search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "barge burning"

    • மதியழகன் தனது விசைப்படகை நடுக்கடலி லேயே நங்கூரமிட்டு நிறுத்தி விட்டு கரைக்கு வந்துள்ளார்.
    • முன்விரோதம் காரணமாக யாரேனும் விசைப்படகிற்கு தீவைத்து விட்டனரா கோணத்தில் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அனுமந்தை மீனவ குப்பம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 56). இவர் நேற்று வழக்கம் போல் மீன் பிடித்து விட்டு தனது விசைப்படகை நடுக்கடலி லேயே நங்கூரமிட்டு நிறுத்தி விட்டு கரைக்கு வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் இவரது விசைப்படகு மர்மமான முறையில் தீப்பற்றி எரிவதாக அப்பகுதி பொதுமக்கள் மதியழகனுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மதியழகன் மற்றும் அப்பகுதி மீனவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து தங்களது சிறிய படகு மூலம் அங்கு செல்வதற்குள் விசைப்படகு முற்றிலும் எரிந்து நாசமாயியது. இந்த தீ விபத்தினால் 30 லட்சம் மதிப்பிலான விசைப்படகு மற்றும் வலை உள்ளிட்ட மீன் பிடி சாதனங்கள் எரிந்து சேதமானது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் மீன்வளத்துறை அதிகாரிகள் கடலோர காவல் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று முன்விரோதம் காரணமாக யாரேனும் விசைப்படகிற்கு தீவைத்து விட்டனரா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணையை நடத்தி வருகின்றனர். மேலும் தி.மு.க. விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் நேரில் சென்று மதியழகனை சந்தித்து ஆறுதல் கூறினார். இதனையடுத்து விசைபடகு மர்மமான முறையில் எரிந்ததற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவர்கள் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் மரக்காணம் போலீசார் பேச்சுவார்த்ைத நடத்தி வருகின்றனர்.

    ×