செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட கூத்தக்குடி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பழனியப்பன் (வயது 49), ராமதாஸ் (50), சுப்பிரமணி (62), ரவிச்சந்திரன் (54) மற்றும் 5 விவசாயிகள் மீது மீது வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நெல்லை கொள்முதல் செய்யக்கோரி மறியலில் ஈடுபட்ட விவசாயி கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது அப்பகுதி விவசாயிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 15 நாட்களாக விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை எடை போடவில்லை.
    • போலீசார் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி முதல் மே மாதம் 31- ந் தேதி வரை விவசாயிகளின் நெல் மூட்டைகள் எடை போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 15 நாட்களாக விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை எடை போடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 50- க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூத்தக்குடி கள்ளக்குறிச்சி சாலையில் கூத்தக்குடி பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், வரஞ்சரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன், தனிப்பிரிவு போலீசார் கொளஞ்சி ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தகவல் தெரிவித்து நெல் மூட்டைகளை எடை போட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,

    கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் உள்ள சுமார் 30 க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த 31- ந் தேதி மூடப்பட்டது. வியாபாரிகளின் நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் விவசாயிகளின் கைரேகையுடன் தற்போது பதிவு செய்யப்படுகிறது. அதன்படி விவசாயிகள் பலரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்து வருகின்றனர். ஆனால் நெல் கொள்முதல் நிலையத்தை திறப்பது குறித்து உயர் அதிகாரிகளின் உத்தரவுக்காக தாங்கள் காத்திருப்பதாகவும், உத்தரவு கிடைத்தவுடன் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளின் நெல் மூட்டைகள் எடை போடப்படும் என கூறினார்.

    • குற்றவாளிகளை கைது செய்ய கோரி தென்பாதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • பதட்டமான சூழல் நிலவுவதால் 200-க்கும் மேற்பட்ட போலீசார் சீர்காழியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதி மேட்டு தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகன் கனிவண்ணன் (வயது 30)சமையல் கலைஞர்.

    இவர் தற்சமயம் சீர்காழி நகரில் உள்ள தனியார் உணவகத்தில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு தென்பாதி உப்பனாற்றங்கரையில் ரத்த வெள்ளத்தில் கனிவண்ணன் இறந்து கிடந்தார்.

    இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கனிவண்ணன் இறந்த தகவலை அறிந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு அழுதப்படி விரைந்து வந்தனர்.

    குற்றவாளிகளை கைது செய்ய கோரி தென்பாதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் சீர்காழி- மயிலாடுதுறை தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஜவகர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    அதனை ஏற்று அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

    தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவுவதால் சீர்காழியில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதனிடையே இறந்த கணிவண்ணனின் தலையின் நெத்தி பொட்டில் இருபுறமும் இருக்கும் காயத்தை பார்க்கும் போது கூர்மையான உளுக்கி போன்ற ஆயுதத்தால் குத்தப்பட்டாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இறப்பின் தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக உடலை தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்த சீர்காழி அரசு மருத்துவ மனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கனிவண்ணன் உடல் எடுத்து செல்ல ப்பட்டது.

    குற்றவாளிக ளை பிடிக்க ஏ .டி .எஸ். பி சுகுமாரன் தலைமையில் 5 டிஎஸ்.பி. கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    பதட்டமான சூழல் நிலவுவதால் 200க்கும் மேற்பட்ட போலீசார் சீர்காழியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ×