search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் கொள்முதல் செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 9 விவசாயிகள் மீது வழக்கு: தியாகதுருகம் அருகே பரபரப்பு
    X

    நெல் கொள்முதல் செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 9 விவசாயிகள் மீது வழக்கு: தியாகதுருகம் அருகே பரபரப்பு

    • கடந்த 15 நாட்களாக விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை எடைபோட்டு கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது.
    • கூத்தக்குடி - கள்ளக்குறிச்சி சாலையில் நெல் மூட்டைகளை சாலையில் அடுக்கி மறியலில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 33 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்குகின்றன. இந்த நிலையங்கள் கடந்த 31-ந் தேதி முதல் மூடப்பட்டன. இதனால் கடந்த 15 நாட்களாக விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை எடைபோட்டு கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. இதற்கு உயரதிகாரிகளின் அனுமதி கிடைக்காததால் கொள்முதல் நடக்கவில்லை எனத் தெரிகிறது. இதில் தியாகதுருகம் அருகே கூத்தக்குடியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 15 நாட்களாக விவசாயி கள் மூட்டைகளில் கொண்டு வந்த நெல், கொள்முதல் செய்ய ப்படாமல் தேங்கி இருக்கிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள், கூத்தக்குடி - கள்ளக்குறிச்சி சாலையில் நெல் மூட்டைகளை சாலையில் அடுக்கி மறியலில் ஈடுபட்டனர். அங்கு விரைந்து சென்ற கள்ளக்குறிச்சி, வரஞ்சரம் போலீசார் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில், உயர் அதிகாரிகளிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், நெல்லை எடைபோட்டு விரைவில் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில் நெல்லை கொள்முதல் செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட கூத்தக்குடி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பழனியப்பன் (வயது 49), ராமதாஸ் (50), சுப்பிரமணி (62), ரவிச்சந்திரன் (54) மற்றும் 5 விவசாயிகள் மீது மீது வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நெல்லை கொள்முதல் செய்யக்கோரி மறியலில் ஈடுபட்ட விவசாயி கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது அப்பகுதி விவசாயிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×