என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கேட்டு விவசாயிகள் சாலை மறியல்
    X

    தண்ணீர் கேட்டு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

    குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கேட்டு விவசாயிகள் சாலை மறியல்

    • குறுவைப் பயிர் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
    • போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு பகுதியில் கருகும் குறுவைப் பயிர் சாகுபடியை காப்பாற்ற உடனடியாக கூடுதலாக முறையில்லாமல் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி ஆலங்குடி கடைத்தெருவில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    வாட்டாக்குடி ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் நீலமேகம் தலைமை வகித்தார்.

    போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மதியழகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    Next Story
    ×