என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    திருக்கனூர் அருகே பெண்கள் சாலை மறியல்
    X

    சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.

    திருக்கனூர் அருகே பெண்கள் சாலை மறியல்

    • போக்குவரத்து பாதிப்பு
    • காட்டேரிக்குப்பம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே காட்டேரிக்குப்பத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் 100 நாள் வேலை திட்டப் பணிக்காக லிங்கா ரெட்டிப் பாளையம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் பொது மக்கள் இன்று காலை வேலைக்கு சென்றனர்.

    அப்போது அங்கு வந்த காட்டேரிக்குப்பம் கிராம பொதுமக்கள் எங்கள் ஊர் ஏரியில் நீங்கள் எப்படி வந்து வேலை செய்யலாம் என கேட்டு அவர்களை வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பின ருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து காட்டேரிக்குப்பம் கிராம மக்கள் அங்குள்ள கடை வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த காட்டேரிக்குப்பம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    இதனால் சுமார் ½ மணி நேரத்துக்கும் மேலாக காட்டேரிக்குப்பத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×